பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 25, 2010

ஆனந்ஷா சம்பாஷைணைகள்.... - மாரிசெல்வராஜ்


 
HELLO யாருங்க

“நான் ஷா பேசுறேன். எனக்கு ஷான்னு தானே நீ பேரு வைச்சிருக்க ஏன் உன்கிட்ட என் நம்பர் இல்லையா அல்லது நடிக்கிறீயா

“நீயா நம்பவே முடியல எனக்கு போன் பன்ற அதுவும் இன்னைக்கு

“ஏன் பண்ணக்கூடாதா என்கிட்ட உன் நம்பர் இருக்கு அதனால பண்ணினேன்

“ம்ம்ம் சொல்லு “

“என்ன சொல்லனும் சரி INVITATION  வந்துச்சான்னு கேட்கத்தான் போன் பண்ணினேன் “

“வந்துச்சுன்னு அம்மா சொன்னாங்க ஆனா நான் இன்னும் பாக்கல பாக்கனும்னு தோணல “

“ம்ம் எங்க இருக்க இப்போ “

“உண்மையை சொல்லனுமா இல்ல பொய் சொல்லனுமா

“இரண்டையும் சொல்லு

பொய் என் பெட்ல படுத்துகிடக்கிறேன் உண்மை ஆளில்லாத கடற்கரையில் ஆநாதையாய் நின்று சிகரெட் குடித்துக்கொண்டிருக்கிறேன் “

ம்ம் சரி நான் போனை வைச்சிடவா “

“ம்ம் ok வாழ்த்துக்கள் “

thanks நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா

“இன்னைக்கே எதுவானாலும் கேட்டுவிடு

“என்னை first time எங்கே பார்த்த எப்படி பார்த்த “

தென்காசி பஸ்டாண்ல செங்கோட்டை பஸ்ஸில் இருந்து நீ உன் தம்பியோ யாரோ ஒரு பையன் கூட இறங்கி வரும்போதுதான் முதன்முதலில் உன்னை பார்த்தேன் but எனக்கு உன் பெயரும் உன்னை பற்றி சில விஷயங்களும் ஏற்கனவே எனக்கு தெரியும் “

“என்னை பாக்கிறதுக்கு முன்னாடி உனக்கு எப்படி என்னை பற்றி தெரியும் நீ என்ன ஜோசியக்காரனா ம்ம் “

“அழகான பொண்ணுங்கள பற்றி தெரிஞ்சுவைச்சுக்க ஜோசியகாரனா இருக்கனுமா என்ன.....அப்போ நாங்க செங்கோட்டை ரயில்வே கோட்ரஸ்ல இருந்தோம். செங்கோட்டை Train  ல ஒரு பெரிய பையன் வந்து உன்கிட்ட I love you  சொன்னதும் நீ சைக்கிளை செங்கோட்டை ரயில்வே ஸ்டேசன்ல போட்டுட்டு ஓடினதையும், பசங்க உன் முகத்தை பாக்க கூடாதுன்னு பர்தாவை முழுசா மூடி மரத்தில போய் முட்டிகிட்ட்தையும் பசங்க தினமும் சொல்லுவாங்க அதிலையும் மூனு பசங்க உன்னை லவ் பண்ணினானுங்க ஆனா அது சின்சியரான்னு எனக்கு தெரியாது. எப்ப பார்த்தாலும் உன்னை பற்றியே பேசுவானுங்க அப்பவே உன்னை பாக்கனும்னு நினைச்சேன் ஆனால் ஒரு வருசம் கழிச்சுதான் உன்னை முதன்முதலில் பாக்க முடிஞ்சது “

அடப்பாவீங்க அவனுங்கள நினைச்சாலே பத்திகிட்டு வருது நேத்துக்குட ஜவுளி எடுக்க போகும்போது அதுல ஒரு சனியனை பார்த்தேன் கீழகூடி சிரிச்சுகிட்டு போகுது ராஸ்கல்

என்ன ரூம்ல தனியா இருக்கியா இவ்வளவு நேரம் என்கிட்ட பேசுற அதுவும் சத்தமா “

“ஏன் பேசக்கூடாதா ஆமா என்ன அங்கே ஒரு சத்தமா கேட்குது என்ன பன்ற நீ “

“பெரிய பெரிய அலைகள் வந்து பெரிய பெரிய கல்லில் மோதும் சத்தம் “

hey  sujatha, if you don’t come in time i’ll  kill you

“என்ன திடீர்னு இங்கிலீஸ்ல என்னமோ ஏதோ பேசுற “

“தம்பி எதையோ எடுக்க என் ரூம்குள்ள வந்தான் அதுதான் “

if anyone cant enjoy the beauty of ocean they cant understand the power tears

“என்ன சொன்ன சரியா கேட்கல

“இங்க ஒருத்தர் வழி கேட்டார் அவர்கிட்ட பேசினேன் “

“ம்ம் அதுக்கு பிறகு என்னை எப்போ பார்த்த

“அதுக்கு பிறகு ஆறு மாசம் கழிச்சு நம்ம காலேஜ்ல தான் உன்னை பார்த்தேன் “

“நம்பவே முடியல five years நாம ஒன்னா படிச்சிருக்கோம் இல்ல “

“அப்படித்தான்னு நினைக்கிறேன் உன்கிட்ட ஒன்னு ரொம்ப நாளா சொல்லனும் சொல்லனும்னு நினைச்சேன் இந்த five years  ல உன்னை நான் disturb பண்ணியிருந்தா மன்னிச்சுடு என்ன “

