யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
பகுதி 23
கடற்கரை இருட்டில், தன் நினைவுகளில் தொலைந்திருந்த அஞ்சனாவை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது மழை. கார் கண்ணாடியில் சட சட என தெறித்த மழையை பார்த்தவாறு, காரை அங்கிருந்து வீடு நோக்கி ஓட்டினாள். வீட்டை அடைவதற்குள் தெரு எங்கும் வெள்ளமாக மழைநீர் ஓடுவதை பார்த்து ரசித்தவள், வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டுற்குள் நுழைந்தாள். சிறு குளியல் போட்டு, உடை மாற்றி, படுக்கையில் வந்து விழுந்தாள். கேரளாவில் நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றொன்றாக யோசிக்க, கோபகுமாரை பற்றி எண்ணியவளுக்கு, சட்டென இன்னொரு முகம் கண்முன்வந்து போனது. வெகு நாளாய் மறந்தே போயிருந்த சம்பவங்கள், மூளையில் எங்கேயோ ஒளிந்திருந்து, இப்போது காரணமே இன்றி நினைவுக்கு வந்து அஞ்சனாவின் தூக்கத்தை பறித்தது.
தனிமை இருட்டில், வெளியே பளிச்சிட்டு கொண்டிருந்த மின்னல், அவள் அறையை நொடிக்கொரு முறை வெளிச்சமாக்க, ஏனோ அந்த முகமும் நிகழ்வும், இன்னும் இரண்டு முகங்களை நினைக்க வைத்தது. It was more like a Déjà vu. அஞ்சனா தனக்கு முன்பின் தெரியாத அந்த மூன்று பெண்கள் வனிதா, ஜோல்ஸ்னா, காவ்யாவை சந்திக்க நேர்ந்தது, முற்றிலும் வேறுபட்ட சூழலில். வனிதா, அஞ்சனா மருத்துவ கல்லூரியில் ITU (Intensive Care Unit – தீவிர சிகிச்சை பிரிவு) internship செய்யும் போது, சந்தித்தவள். ஜோல்ஸ்னா கேரளாவில் வேலை பார்க்கும் போது, பின்னிரவு போலீஸால் அழைத்து வரப்பட்டவள். காவ்யா சேய்ஷல்ஸில் தான் வசிக்கும் இடத்திற்கு அருகே வசித்து வருபவள். மூவரும் வெவ்வேறு சூழலில் சந்திப்பினும், the basis of their problem was the same. Men and Love....
வனிதா admit ஆன பின், பெண்கள் விடுதியில் பெரும் பட்டிமன்றமே நடந்தது. அவள் செய்தது சரியா தவறா என்று, அஞ்சனாவும் கோமதி மங்கை நந்தினியும் பல மணிநேரம் பேசியதை எண்ணி சிரித்தாள். அஞ்சனாவின் மனநிலை அன்றைகளுக்கும் இன்றைகளுக்கும் எத்தனை மாறுப்பட்டு இருக்கிறது என்று எண்ண, காலம் நம் எண்ணவோட்டத்தை எப்படி மாற்றுகிறது என்று யோசித்தப்போது விசித்திரமாக இருந்தது. ‘’What was I thinking then? ‘’ என்று எண்ணி தலையை உதறியவளுக்கு, மீண்டும் கருகிய உதடுகளோடு பேசமுடியாது இருந்த வனிதாவின் முகம் கண் முன் வந்தது. வனிதா, நல்ல சிகப்பு, சற்று பூசிய தேகம், கட்டாயம் அழகி தான். 30களில் இருந்தவளுக்கு நான்கு வயது குழந்தை இருந்தது. அவளை தூக்கி வந்தபோது, புழு போல துடித்துக்கொண்டிருந்தாள். டாய்லெட் சுத்தம் செய்ய வைத்திருந்த acid குடித்துவிட்டாள் என்று கதறியபடி தூக்கிவந்தார்கள். கீழுதடு உறுகிப்போய் தாடை எலும்பு தெரிய, பல்லீறுகளில் ரத்தம் வடிய, நாக்கு இருந்த இடத்தில் ஏதோ ஒன்று சதைப்பிண்டம் போல இருக்க, முகத்தின் மேல் பாதி சாதாரணமாகவும், கன்னத்தின் தொடக்கத்தில் இருந்து சதையும், எலும்பு தெரிய விகாரமாகி, மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்தவளுக்கு, IV line போட்டு, hartmann’s solution, வலிக்கு morphine கொடுத்தப்படியே பார்த்தாள், அவள் முகம் எப்படி சிதைந்து கொண்டே இருந்ததும், தசை பொசுங்கிய வாடையும் உணர்ந்தப்படி. சிறிது நேரத்தில், ரத்த பரிசோதனை, Xray, ECG எல்லாவற்றின் முடிவுகளோடும், surgery head Dr. நடனசபாபதியும், ITU consultant Dr. மோஹனும் பேசிக்கொண்டிருந்தார்கள் மேற்கொண்டு என்ன செய்வது என்று.
