பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 1, 2010

கார்த்திக்நேத்தா கவிதைகள் -6

பிரிவுத் துயர் 



காதல்
ஒரு பிணத்தைப் போல
நம் முன் கிடக்கிறது .

கொடுவாளில்
காய்ந்து கொண்டிருக்கும்
கோழி ரத்தமென
உன் முகம் உறைய ஆரம்பிக்கிறது .



தொலைபேசி என்னை மாற்றிவிட்டாய் .
நம் காதலை நினைவுபடுத்தும்
புகைப்படங்களை தீ இட்டு எரித்தாய்
உன் கை ரேகைகளில் ஓடிக்கொண்டிருக்கும்
என் உதட்டுச் சூட்டை
என்ன செய்து விட முடியும் உன்னால் ?

உன் எச்சில்களில் ஊறிவிட்ட
என் பெயரை ஏது செய்யும் உன்
புறக்கணிப்பு ?

உன் காமத்தை
உனக்கு அறிமுகம் செய்து வைத்த
என் பார்வையை எளிதில்
மறந்து விட முடியுமா உன்னால் ?

என் முத்தம் கதறும் உதடுகளை
எந்த நாக்கைக் கொண்டு
ஈரப்படுத்திக் கொள்வாய் ?

மழைக்காலம் வந்தால்
ஏலக்காய் டீயோடு
என் நினைவும்  வந்தே தீரும் .

மெடிக்கல் கடையை கடக்கும்   போது
நேப்கின் வாங்கிக் கொண்டிருக்கும் நான்
தெரிந்தே தீருவேன் .

உன் அதிகபட்ச சந்தோசத்தின் போதும்
அளவு கடந்த வலியின் போதும்
என்னை நினைக்காமல் உன்னால்
இருக்கவே முடியாது .

உனக்குத் தர என்னிடம் இருப்பது
நீ தந்த கண்ணீர்த் துளிகளும்
நீ விரும்பிய விந்துத் துளிகளும்
மாத்திரமே .




- கார்த்திக் நேத்தா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com