சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும், முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.
பகுதி 11

வருடத்தின் இறுதியில் சாந்தி தாம்பரம் கல்லூரியில் படிக்கும்போது பெண்கள் கல்வி மையம் சார்பாக ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் குருவின் நண்பன் வெங்கடேசன், இயேசுவைப் புரட்சியாளன் என்று சொல்லிவிட்டான். அதோடு மட்டுமல்லாமல், இயேசு இறக்கவில்லை இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, தப்பித்து வந்து விட்டார். இது தன்னுடைய சொந்தக் கருத்து இல்லையென்றும் தான் ஒரு மேல்நாட்டு ஆராய்ச்சியாளனின் கட்டுரையில் படித்ததாகவும் சொல்லிவிட்டான்.
பேராசியர்கள் முக்கால்வாசிப்பேர் அவனே அந்தக் கருத்தைச் சொன்னதாக நினைத்துக் குதற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் வில்சனைப் போன்று அரைகுறையாகப் புரிந்து கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்களுள் பாதிபேர் வில்சனின் ஆதரவாளர்கள்தான். அவர்கள் அப்படித்தானே புரிந்து கொள்ள முடியும்.
மாணவர்கள் நடுவிலிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. கிறித்துவப் பேராசிரியர்கள் சிலபேர் “இந்த மாணவர் இப்படி ஒரு கருத்து இருப்பதாகத்தானே சொன்னார். இதுதான் உண்மை என்று சொல்லவில்லையே” என்று சொல்லிப் பார்த்தார்கள்.
“எல்லா விசயங்களையும் மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் கேள்விக்கு உள்ளாக்கி பார்ப்பதுதான் ஆராய்ச்சியின் நோக்கம். இப்படி ஒரு கருத்து இருப்பதாக வெங்கடேசன் சொன்னதால் மட்டும் வரலாறு மாறிவிடாது. இந்த நூற்றாண்டிலேயே மர்மமாக இறந்துவிட எத்தனையோ போராட்டத் தலைவர்களின் வாழ்க்கையை நாம் தேடிப்பார்க்கவில்லையா? அதுத் தொடர்பான கட்டுரைகள் வெளி வரவில்லையா?” என்றான் குரு.
வெங்கடேசனைக் குறிபார்த்திருந்த கூட்டம், அவனுக்கு ஆதரவாக இருந்த குருவிடமிருந்து வார்த்தைகள் வரவும் குருவை நோக்கி கோபத்தோடு திரும்பியது. கருத்தரங்கம் பாதியிலேயே நின்றது. மருத்துவ விடுமுறையில் இருந்த நாச்சிமுத்து சாருக்கு உடனே தகவல் போனது. கருத்தரங்கம் வந்திராத வில்சன் சார்தான் இதைப்பற்றி நாச்சிமுத்து சாரிடம் உடனே தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறார்.
மறுநாள் நாச்சிமுத்து சார் சிவசுப்பு சாருக்குப் போன் செய்திருந்தார். அப்போது குருவையும் வெங்கடேசனையும் கல்லூரி முடிந்ததும் வீட்டில் வந்து தன்னைப் பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்.
அடுத்தநாள் காலையில் சாந்தியும் செல்வியும் கல்லூரிக்கு சீக்கிரமே வந்து குருவின் விடுதிக்கு எதிரே அவன் வருகைக்காகக் காத்திருந்தார்கள். காத்திருப்பதைக் கேள்விப்பட்டதும் பாதிதூக்கத்தில் எழுந்து ஓடிவந்தான் குரு.
“என்னங்கக்கா ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
“நேத்து போனது என்னாச்சு குரு?” என்றாள் சாந்தி
“நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும் நடக்கல. உள்ள நடக்கிற பாலிடிக்ஸை சொன்னாரு. அடுத்து வரப்போகிற துறைத்தலைவர் போஸ்ட்டோ, துணை முதல்வர் போஸ்ட்டோ இந்துக்களுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் இந்துக்களைக் குற்றவாளிகளாக முன்நிறுத்தி பாலிடிக்ஸ் பண்ணுவது சகஜம்தானாம். இனிமே இந்த மாதிரி வீண் விவாதங்கள்ல நாங்கக் கலந்துக்கக்கூடாதுன்னு சாரு சொல்லி அனுப்புனாரு அவ்வளவுதான்”
அதோடு பிரச்சனை முடிந்து விட்டதாகத்தான் எல்லோரும் நினைத்தார்கள். சிலருடைய மனதில் மட்டும் ஈரக்கட்டைகளிலிருந்து வரும் புகையாக புகைந்து நின்றது.

நாகர்கோவில் காரர்களான ஜெரால்டு வில்சனும் டேவிட்டும், சார்லஸவும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். வகுப்பறைகளிலும் வெளியிலும் இந்து மாணவர்களைக் கண்டுகொள்ளாத மாதிரியும் பொருட்படுத்தாத மாதிரியும் நடந்தார்கள்.
