பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 8, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் - 14 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்

பகுதி 14


அஞ்சனாவின் நினைவுகள் அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் போனது. அவளுக்கு மிக பிடித்த விஷயம் பாட்டு. மனது மிகவும் குழம்பும் நேரம், பாடும் ராகம் மனநிலையை ஒரு நிலைப்படுத்துவது மட்டும் இல்லாது, மனநிம்மதியும் தரும்.அதை மனதாற உணர்ந்திருக்கிறாள் அஞ்சனா.4வது வயதில் இருந்து பரதநாட்டியமும், 11வது வயதில் இருந்து கர்நாடக சங்கீதமும் அம்மாவின் வற்புறுத்தலால் கற்றுக்கொண்டாள் அஞ்சனா.அம்மாவின் நிறைவேறாத ஆசைகள் இவள் மூலம் நிறைவேற்றிக்கொண்டார்கள்.மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகம் ஒன்றை கல்லூரி நாட்களில் படித்திருக்கிறாள் அவள். அதில் வரும் அனிதாவை போலவே, அஞ்சனாவிற்கும் திங்கள் அன்று விஞ்ஞானியாகி, செவ்வாய் அன்று பாடகியாகி, புதனன்று பரதத்தில் பெரிய ஆளாகி, வியாழன் அன்று மருத்துவர் ஆகி உலக புகழ் பெற்று என்று கற்பனை ஏணியில் ஏறியப்படி வளர்ந்திருக்கிறாள் சிறு வயதில்.

வாழ்க்கை வழக்கம் போல தினம் தினம் வேலை, பஸ் பிரயாணம், குளியல், சாயந்திர வேளைகளில் கடலும் மீன்களுக்கு தீனியும், ஜிஜேவின் அழைப்பு, அம்மாவுடன் சில நிமிட தொலைப்பேசி சம்பாஷணை, பார்ப்போருடன் பான் ஷூ, பான் ஸ்வாக்களால் நிரம்பியது. அஞ்சனாவிற்கு Bill murray நடித்த Groundhog day படம் போல தான் தோன்றியது அவள் வாழ்க்கை. அந்த படத்தில் பில் ஒரு விழாவை பற்றி short film எடுக்க அசுவாரசியமில்லாது அங்கு போக, ஏனோ அதன் பின் அவர் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும் Ground hog day ஆக இருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அதே நாளாக போனதால், அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை வெகு வேடிக்கையாக சொல்லும் படம் அது. Anjana was actually living her Ground hog days, in a far away island.

ப்ராலினில் இருந்த சனிக்கிழமைகளில், வெகுவும் போரடித்த பொழுதுகளில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டினாள் அஞ்சனா. வீட்டில் இருந்து விடியல் காலையில் கிளம்பி, காரில் பாட்டு கேட்டுக்கொண்டே சென்று, ஆன்ஸ் கேர்லான் ( Anse kerlan ), ஆன்ஸ் டகாமகா ( Anse Takamaka) என்று ஏதாவது ஒரு பீச்சில் சென்று நிறுத்திவிட்டு, சூரியன் உதிப்பதை பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் அஞ்சனா. ஒன்றுமே தோன்றாது காலை சூரியன் கடலுக்குள் இருந்து எழும் அந்த கணம் பார்க்க அத்தனை சுகமாக இருந்தது. ஒரு பெரிய தங்க பந்து குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட மெல்ல எட்டி பார்ப்பதும், மெல்ல பரவும் சூடும், தகதக என்று கண்முன் பரந்து விரிந்து கிடந்த அந்த அழகான நீல கடலும், சுற்றிலும் இருந்த வெள்ளை மணலும், அமைதியும் தனிமையும் கண்ணில் நீரை தான் வரவழைத்தது. மனம் நிறைந்து அமைதியாக எத்தனை விஷயங்கள் நம்மை சுற்றி நடந்தாலும், நம்முடைய தினப்படி பிரச்சனைகள் அதை எல்லாம் ஒரு சிறு திரையை போல கண்பார்வையை முழுவதும் அடைத்து நிற்கதான் செய்கிறது, ஆனால் இது போன்ற அரிய சமயங்கள் வாழ்வையின் அர்த்தத்தை வேறு ஒரு பக்கம் தான் திருப்புகிறது.

