பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 22, 2010

வெய்யில் உறையும் உவர்ப்புக் கடல் -அவனி அரவிந்தன்

1.
வெய்யில் உறையும்
உவர்ப்புக் கடலாக நீயிருக்கையில்
உன் கைகள் குவிந்த நீரில் துள்ளும்
ஒற்றை மீனாகவே நானிருக்கிறேன்...

2.
கரை தட்டிய எனது பிடிமானத்தில்
அழுந்தப் பதிந்த
பழுப்பு நிற கால் நகங்கள் மீது
அதே வண்ணத்திலான தன் அலகை
கூர் தீட்டிய கடற்குருவி
சிறு வெட்கத்துடன்
ஒரு முத்தத்தை உதிர்த்து விட்டு
நிலம் சூழ் தீவான கடலை
அளப்பதாக பறந்து சென்றது
உப்புக் காற்றில் மிதந்த அதன் பாதி முத்தமும்
பதிலுக்கு நான் வீசிய
எச்சில் படிந்த என் மீதி முத்தமும்
நடுக்கடல் சுழலின் மேற்பரப்பில்
இன்னமும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன...

-அவனி அரவிந்தன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com