அடுத்த மாதம் முதல் மதிப்பெண் எடுக்கக்கூடிய இந்து மாணவர்கள் தேர்வாக மட்டுமே செய்தார்கள். மதில்மேல் பூனையாய் நின்றவர்கள் ஒற்றைப்படையில் மதிப்பெண் வாங்கினார்கள். இளங்கலை, முதுகலை மாணவர்கள் பயந்துபோய் குருவிடமும் வெங்கடேசனிடமும் பேச்சுவாக்கில் சொல்லப் போக, இரண்டுபேரும் திருத்திய விடைத்தாள்களை வாங்கிக்கொண்டு துறைக்குள் நுழைந்துவிட்டார்கள். நாச்சிமுத்து சார் வில்சனைக் கூப்பிட்டு கண்டிக்கவும், மதிப்பென் பற்றிய பிரச்சனையாக எழாமல், எப்போதோ நடந்து முடிந்த கருத்தரங்கத்தின் பிரச்சனையை மீட்டுக் கொண்டு வந்து தூசிதுடைக்கும் முயற்சியாக அமைந்துவிட்டது.
தாம்பரம் கல்லூரியில் முதல்வர், நாகர்கோவில்காரரும் வில்சனின் நெருங்கிய நண்பரும் கூட. பேராசிரியர்கள் கூட்டத்தில் வைத்து குருவையும் வெங்கடேசனையும் நடுவில் நிற்கவைத்து, கிறித்தவ மதத்திற்கு எதிராக எந்த ஒரு பேச்சிலோ செயலிலோ, ஈடுபடமாட்டோம் என்று எழுதித்தரும்படி கேட்டிருக்கிறார். இரண்டுபேரும் மறுத்ததற்காக 15 நாள் கல்லூரியிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார்.

நாச்சிமுத்துசார் தலையிட்டு “நல்லா படிக்கிற பசங்க. புதுசா வித்தியாசமான ஒரு கருத்தைப் படிச்சுட்டுவந்து கூட்டத்துல பேசனும் கைத்தட்டல் வாங்கணும்னு செஞ்சிருப்பாங்க. ஏற்கனவே குரு தன்னுடைய யு.ஜி.யை கிறித்தவக் கல்லூரி ஒன்றில்தான் படித்துவிட்டு வந்திருக்கிறார். அவருக்குத் தெரியும் கிறித்துவக் கல்லூரியைப்பற்றி”
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். மத்தப் பசங்களும் இவங்களை மாடலா வச்சி ஏதாவது புதுசா சொல்லணும். எதையாவது பேசினா பெரிய இடத்துல இருந்து கொஸ்டின் வருமே” என்று முதன் முறையாக வாயைத் திறந்து பேசியிருக்கிறார். கோபப்படவும் செய்திருக்கிறார் பிரின்சிபால்.
“எழுதிக் கொடுக்கிறதுல ஒன்னும் பிரச்சனை வராது. எழுதிக் கொடுத்திடுங்க” என்று நாச்சிமுத்துசார் சொன்னபிறகுதான் சம்மதித்து எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் வைத்து வில்சன் இந்து மாணவர்களின் மதிப்பெண்களில் கை வைக்கிறார் என்பதைச் சொன்னால் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நடுவே மனஸ்தாபம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக அதைப்பற்றி பேசாமல் வந்துவிட்டார் நாச்சிமுத்துசார்.
வார இறுதியில் வந்த இரண்டுநாள் விடுமுறைக்குப் பிறகு சாந்தி துறையில் நுழையும்போதே புளோரா “வாங்க சாந்தி சீக்கிரமா வந்துட்டீங்களே! கிளாஸ்(டே காலேஜ்) 12.30க்குத்தானே!” என்றார் சிரித்தமுகத்துடன்.
புளோராவிடம் ஏற்பட்ட திடீர்மாற்றத்திற்கான காரணம் புரியாத சாந்தி “கொஞ்சம் பிரிப்பர் பண்ணவேண்டியிருக்கு. அதான் வந்தேன்” என்றாள். முதல் நாள் சாந்தி அறிமுகமானபோது பேசியதுபோலவே நன்றாகப் பேச ஆரம்பித்து விட்டார் புளோரா. பாலின்தான் வந்ததிலிருந்து யாரிடமும் பேச்சு கொடுக்கவில்லை. பீரோவிலிருந்து ஏதோ புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்த பாலின் சத்தம் வரும்படி பலமாக ஓங்கி சாத்தினார். சாத்திவிட்டு அவளிடம் “செகண்ட் இயர்க்கு மண்டே டெஸ்ட். நீங்கதான் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணனும். இந்தாங்க, ஸ்டென்சில். இதுல இங்க் இல்லாத பென் வச்சு எழுதுங்க. மாடல் கொஸ்டின் பேப்பர் பீரோவுல இருக்கு. அப்பறமா எடுத்துக்கோங்க அதை. முதல்ல எந்தப் பகுதியிலிருந்து கொஸ்டின் எடுக்கணும்னு குறிச்சிக்கோங்க.” அடுக்கடுக்கான கட்டளைகளைக் கொடுத்துவிட்டு சாப்பிட கிளம்பினார்.