Acid குடித்ததில் அது பட்ட இடத்தில் இருந்த திசுக்கள் எல்லாம் பொசுங்கி போயிருந்தது, உதடு. நாக்கு, தொண்டை, உணவு குழாய், வயிறு போன்றவை. அத்தோடு ரசாயனத்தின் வீரியத்தால், நுரையீரலில் chemical pneumonitis இப்படி நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததில், ஆபத்தான கட்டத்தில் இருந்தாள் வனிதா. மூச்சு விட சிரமப்பட்டாலும், ஏற்கனவே acidஆல் பொசுங்கியதால், tracheostomy செய்யவும் முடியவில்லை. அவள் உயிர் பிழைப்பதே அரிது என்றாலும், பிழைத்தாலும், severe disabilityயோடு தான் வாழ இயலும். அவளை காப்பாற்ற ஒரு பக்கம் போராட்டம் நடக்க, இன்னொரு பக்கம், அவளுடைய குடும்பத்தில் பயங்கர குழப்பம். ITU வெளியே பெரிய சண்டையே நடந்து கொண்டிருந்தது. விசாரித்ததில், கணவன் குடிகாரன், தினமும் சண்டை போட்டு அடிப்பவன். இப்படியிருக்க, பக்கத்து வீட்டில், 45 வயது மதிப்புள்ள மனைவியை இழந்த எஞ்சினியர் ஒருவர் வந்து தங்க, வனிதாவும் அவரும் பேசி பழகியதில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இஷ்டமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு, அவனை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை மணக்குமாறு எஞ்சினியர் கேட்க, இதற்குள் இவர்கள் பழக்கம் எல்லோருக்கும் தெரிந்து, அது எப்படி ஒரு குடும்பப்பெண் இது போல கேடுக்கெட்ட தனமாக பழகி, குடும்பத்து பெயரை சீர்குலைக்கலாம் என்று ஊர் முழுக்க ஆளாளுக்கொரு அவதூறு பேச, பொறுக்கமுடியாது இப்படி செய்து கொண்டாள் என்று சொன்னார்கள்.
எல்லா Treatment குடுத்தும், பலனளிக்காது வனிதா இறக்கும் தருவாயில் இருந்தாள். கடைசி வரை சுயநினைவு இழக்கவில்லை. கணவன் வந்து அவள் அருகில் வேண்டா வெறுப்பாக அமர்ந்து இருந்தான். அஞ்சனாவிற்கு இன்னமும் நினைவிருக்கிறது. அவன் அவளிடம் விடாது கேட்டுக் கொண்டே இருந்தது. `` என்ன விட என்னத்தடீ பார்த்தே அவன்கிட்ட? அப்படி என்ன செஞ்சு மயக்கிட்டான் உன்னை? என்னய விட உன்னை சந்தோஷப்படுத்தினானா, அந்த கிழவன்? `` என்று கொச்சையாக கேட்டு கொண்டிருந்தான்.