எதற்காக, ஏன், எப்படி, எதனால் இதை எல்லாம் யோசிக்கையில் invariably அஞ்சனாவிற்கு இரண்டு விஷயங்கள் தான் தோன்றும். அது ``Hitch hiker’s guide to galaxy`` புத்தகத்தில் படித்ததில் வந்த ஒரு காட்சியில் ஒரு திமிங்கலத்திற்கும் பூச்சட்டிக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையும், பாரதியார் படத்தில் வந்த `` நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!`` பாட்டில் வந்த `` போனதெல்லாம் கனவினை போல் புதைந்தழிந்தே போனதால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ`` என்றும் ’’காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைந்தெல்லாம் காண்பமன்றோ, நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ`` என்ற வரிகளும் தான். அவளுக்குள் தோற்றுவிக்கும் Different but alike scenarios.

கட்டாயம் ஒரு 10 முறையாவது படித்தால் தான் அந்த புத்தகத்தில் வரும் காட்சிகளின் அர்த்தம் உணர முடியும். ஹீரோவாக வரும் ஆர்தர் டெண்டும் (Arthur Dent), வெளிகிரகவாசி நண்பரான ஃபோர்ட் பிரிஃபெக்டும் (Ford prefect) நம் உலகம் அழிந்து போவதால், உலகை அழிக்க வந்த வோகான் போர் கப்பலில் (Vogon battleship) hitchhike ( நம்ம ஊரில் போகும் வாகனத்திற்கு கைப்போட்டு, தொத்தி கொண்டு போவது தான் hitch hiking) செய்து போக அங்கு இருந்து தொடங்கும் கதை. அந்த வோகான்களிடம் இருந்து தப்பித்து மறுபடி hitchhike செய்து, அண்டவெளியின் பிரெசிடெண்ட் ஆன சாஃபோட் பீபல்பொரொக்ஸ்ஸை ( Zaphod Beeblebrox ) கடத்திக்கொண்டு வந்த விண்வெளி கப்பலான ``Heart of Goldல்`` பயணம் செய்வார்கள். அதில் இருந்த ஒரு பிரத்யேக விஷயம் ``Infinite Improbabiliity drive’’ என்பது தான். வாழ்வில் சாத்தியமான விஷயங்கள் நமக்கு கிடைக்கக்கூடும் தான். ஆனால் சாத்தியமில்லா விஷயங்களை கூட நிஜமாக்கும் சக்தி உடைய அந்த விண்கலத்தில் தான் ஹீரோவும் நண்பர்களும் வாழ்க்கைக்கான பதில் (the ultimate answer of life) தேடி போவார்கள். இவர்களை அழிக்க எதிரிகள் அனுப்பும் இரண்டு missileல் ஒன்றை, இந்த improbability drive ஒரு பூச்சட்டியாகவும் (bowl of petunias) இன்னொன்றை ஒரு பெரிய திமிங்கலமாகவும் (Sperm whale) மாற்றும். இந்த இரண்டும் வெகு வேகமாக தரையை நோக்கி விழுந்து மறையும் சில கணங்களில், அந்த திமிங்கலமும் பூச்சட்டியும் பேசுவது, சிரிப்பு வந்தாலும், உள்ளர்த்தம் பார்த்தால், மேலே சொன்ன பாட்டின் அர்த்தமும் இவைகளின் பேச்சு வார்த்தையும் ஒன்றாக தான் தோன்றும்.

இது போன்ற கணங்களின் ஊடே, டேமியனோடு பேசும் சமயங்களில் சிறிது சிரித்தாள் அஞ்சனா. அவனையும் அவனுடைய வாழ்க்கை தத்துவங்களும், போராளி குணமும் அஞ்சனாவிற்கு வெகுவும் intense ஆக தோன்றினாலும், இது வரை இப்படி ஒரு ஜந்துவை (அப்படி தான் சொன்னாள் அஞ்சனா அவனை) பார்க்காததால், புதிய உறவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. அந்த வார இறுதியில், லூயிஸும் டேமியனும் தம் தம் தோழியரோடு லா டிக் (La digue) செல்வதாக முடிவு செய்து, இவளையும் வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதாக பயமுறுத்தினார்கள். வேறு ஒன்றும் செய்ய இல்லாததால், அஞ்சனாவும் செல்ல முடிவு செய்தாள் இவர்களோடு.

