பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 14, 2010

புத்தமரம் - கார்த்திக் நேத்தா


வீழும் இலை
குளத்திற்கு மாட்டி விடுகிறது
வளையல்.

நீரின் சலனம் கேட்டு
துணுக்குறுவதில்லை  பறவைகள் ,
த்யானானுபவம் அடைகின்றன.


கறுப்பாகிக் கொண்டிருக்கும்
குளத்தின் மேல் பைய ஊர்கிறது
நிலா வெளிச்சமெனும் மின்மினி உருண்டை.

தியானத்தில் இருந்ததாக பிதற்றிய புத்தன்
உண்மையில் தியானத்தில் தான் இருந்தானா ?

அரச மரம் மட்டுமே போதி மரம்
புத்தனாக இருந்தால்.

எல்லா மரங்களும் போதி மரங்களே
பறவையாக இருந்தால்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com