அந்த நேரம் அஞ்சனாவிற்கு பொறுக்கமுடியாது, அவனிடம் சென்று, `` உங்க விஷயத்தில தலையிடறேன்னு நினைக்காதீங்க. இவங்க எவ்வளவு சீரியஸா இருக்காங்கன்னு, உங்களுக்கு புரியுதா? என்ன தான் இருந்தாலும், இந்த நேரத்திலயும் அவங்க மனச கஷ்டப்படுத்தணுமா நீங்க? உங்களுக்கு அவங்களோடு இருக்க பிடிக்கலை அப்படின்னா, please go out. இந்த நேரத்தில அவங்களை disturb செய்யாதீங்க. வேற யாராவது சொந்தக்காரங்க பார்க்கணும்னா கூப்பிட்டு வந்து கூட இருக்க சொல்லுங்க`` என்று சூடாக கத்திவிட்டாள். இறக்கும் நேரத்தில் யாராக இருந்தாலும், they deserve respect and dignity என்று அப்பா சொன்னது நினைவிற்கு வந்தது.
வனிதா வந்து மருத்துவமனையில் admit ஆனதில் இருந்து வெளியே, எல்லாருடைய ஏச்சையும் வாங்கிக்கொண்டு, அந்த எஞ்சினியரும் காத்து இருந்தார், வனிதாவின் முகத்தை பார்க்க. முதல் நாள் இரவு, வனிதாவின் கணவன் அடித்ததையும் தாங்கி கொண்டு, அங்கேயே காத்திருந்த மனிதரை பார்க்க, கொஞ்சம் பாவமாக இருந்தது. அப்போதைய மனநிலையில், அஞ்சனா, என்ன இருந்தாலும், அவர் எப்படி ஒரு குடும்பத்தை கலைக்கலாம் என்று கொஞ்சம் பொறுமல் இருந்தது. வனிதாவின் அம்மா அவளோடு இருந்தார்கள். பெற்ற மகள் கண்முன் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை பார்ப்பது கொடுமையான நிகழ்வு. வனிதா பேசமுடியாது இருப்பினும், அவர்களிடம் அந்த எஞ்சினியரை பார்க்க சொல்லி கெஞ்ச, அவர்களும் வெளியே சென்று, யார் யார் காலிலோ விழுந்து, இறக்கும் தருவாயில் அவளுடைய ஆசையை நிறைவேற்ற சொல்லி அழ, ஒருவழியாக உள்ளே விட்டார்கள். கணவனும் அந்த எஞ்சினியரோடு உள்ளே வந்தான்.
வனிதா கண்ணீர் வழிய படுத்திருந்தாள். அந்த எஞ்சினியர் பார்க்க அழகில்லை. வனிதாவின் கணவனை போல உயரமோ வனப்போ இல்லை. இத்தனை அழகான பெண், படித்தவள் எப்படி இப்படி ஒரு ஆளோடு பழக்கம் கொண்டாள் என்று அஞ்சனாவிற்கு கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. அவரோ வனிதாவையே பார்த்தப்படி நிற்க, அவள் கணவன் இருவரையும் வெட்டிவிடுவது போல் பார்த்து கொண்டு நின்றான். அந்த மனிதர், கண்களில் நீர் தளும்ப, அவன் பக்கம் திரும்பி, `` அவங்க உங்க கிட்ட இருந்து பொன்னும் பொருளும் எதிர்ப்பார்க்கலை. உங்க