கொடியில்
வெள்ளை அங்கிகள் படபடக்கும்.
மோன அமைதியெங்கும்.
நேர்த்தியாய் வெட்டபட்ட
புற்களும், செடிகளும்.
பறவைகளும் பயபக்தியாய் பறந்தமரும்.
பியனோவில் கசியும் ஆகம சங்கிதம்.
சிலுவையில் குருதி சிந்தும் கர்த்தன்.
கைபிடிசுவருக்கு அப்பால் கிடக்கும்
விஸ்பர்களும், விசும்பல்களும்
மாலை பிராத்தனை நேரத்தில்
மடத்தின் பின் வாசலருகே
புனர ஆரம்பித்தன நாய்கள்.
இரும்பு கதவை
இழுத்து மூடினாள் கன்னியாஸ்திரி.
அந்தரங்கம் அனுமதித்ததற்கு
நன்றி சொல்லி
மேலும் சந்தோசமாய் புனர்ந்தன
.இந்திரன் உடம்பாயிற்று இரும்புகதவு.
சாம்ராஜ்.
