பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 20, 2010

இவள்பாரதி கவிதைகள் - 6


இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.




கையேந்தி நிற்கும் 
கரங்களைக் காணச் சகியாமல்
பார்வையைத் திருப்பும் மௌனம்

ஓங்கியழும் குரல்களைக் 
கேட்க முடியாமல்
காதுகளை மூடிக் கொள்ளும் மௌனம்

அண்டை வீடு 

அடித்து நொறுக்கப்படுகையில் 
கதவைத் தாளிட்டுக் கொள்ளும் மௌனம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே
‘20,000 பேர் பரிதவிப்பு’ என ஓடும் செய்திகளைக்
கண்டும் காணாத மௌனம்

ஆயிரமாடிரம் மௌனங்களைச் 
சூடிக் கொண்டிருக்கும் 
அத்துனை பேருக்கும் சொல்கிறேன்
மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடல்ல
அது கோழையின் வீரச்செயல்.. 

வேதனைகளை
வேடிக்கை பார்க்கும் மௌனமே
வெடித்தெழு
சாவதற்குள் ஒருமுறையேனும்..

வரலாறு கூறும் 
பழிச்சொற்களில்
ஒன்றிரண்டு குறையக்கூடும்
உன் சந்ததிக்கு..
--

இவள்பாரதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com