பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 5, 2010

அரங்கு ஒழிந்த இரவு - சாம்ராஜ்





துரோகத்தின் 
வெம்மையான
வசன பாக்கள்
காற்றில் அலைகின்றன.

புருட்டஸும் சீசர் மனைவியும்
ஒரே அறையை பகிர்ந்து
கொள்கின்றனர்.



சீசர் தீர்க்கமாய் புகைத்துக்
கொண்டிருக்கிறான்.
திரைச்சீலைகள் ரகசியங்களால்
விம்முகின்றன.

பெருக்க வருபவளின்
காலை வாரியலில்
இழுபட கூடும் 
கோமாளியின் கண்ணீர்.
பார்வையாளர்களின் இருக்கைகள்
மோன தியானத்தில்.

நாளை மாலை மீண்டும்
ரோமபுரி நூற்றாண்டு பிறக்கும்.
அதுவரை இருபத்தியோராம்
நூற்றாண்டு இருளில் கிடக்கும்

- சாம்ராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com