கவிஞர் அறிமுகம்: நான் எழுதுவதை ஒரு மனநிம்மதிக்காக செய்து கொண்டிருக்கும் ஒரு மென்பொருள் பொறியாளன். "தேனு" என்கிற பெயரின் கீழ் எனது வலைப்பூவினில் எழுதி வருகிறேன். என்னுடைய சிற்சில கவிதைகள் "கீற்று", "திண்ணை", "இளமை விகடன்", "கூடல்" இணைய தளங்களில் பிரசுரிக்கப் பட்டுள்ளன.
மூன்றிலக்க காவியங்கள்:
இருண்ட புள்ளிக்குள்
தன்னை மறந்து
இரவுக்குண்டான கூடலில்
பகலவனும் லயித்திருந்த
மூன்றிலக்க காவியங்கள்:
இருண்ட புள்ளிக்குள்
தன்னை மறந்து
இரவுக்குண்டான கூடலில்
பகலவனும் லயித்திருந்த
விடியலது...
.
காதல் நிர்ணயத்திட்ட
நனைகூந்தல் முன்
பின்னிலை பட்டபடி
காவிய வெட்கம்..
மூன்றிலக்க காவியங்கள்
அவைகளுக்கே உரித்தான
நர்த்தனங்கள்தனை அரங்கேற்ற...
யாக்கைகளைப் படர்த்தியவள்
எழுவதாயில்லை...
.
சீராய்ப் பாடும் தென்றல்
அதீத நெருக்கம்தான் குறை என்றது..
எங்களுக்கென்ற
மௌனமொழி இறுக்கத்தினில்
.
உச்சி நுகர்ந்திட்ட
அந்த எச்சில் ஈரம் காய்வதற்குள்
உயிரணுக்கள் உயிர்ப்பித்து விடும்...
.
அந்நொடிப்பொழுதினும்
இதிகாசங்கள் நவில்ந்திட்டு
செருக்குடன் தள்ளி நிற்கிறான்கவிதையெனும் மூன்றாமவன்!!
- தேனு
.
காதல் நிர்ணயத்திட்ட
நனைகூந்தல் முன்
பின்னிலை பட்டபடி
காவிய வெட்கம்..
மூன்றிலக்க காவியங்கள்
அவைகளுக்கே உரித்தான
நர்த்தனங்கள்தனை அரங்கேற்ற...
யாக்கைகளைப் படர்த்தியவள்
எழுவதாயில்லை...
.
சீராய்ப் பாடும் தென்றல்
அதீத நெருக்கம்தான் குறை என்றது..
எங்களுக்கென்ற
மௌனமொழி இறுக்கத்தினில்
.
உச்சி நுகர்ந்திட்ட
அந்த எச்சில் ஈரம் காய்வதற்குள்
உயிரணுக்கள் உயிர்ப்பித்து விடும்...
.
அந்நொடிப்பொழுதினும்
இதிகாசங்கள் நவில்ந்திட்டு
செருக்குடன் தள்ளி நிற்கிறான்கவிதையெனும் மூன்றாமவன்!!
- தேனு