அன்பும், மரியாதையும், நம்பிக்கையும் தான் எதிர்ப்பார்த்தாங்க. அதை கூட உங்களால அவங்களுக்கு கொடுக்க முடியலை. மனசாலயும், உடம்பாலயும் ரொம்ப காயப்படுத்திட்டீங்க. ஆறுதல் தேடி தான் என்னோட பேச தொடங்கினாங்க. இந்த மாதிரி பொண்டாட்டி கெடச்சும், அவங்களை தொலைச்சிட்டீங்க. எங்கூட வர சொல்லி நான் சொன்னது நிஜம் தான். உடம்பு சுகத்துக்காக இல்லை. வாழ்க்கையில மனசார சந்தோஷமா இருக்கறது பாவமில்லை. உங்க கூட இருந்ததில் ஒரு நாள் கூட அழாம இருந்ததில்லை. அப்படிப்பட்டவங்க என்னால கொஞ்ச நாளாவது, மனசு விட்டு சிரிச்சாங்க. அழகா உணர்ந்தாங்க. She understood what it is to be loved and respected as a human being.`` என்று சொல்லிவிட்டு, வனிதாவின் பக்கம் திரும்பி, ``Yes, I will always love you, vanitha. என்னால் உன்னை இப்படி பார்க்க முடியவில்லை’’ என்று சொல்லி கதறிவிட்டு, அவள் கையை பற்றி முத்தமிட்டுவிட்டு வேகமாக போய்விட்டார். வனிதாவின் கணவன், முகம் வெறுப்பில் எரிந்தது. அந்த ஆள் இதுவரை சொன்னது எதுவுமே புரியாத அவன் சொன்னான் `` இந்த நேரத்தில கூட, உன் கையை புடிச்சு முத்தம் தரான். உன் புருஷன் நான் இங்கேயே குத்து கல்லு மாதிரி நிக்கிறேனே. வெட்கம் இருக்கா, உனக்கு. தேவடியா மாதிரி கையை காட்டிட்டி படுத்திருக்கீயே?`` என்று.
கூக்குரல் கேட்டு அஞ்சனா, வனிதாவின் பெட் அருகே செல்லும் போது பார்த்தது மறக்கவே முடியாது போனது. எஞ்சினியர் போவதை பார்த்தப்படியே, மூச்சுவாங்க அழுதபடி படுத்திருந்த வனிதா, கணவன் பக்கம் திரும்பி, சீ என்பது போல அவன் முகத்தை பார்த்து, இருந்த கொஞ்சம் பலம் முழுக்க சேர்த்து காறி உமிழ்ந்து விட்டு, கண்களை மூடி படுத்துவிட்டாள், இதற்கு மேலும் ஒன்றும் சொல்ல இல்லை என்பது போல. அதன்பின், அவள் இறக்கும் வரை, அவனை கண்கொண்டு பார்க்கவில்லை, அந்த பெண். இறந்தபின், அவள் கணவன் புரண்டு, கதறி அழுவதை பார்த்து அஞ்சனாவிற்கு ஒன்றுமே தோன்றவில்லை.
அஞ்சனாவிற்கு இந்த சம்பவம் வெகு நாள் மறக்கவே இல்லை. இதை நினைவில் கொண்டு கவிதை ஒன்றை எழுதியது நினைவிற்கு வந்தது.
`` என் அன்பாய் இருந்தவனே
உள்ளுக்குள் கொப்பளிக்கும் என் கோபத்தின்
உச்சத்தில் இதோ அறுக்கிறேன்
இறக்கும் கணத்திலும்
என் உதடுகளை....
