பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 12, 2010

சுமதி கவிதைகள் -19

சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராக பிரசுரமாகிறது. அவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கு சொடுக்கவும்.http://kaattchi.blogspot.com/search/label/சுமதி%20கவிதைகள்

மாலையின் மந்திர ஒளியில்
நிலவின் கசங்கிய இருளில்
விதவிதமான நிறங்களோடு
நீ தானிய வார்த்தைகளை
வீசிகொண்டே இருக்கிறாய்.
ஒருதானியத்திற்கும் மற்றொரு தானியத்திற்கும்
ஆன இடவெளியில்

உன் குரோதமும் என் காதலும்.


காமப்பசி மிகுந்து
பதுங்கி வருகையில்
மறத்தி நீ
கைகளை முறமாக்கி
விரட்டியடிக்கிறாய்
சிறுபொழுதேனும்.

சுமதி.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com