பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 11, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 10












மூக்குத்தி 


வகிடு நனைத்து
நெற்றி நீவி
புருவப் பரப்பில்
சக்கரம் உசுப்பி



உட்சென்று

உயிர் இயக்கி
அவயவங்களில் 
அண்டம் முடிந்து

தசை நார்களில்
கிரியா கிளறி
நாசித் தண்டில் ஊர்ந்து
நாசியின் ஒரு பள்ளத்தில்

நாகரீகமாய் அமர்கிறது
இதுவரை நான்
அணியாத மூக்குத்தியாய்
மழை.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com