பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 8, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 3


நான் கார்த்திக் நேத்தா. சேலம் மாவட்டம், சின்னனூர் கிராமம்.  திரைத் துறையில் பாடலாசிரியராக வளர்ந்து வருகிறேன்.

இவருடைய கவிதைகள் காட்சியில் தொடராய் வெளிவருகின்றன.

இவரின் ஏனையக் கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.







மழைக் கல்


குளத்தில்
மழை வீசி விளையாடுகிறாள் சிறுமி .
கல்லை விட மழை விருட்டென
மறைவதைக் கண்டு அழுகிறாள் .

குளத்தின் கண்களாக மீன்கள்
மெல்ல மெல்ல மேல் வந்து பார்க்கின்றன .
தலைகீழாய் நிற்கும் சைக்கிளில்
வந்தமரும் மேகமொன்றை
பெரிய மழை வீசி
விரட்டுகிறாள் .
அது கவ்விக்கொண்டு கலைகிறது .

வரிசையாக விளையாட்டு காட்டும்
மேகங்களை விரட்ட மழைகளை உடைத்து
நிறைய சேர்த்துக் கொள்கிறாள் .

குளத்தில் எல்லாம் தலைகீழாய்த் தெரியும்
என்று அம்மா சொன்னதை நினைத்துக்கொள்கிறாள் .
பறந்து கொண்டிருக்கும் புகையில்
எது  தலை ?
எது தலைகீழ் ? என்றும் கேட்டுக்கொள்கிறாள் .

அம்மா சொல்லாத ஒன்றில் ஆழ்ந்து ஆழ்ந்து
சிரித்துக்கொண்டே இருக்கிறாள் .

- கார்த்திக் நேத்தா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com