உயிர் பிரிந்தாலும் என் முகம்
நீ பார்த்து மனம் கனத்து
உன் கோப வெறுப்புகள் மறந்து
முத்தமிட்டு வழியனுப்ப நினைத்தால்
உதடுகள் அற்ற என் கோர முகம் வரவேற்கும்
என் வலி விகாரம் காட்டி...``
நாட்கள் உருண்டோட வனிதாவின் கதையை மறந்தே போனாள் அஞ்சனா. ‘’Not the power to remember, but it’s very opposite, the power to forget, is a necessary condition to one’s existence’’ என்பது எத்தனை உண்மையான விஷயம். அதன்பின் இது போன்ற ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது, கேரளாவில். அஞ்சனாவின் Night shift ஒன்றின் போது, எதிரில் இருந்த போலீஸ் நிலையத்தில் இருந்து, Head constable நாராயணன் ஓடிவந்தார். இரண்டு பேரை கைது செய்த போது, அந்த பெண் மயங்கிவிழுந்து விட்டாள் என்று சொல்லி முடிக்கும் முன்னே, அந்த பெண்ணை போலீஸ்காரர்கள் தூக்கிவந்து கிடத்தினார்கள். மயக்கத்தில் இருந்த அவளுடைய பைக்குள் நிறைய மாத்திரைகள் இருந்தது. கூட பேந்த பேந்த விழித்தப்படி நின்றிருந்த வாலிபன், சிறிது நேரத்திற்கு முன் தான் அவற்றை உண்டாள் என்று சொல்ல, stomach wash கொடுத்த பின் அந்த பெண் கண்விழித்தாள்.
அஞ்சனா அந்த பெண்ணை பரிசோதனை செய்யும் போது, மெல்ல பேசினாள். சுமார் 5 அடி உயரமும், அதற்கேற்ற உடல் வாகும் இருந்த அந்த பெண்ணை பார்த்தால், 25 வயதிற்கு மேல் சொல்லமுடியவில்லை. பெயர் ஜோல்ஸ்னா என்றும் திருச்சூரை அடுத்த ஒரு சிறிய ஊரை சேர்ந்தவள் என்றும் கூறினாள். இதை சொல்லி முடிக்கவும், அழத்தொடங்கியவளை சமாதானம் செய்வது பெரும்பாடாகி போனது. என்ன ஏதென்று கேட்க தொடங்கியபின் சொன்னாள், தனக்கு 35 வயதாகிறது என்றும், வீட்டை விட்டு இந்த 26 வயது வாலிபனோடு ஓடிவந்து விட்டதாகவும், அவனுடைய குடும்பத்தினர் இவர்களை ஆமோதிக்காததால், அவன் திரும்ப உன் வீட்டிலேயே விட்டுவிடுகிறேன் என்று சொல்ல, வீட்டை விட்டு ஓடி வந்து 2 நாள் ஆன பின், எந்த முகத்தோடு அங்கு செல்வது என்று குழம்பி, அடுத்து எங்கு போவது என்று தெரியாது முழித்து, சாகவேண்டி மருந்து குடித்ததாக சொல்லி அழுதாள்.
என்ன சொல்வதென்றே தெரியாது, அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்தாள் அஞ்சனா. வெளியே வந்து போலீஸிடம், ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் ஓய்வு தேவை என்று சொல்ல, அந்த வாலிபன் அவளை பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். அனுமதி கொடுத்தப்பின், அவன் உள்ளே சென்றான். உச்ச ஸ்தாயில் அவள் கத்துவது கேட்டு, நர்ஸும் அஞ்சனாவும் உள்ளே செல்ல, அவனை வெளியே போகுமாறு கத்திக்கொண்டிருந்தாள் ஜோல்ஸ்னா. என்னவென்று கேட்க, அவள் சொன்னாள், `` இவனால் என் குடும்பத்தை விட்டு ஓடிவந்திருக்கிறேன். என்னை நல்லவனுக்கு தான் திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு மூன்று குழந்தைகள். நான் வீட்டில் இருக்க, என் கணவரோ என்னையும், குழந்தைகளையும் காப்பாற்றவேண்டி வேலை வேலை என்று இருந்தார். திருமணம் ஆன 15 வருடத்தில், காலை எழுந்து