பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

February 14, 2011

காதல் பிணைப்பினிலே - தேனு

கவிஞர் அறிமுகம்: நான் எழுதுவதை ஒரு மனநிம்மதிக்காக செய்து கொண்டிருக்கும் ஒரு மென்பொருள் பொறியாளன். "தேனு" என்கிற பெயரின் கீழ் எனது வலைப்பூவினில் எழுதி வருகிறேன். என்னுடைய சிற்சில கவிதைகள் "கீற்று", "திண்ணை", "இளமை விகடன்", "கூடல்" இணைய தளங்களில் பிரசுரிக்கப் பட்டுள்ளன.

காதல் பிணைப்பினிலே:



நீர்ம திரையின் மறுபக்கம்
வெட்கம் மீதான சேர்க்கையுடன்
ஏறத்தாழ அவளது முழுமுகமும்..

வழிந்தோடும் விருப்புகள் வழி
இழையோடி நின்று
அவ்விமைகளிடும் தாளங்கள்..
என்னவென்று யூகிக்க
நேரமிட்டு வைப்பதன்றி
விரல்கள் ஒவ்வொன்றாய்
விடுபட..


இடறி சிதறுண்ட
விண்மீன்கள் சில
சட்டென அவள் முகத்தில்
ஒருசேர குடிகொண்டன
நாணத்துடன்..

என்னையும் மீறி

ஏதோ ஓர் புள்ளிக்குள்
காதலித்து நான் கிடக்க
முகமூடியைக் களைத்தெறிந்து
படர்ந்து கொண்டாள்..
சற்று மயக்க நிலையில்
இறுக பிணையப்பட்டு நான்..

சாரலென உள்ளூர சிலிர்க்க விட்டு
நகைத்தபடி நின்றிருந்தன,
அவளுக்கென்று நான்
மீதமாக்கி வைத்திருந்த
ரசனைகள்...

- தேனு

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com