“உனக்கு அது இப்பதான் தெரியுதா “

இல்ல முன்னாடியே சொல்லனும்னு நினைச்சென் ஆனால் சொல்ல முடியல

“ஏன் என்னை நீ லவ் பண்ணினியா

“சத்தியமா உன்ன நான் லவ் பண்ணினேன்னு என்னால சொல்ல முடியாது

“உனக்கு என்ன லூசா இல்ல என்னை லூசாக்க பாக்கிறீயா “

“இல்ல உன்ன எனக்கு புடிக்கும் ரொம்ப பிடிக்கும் அதுக்கும் காதலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனக்கு தெரியல “

“உன்னை நான் ஒரு மிக பெரிய கோழையா நினைச்சுக்கிடலாமா

“ஏன் அப்படி சொல்ற

“பின்ன என்ன ரொம்ப பிடிச்ச பொண்ணு கூட five years ஒன்னா இருந்தும் ஒரு வார்த்தைகூட பேசாத உன்னை வேற என்ன சொல்ல “

“உன்னை பார்த்துகிட்டே இருக்கனும்னுதான் தோணிச்சு பேசனும்னு சத்தியமா தோணவே இல்லை நான் என்ன செய்ய

அப்படின்னா என் பின்னாடி சுத்திகிட்டு திரிஞ்ச அந்த ஐஞ்சு சனியன்களில் நீயும் ஒருத்தன்னு நான் எடுத்துக்கலாமா “

“அது உன் விருப்பம் அதேபோல் நானும் உன்னை ஒரு கோழை என்று சொல்ல்லாம்தானே

“எதுக்கு என்னை எப்படி நீ கோழை என்று சொல்ல முடியும் “

“நீ ஏன் ஐஞ்சு வருசத்துல ஒருநாள் கூட principal கிட்ட என்மேல complaint பண்ணல “

‘எப்படி complaint பண்ண சொல்ற என்னையவே பாத்துகிட்டு இருக்கான் சார் அடிச்சு திங்க போறது மாதிரி பாக்கிறான் சார்னு complaint பண்ண சொல்றீயா ம்ம்ம்ம்

“ஏன் உன் friends எல்லாரும் complaint பண்ண சொன்னாங்க தானே “

“அவங்க சொன்னா நான் complaint பண்ணனுமா உனக்கு எப்படி என்கிட்ட பேசனும்னு தோணவே இல்லையோ அதே மாதிரி எனக்கு உன் மேல complaint பண்ணனும்னு தோணவே இல்ல ஆனால் இப்போ தோனுது உன்மீது நான் complaint பண்ணிருக்கனும் “

“ஏன் அப்படி தோனுது

“ஒருவேளை complaint பண்ணிருந்தா என்கிட்ட நீ பேசிருப்ப இல்ல “

“தெரியல ஆனால் pirincipal கிட்ட கண்டிப்பா பேசியிருப்பேன்

“எனக்கு சிரிப்பு வரல

“எனக்கும்தான் சிரிப்பு வரல

 “சரி அதை விடு நாளைக்கு கல்யாணத்துக்கு வருவீயா மாட்டியா

“தெரியல ஒருவேளை வரனும்னு தோணிச்சுனா கண்டிப்பா வருவேன் “

“கண்டிப்பா வா ஆனால் நீ வரும்போது என்னால உன்னை பார்த்து ஒரே ஒரு தடவை தான் மேடையில் நின்று  சிரிக்க முடியும் தப்பா நினைக்காதே “

“அப்படி ஒரே ஒரு முறை நீ சிரிக்கும்போது ஒருவேளை என்னால் பதிலுக்கு சிரிக்க முடியாமல் போனால் நீ என்னை தப்பாக நினைத்துக்கொள்ளாதே “

MALE GENDER SUPERIORITY

 “என்ன சொன்ன

 “ஆம்பள திமிர் என்னடா “

“தெரியல இருக்கலாம் ஆனால் சிரிக்க முடிந்தால் கண்டிப்பா சிரிப்பேன் “

“ம்ம் அப்புறம் இந்த நம்பரை நான் மாத்திடுவேன் இன்னைக்கு தான் கடைசி நாளையில் இருந்து புது நம்பருக்குக்கு மாறிடுவேன்

ம்ம் நானும் என் நம்பர் மாத்திடுவேன்

“நீ எதுக்கு நம்பர் மாத்தனும் “

“உனக்கு என் நம்பர் தெரியும் என்பது கூட எனக்கு தொந்தரவாக இருக்கலாம்

“ஆனந் உன்கிட்ட ஒன்னு சொன்னா தப்பா நினைக்கமாட்டியே “

“ம்ம் சொல்லு

 தயவுசெய்து கெஞ்சி கேட்டுக்குறேன் நாளைக்கு நீ என் கல்யாணத்துக்கு வந்திடாதடா PLEASE  கண்டிப்பா வராத உனக்கு புண்ணியமா போகும்டா ARE YOU DEVIL, KILLING ME IN MY LAST  MINUTE  இனிமே என் முன்னாடி எப்பவுமே வந்திடாதடா PLEASE OK BYE TAKECARE……………

 .மாரிசெல்வராஜ்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com