இரவு வரை என் வேலை சமையல், வீட்டை பராமரித்து, குழந்தைகளை பார்த்துக்கொண்டு, தூங்கி எழுந்து மறுபடி அதே வேலை இப்படி இயந்திர தனமாக மாறிப்போனது. குறை சொல்ல ஒன்றும் இல்லாத போதும், வாழ்க்கையில் சுவாரசியங்கள் ஏதும் இன்றி வறண்டு இருந்த நிலையில், இவன் வந்தான். இவனோடு பழகிய ஒன்றரை வருடத்தில், மீண்டும் இளமையாக உணர்ந்தேன். முதன்முதலில் காதலிப்பது போல உணர்ந்தேன். இவனோடு இருந்தால் மட்டும் போதும் என்று யோசித்து, வீட்டை விட்டு கிளம்பி வந்தேன். பிள்ளைகளை பற்றி யோசிக்கவில்லை, என் பெற்றோரை பற்றி யோசிக்கவில்லை, என் கணவரை பற்றி யோசிக்கவில்லை. பித்து பிடித்தவள் போல, இந்த முதுகெலும்பில்லாதவனோடு ஓடிவந்துவிட்டேன். இவனுக்கோ இத்தனை நாளில், என் உடம்பு மட்டும் தான் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் என்னை ஒரு நாள் இரவு கூட பாதுகாக்க முடியவில்லை. அவன் வீட்டில் அவனை சேர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதால், என்னோடு இருப்பதென்பது முடியாது என்று கூறிவிட்டான். இந்த ஒன்றரை வருடம் நான் பார்த்தது முழுக்க ஒரு நிழலை தான். இப்போது தான் நிஜத்தை பார்க்கிறேன். என் கணவன் இவன் முன் இப்போது உயர்ந்து நிற்கிறார் என் மனதில். ஆனால் எந்த முகத்தை வைத்து கொண்டு போய் என்னை மன்னிக்க சொல்லுவேன். இப்படி என்னை நிர்கதியாக நிற்கவைத்துவிட்டு, இப்போது என்ன வேண்டி என்னை பார்க்க வந்திருக்கிறான். போக சொல்லுங்கள்`` என்று அழுதாள் ஜோல்ஸ்னா.
அந்த வாலிபனுக்கோ சொல்ல ஒன்றுமே இல்லை. கதவிடுக்கில் மாட்டியது போல பாவனையோடு இருந்த அவன், அவளை ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்பி வெளியே சென்றுவிட்டான். அஞ்சனாவிற்கு அவன் அப்பாடா என்று மூச்சுவிட்டப்படி அங்கிருந்து ஓடிப்போவது போல பட்டது. Somehow, Anjana knew Jolsna will never encounter this guy again, in her life. ஜோல்ஸ்னா அழுது கொண்டே இருந்தாள். அஞ்சனாவிற்கு ஒரு புறம் பாவமாக இருப்பினும், இன்னொரு புறம் கொஞ்சம் கோபம் வந்தது. எப்படி ஒரு சுயநலம் இருந்தால், பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, எவனோ ஒருவனோடு ஓடி போக துணிவு வரும் என்று மனதின் ஓரத்தில் பிராண்டியது. அவள் எதை நினைத்து அழுகிறாள் என்று யோசிக்க முயன்றவளுக்கு மூன்று விஷயங்கள் தோன்றியது. ஒன்று நம்பி ஏமாறும்போது ஏற்படும் வலி and its like finding out fairy tales don’t exist in hell, இப்படி ஒரு தவறு செய்தப்பின் எல்லோரையும் மீண்டும் எப்படி சந்திப்படி என்ற அவமான உணர்வு, ஒரு வேளை தன்னை குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளாது போயின் அவள் நிலை அடுத்து என்ன என்ற பயமும், கழிவிரக்கமும். It’s a very sticky and difficult situation. ஆனால் அதே நேரம், அஞ்சனாவால் எண்ணாது இருக்க முடியவில்லை. இதே காரியம் ஒரு ஆண் செய்திருப்பின், என்ன மாதிரியான repercussion would it have on a family என்று. Somehow Anjana didn’t have an answer.
