பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 4, 2010

என் செய்தாய் மனமே -கார்த்திக் நேத்தா

குடிப்பதை நிறுத்தச் சொல்லி
அழுதீர்கள்
பன்னிரண்டு வருடக் குடிப் பழக்கத்தை உடனே நிறுத்தினேன் .
மாற்றுக்கு ,
புத்தகம் படிப்பதை
வழக்கமாக்கி கொண்டு வாழத் தொடர்ந்தேன்
ஓரிரு மாதங்கள் பொறுத்த நீங்கள்
சாடை மாடையாக
சொந்த காசில் வாழத்தெரியாதவன் என்றீர்கள்

ஏதோ ஒரு தொழில் என்றாலும் முழு முனைப்புடன்
செயல்பட ஆரம்பித்தேன் .

குடிப்பதில் உள்ள ஆசுவாசமும் ,
படிப்பதில் ஏற்படும் மனநிறைத் தெளிவும் ,
வேலை செய்வதில் உண்டாகும் எந்திரத்தனமும்
ஒருங்கே திரண்டு ,
உள்ளே குழப்பி
ஒரு நாளில் என்னை மனநோயாளியாக
மாற்றிப்போட்டது .

பயந்து போன நீங்கள்
இன்று வரை மருத்துவரிடமும் ,
கோவில்களுக்கும்
அழைத்துப் போகிறீர்கள் .

மகாபுருஷர்களை மட்டுமல்ல
மனநோயாளிகளையும்
அன்பு உண்டாக்குகிறது .

என் மனநோய்க்கான மருந்து உங்கள் யாரிடமும்
இல்லவே இல்லை .
இருக்கப் போவதும் இல்லை

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com