“நான் சாப்பிட்டுட்டு வர்றதுக்குள்ள அரைமணி நேரத்துல கொஸ்டின் ரெடி பண்ணி வச்சிடுங்க. அத ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ்ல கொடுத்தாதான், வெட்னஸ்டே காலையில டெஸ்ட்டுக்கு முன்னாடி வாங்கிட்டு வரமுடியும்.”
சாந்தியும் பாலினும் முதலாம் வருடம் மற்றும் இரண்டாம் வருட மாணவிகளுக்குப் பொதுப்பாடம், எடுக்கிறார்கள். பாலின் ‘பி’ பிரிவில் சாந்தி ஏ பிரிவில். முதல் வருட இரண்டாம் வருட சிறப்புப் பாடப்பிரிவு புளோராவுக்கு வரும். நன்றாகப் படிக்கக்கூடிய மாணவிகளை சிறப்புப்பாடப் பிரிவுக்கு எடுத்துக் கொள்வார்கள். சிறப்புப்பாடப்பிரிவு வகுப்பில் இருக்கும் மாணவிகளின் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தாண்டாது. பொதுப்பாடப்பிரிவு வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் மாணவிகள் எண்பது எழுபது என்றிருப்பார்கள். வகுப்பிற்குள் நுழைந்து நடுவிலிருக்கும் மேடை மேல் நின்றபடி பார்த்தால், எல்லாம் தலைக்காடாகத்தான் தெரியும். பொதுப்பாடத்திற்கும், சிறப்புப் பாடத்திற்கும் வெவ்வேறு பாடத்திட்டங்கள். சாந்தி வகுப்பிற்கும் பாலின் வகுப்பிற்கும் சேர்த்து ஒரு வினாத்தாள் தயாரித்தால் போதும்.
பாலின் போனபிறகு சாந்தியும் புளோராவும் இருந்தார்கள். புளோராவே பேச ஆரம்பித்தார். ”யாரையாவது மிரட்டிகிட்டே இருக்கணும். பிரின்சிபால்கிட்ட கூட சண்டபோடுவா”, தட்டச்சு இயந்திரத்தைத் துடைத்துக் கொண்டே உங்களுக்கு டைப்பிங் தெரியுமா?” என்றார்.
“தெரியாது மேம்”
“என் அட்வான்ஸ் கிளாஸூக்குரிய கொஸ்டின் பேப்பரை இதுலதான் அடிக்கப் போறேன். ஸ்டென்சில்ல எழுதுறதைவிட இதுதான் ஈஸிசாந்தி” என்றார். இவ்வளவு நல்லவிதமாகப் பேசுபவரிடம், ஜெரால்டும் வில்சனும் வீட்டுக்குப் போய் வேலை கொடுக்கக் கூடாதென்று சொன்ன விசயத்தைப்பற்றி கேட்கலாமா என்று தோன்றியது சாந்திக்கு. ஆனாலும் கேட்கவில்லை.
பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு “முடிச்சிட்டிங்களா?” என்றார் புளோரா.
“இன்னும் கொஞ்சம் இருக்கு. புதுசா எழுதுறதால கையெல்லாம் வலிக்குது மேம்” என்று கைகளை உதறிக் கொண்டாள்.
டிபன்பாக்ஸை திறந்தபடி
“சாப்பிட போகலையா?” என்றார் புளோரா.
“இதோ” என்று சொல்லிவிட்டு ஸ்டென்சில் பேப்பரை பாலின்மேம் மேஜையில் சாந்தி வைத்தபோது உள்ளே நுழைந்தார் பாலின்.
“ரெடி பண்ணிட்டீங்களா? ஒன்னு பண்ணுங்க. இதைக் கொடுத்துவிட்டு வர்றப்போ மூணு பேப்பர் பண்டல் எடுத்துட்டு வாங்க” என்றார்.

எடுத்துக் கொண்டுவந்து வைத்துவிட்டுத்தான் சாப்பிடபோனாள். சாப்பாடு நேரமெல்லாம் முடிந்து வகுப்புகள் தொடங்கியிருந்தன. மாலை நேரக் கல்லூரியின் ஜுலி, பியூலா சாப்பிட்டுவிட்டு போயிருந்தார்கள். சிற்றுண்டிச் சாலையில் சாந்தியை தவிர வேறு யாருமில்லாமல் வெறிச்சோடியிருந்தது.