அடுத்த நாள் night shift அஞ்சனா வந்த போது, போலீஸ் ஜோல்ஸ்னாவின் பெற்றோர்களை கூப்பிட்டு வர, அவர்கள் அவளை கூட்டி போனார்கள் என்று சொன்னார்கள். அதன்பின், என்ன ஆனாள் ஜோல்ஸ்னா என்று யாருக்கும் தெரியாது. அஞ்சனா எண்ணிக்கொண்டாள் out of all odds, கணவனும் பிள்ளைகளும் ஜோல்ஸ்னாவை மன்னித்து ஏற்றுக்கொண்டு எல்லோரும் மீண்டும் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று. But the actual reality can be anything exactly opposite of what she thought, which Anjana blocked out of her mind. இன்னொரு வனிதாவின் கதையை அங்கு யோசித்து பார்க்க மனம் வரவில்லை. ஜோல்ஸ்னாவின் நினைவுகளும் மூளையில் எங்கோ போய் ஒளிந்துவிட்டது நாட்கள் போக.
இந்த இரண்டு பெண்களை பற்றியும் யோசித்தவளின் மனதில் வந்து நின்றாள் காவ்யா. தன் வீட்டு பக்கத்திலிருந்த காவ்யா, ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் masseuse (மசாஜ் செய்யும் தொழில்) ஆக வேலை செய்பவள். தமிழ் நாட்டை சேர்ந்த 30 வயது இளம்பெண், திருமணம் ஆனவள், 7 வயது இரட்டை பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறாள். நல்ல நிறம், பளிச்சென மிக அழகாக இருப்பாள். அஞ்சனா வந்த புதிதில் எப்பவாவது அவள் வீட்டிற்கு சென்று, பார்க்க ஏதாவது தமிழ் DVD வாங்கி வருவாள். எப்போதாவது பேசிக்கொண்டிருக்கையில், massage செய்ய சொல்லக்கேட்டு, சாயந்திர வேலைகளில் யாராவது வருவார்கள் அவள் வீட்டிற்கு. Private ஆக மசாஜ் தரும்போது காசு கூடதலாக கிடைக்கும் என்று சொல்வாள். எப்போதாவது படகு துறைக்கு போகும் போது, அவளும் கூட வருவாள். நிறைய பேசுவாள், சிரிப்பாள். வெகுளி என்று சொல்ல முடியாது. அஞ்சனா யாரையும் judge செய்து பேசுபவள் இல்லை. ஆனாலும் நிறைய விஷயங்கள் பேசும் போது, காவ்யாவின் மனநிலை தானாக புரிப்பட்டது. பிள்ளைகளை பார்க்காது இருப்பது கடினமாக இருக்கிறது என்பாள்.
வெகு அலுப்பாய் இருந்த ஒரு சனிக்கிழமை, அவளோடு பேசலாம் என்று போய், வீட்டு கதவை தட்டினாள் அஞ்சனா. வியர்த்து விறுவிறுக்க வந்து கதவை திறந்த காவ்யாவையும், வீட்டின் உள்ளே இருந்து வந்த ஆண்குரல் கேட்டவுடனே புரிந்தது, அவள் வந்தது சரியான சமயம் இல்லை என்று. பிறகு வருவதாய் சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டாள் அஞ்சனா. அவள் இப்போது எல்லாம் இருக்கும் மனநிலையில், சரி தவறென்று ஒன்றையும் கணிப்பதில்லை. அதனால், இதை பற்றி பெரிதாக யோசிக்காது, எப்போதும் போய் அமரும் இடத்தில் சென்று சாயந்திரம் அமர்ந்தாள். காவ்யாவும் வந்து சேர்ந்தாள். வெறுமே Hi, hello சொல்லிவிட்டு, எதோ சொல்ல தொடங்கிய காவ்யாவை பார்த்து, `` You don’t have to explain anything to me ‘’ என்று நிறுத்தினாள் அஞ்சனா. காவ்யா அவளை ஆழ பார்த்துவிட்டு, ‘’ But I want too ‘’ என்று தொடர்ந்தாள்.
காவ்யா திடீரென கேட்டாள், ‘’ அஞ்சனா, Why do you think women get attracted to assholes? `` என்று. அஞ்சனா சட்டென காவ்யாவை புருவம் உயர்த்தி ஆச்சரியமாக பார்க்க, மூக்கை சுருக்கி காவ்யா தொடர்ந்தாள், ``you know what I mean, right Anjana? Projects; Guys whom women think they can fix; half finished work in progress... those kinds of guys. Why the f*** can’t we go for fully functional responsible partners? Why do we fall in love ‘’ என்று கேட்க, அஞ்சனாவிற்கு சிரிப்பு வந்தது. நிஜம் தானே. காதல் திருமணங்களில் பாதிக்கு மேல் இது போன்றவை தான். கொஞ்ச நேரம் இரு பெண்களும் சிரிக்க, சிரித்து முடித்தப்பின் அஞ்சனா, ``I think we should blame it on our medias. முரடன், திருடன், குடிக்காரன், பொம்பள பொறுக்கி, ஊதாரி, பொறுப்பில்லாத முட்டாள் இப்படி எந்த category ஆணாக ஆனாலும் காதலில் விழுந்து, அந்த பெண் அவனை திருத்தி உதாரண புருஷனாக மாற்ற, சமுதாயத்தில் ஆண்கள் நிமிர்ந்து நிற்க, they all lived happily ever after என்பது போன்ற sagaக்கள் தான் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம். I guess we all want a part of that in our lives in a way, To be responsible to shape up someone into perfection, rather than accept them for their flaws or with their flaws `` என்றாள்.
கொஞ்ச நேரம் பொறுத்து அஞ்சனா சொன்னாள், ``காவ்யா! மேலும், if you go through natural selection of mates in nature, the alpha male is always the biggest, meanest, cunning and most promiscuous animal, which is designed for survival and spreading its gene compared to all the beta males. அதனால தானோ என்னமோ, அந்த காலத்தில, வீர விவேக போட்டிகள் வைச்சு தேர்ந்தெடுத்தாங்க. இப்ப தான் குழம்பி போய் இருக்கோம் நம்ம, in this fast paced pixelated time period. I think now everyone is just as confused about the selection process, as we are.`` என்று சொல்லி சிரித்தாள். காவ்யாவும் கூட சேர்ந்து சிரிக்க, பின்னர் சிரிப்பு அடங்கி போய், கடலை வெறித்தாள். சப்தமே இல்லாது இருந்த காவ்யாவின் பக்கம் திரும்ப, கண்ணீர் தளும்ப இருந்த கண்களில் முதன்முறை கடலின் ஆழத்தை பார்த்தாள் அஞ்சனா.
காவ்யாவிடம் இருந்து முகத்தை திருப்பியவள், `` you know kavya, I think most of the times, we just confuse love from hormonal needs. எனக்கு தெரிந்து, we all chase after dreams. காதல் என்பது கதையோ நிஜமோ, we all want to fall in love. Do you know why? We just feel completely alive. Every sense gets heightened, every emotions gets magnified, every dimension of reality is shattered and we are flung into heaven ஏன் என்றால், அந்த உணர்வு ஒரு நிமிடமோ, ஒரு வருடமோ, ஒரு வாழ்நாள் முழுக்கவோ, எப்படி நீடித்தாலும், எப்போது பொத்தி வைத்து ரசிக்கும், அழகான நினைவுகளை விட்டு செல்கிறது. An unquenchable thirst to be longed for... அங்கிருந்து நிஜத்தை பார்க்க விழும்போது, மனம் சுக்குநூறாகி போகிறது.`` என்று முடித்தாள். அதை கேட்டுவிட்டு வெறுமையாக காவ்யா தொடங்கினாள், ‘’ If that is the case, I have one more story for the road, then. You need to hear me out ‘’ என்று தொடர்ந்தவளை, அலையும் கூந்தலை அடக்கியப்படி பார்த்தாள் அஞ்சனா.
- தொடரும் -
- யமுனா ராகவன் -