லூயிஸும் சரி, டேமியனும் சரி நல்ல திறமையாக படகு ஓட்டுபவர்கள். ஆனால் இந்து மகா சமுத்திரத்தை பற்றி சொல்லவேண்டியது இல்லை. எப்போது மனம் மாறும் என்றே தெரியாது, சமயத்தில் தரையில் கார் ஓடுவது போல படகு செல்லும், சமயத்தில் ரங்கராட்டினம் போல மேலே கீழேயும் செல்லும். அஞ்சனா படகு சவாரி பிடித்தாலும், தலை சுற்றல், வயிற்றை பிரட்டி வரும் வாந்தியால் முழுமையாக அனுபவிக்க முடியாது என்று தோன்றி, வரவில்லை என்று சொல்லி இருந்தாள். ஆனால் ஒரே பிடிவாதமாக நின்று இருவரும் அழைத்தார்கள்.

மொத்தம் இந்த இரு ஜோடிகளோடு, இன்னும் இரண்டு நண்பர்கள், ஆக இவளோடு சேர்த்து 7 பேர் சனிக்கிழமை காலை கிளம்பி இரவு தங்கிவிட்டு ஞாயிறு திரும்புவதாக முடிவு செய்தார்கள். என்ன மாதிரியான உடை எடுக்கவேண்டும் என்று தெரியாது, லூயிஸின் தோழி ஆஞ்சலினை (Angeline) அழைத்தாள். அவளும் ஒரு இரண்டு மூன்று நீச்சலுடுப்பும் ஒரு evening wearம், போட்டுக் கொண்டு செல்ல சாதாரண உடைகளும் எடுக்க சொன்னாள். இங்கு வந்த பின், மிராண்டாவோடு கடைக்கு செல்ல, அஞ்சனாவை நீச்சல் உடை வாங்க சொன்னாள் அவள். இதற்கு முன் நீச்சல் உடை எப்போதும் அணிந்ததில்லை அஞ்சனா. ஊரில் தண்ணீரில் நீந்தும் சமயம் எல்லாம், அது கடலோ, குளமோ, நதியோ போட்டு இருக்கும் உடையோடு அப்படியே முங்கி எழுந்து தான் பழக்கம் அவளுக்கு. நீச்சல் உடை படங்களில் மட்டுமே தான் பார்த்திருக்கிறாள், ஆனால் தானே அணியவேண்டும் என்ற சந்தர்ப்பம் இங்கு வருவதற்கு முன் என்றும் தோன்றவில்லை அவளுக்கு. அப்படி அணிகிறேன் என்று சொன்னால், அம்மாவின் முகம் எப்படி இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே, 3 நீச்சல் உடை வாங்கினாள்.

தனக்கு எப்படி இருக்குமோ என்று கூட தெரியாது வாங்கி வந்த உடையை, வீட்டில் போட்டு பார்க்க அத்தனை கூச்சமாகி போனது அவளுக்கு. இத்தனை குறைவாய் துணியுடுத்தி வெளியே நடக்க நேர்ந்ததில்லை. சேய்ஷல்ஸில் இது வரை போன கடற்கரைகளில் பார்த்த எல்லா பெண்களும் இப்படி தான் உடுத்தியிருப்பார்கள். Dressing appropriately is a very important thing there in seychelles. எப்படியோ இது அத்தனையும் பையில் வைத்துவிட்டு, அவர்களோடு கிளம்பினாள் அஞ்சனா. லா டிக் தீவு சேய்ஷல்ஸில் இருந்த மூன்றாவது அதிக ஜனத்தொகை உள்ள இடம். ப்ராலின் ஜெட்டியில் இருந்து பார்த்தாலே தெரியும் அந்த தீவு. அதிகம் போனால் 10 நிமிடம் தான் ஆகும். காலை ஒரு 11 மணி இருக்கும் போது கிளம்பினார்கள் எல்லோரும்.

சிகப்பு கோடு போட்டு ஃபீனிக்ஸ் (Phoenix) என்று பெயர் வைத்த வெள்ளை படகு (yacht), இதில் ஒரு அறையும், குளியலறை வசதியும் இருந்தது. படகின் டெக்கில் (Deck) பெரிய Barbecue grill, பீர் கிரேட்டுகள், பெரிய music system, அந்த அறையில் சமைக்கும் பொருட்களும் இருந்தது. எல்லோரும் சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் புறப்பட்டார்கள். அஞ்சனாவிற்கு எப்போதும் போல odd man out போன்ற தோன்றிக்கொண்டே இருந்தாலும், இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டாள். ஆனால் படகு லா டிக் பக்கம் செல்லாது நடுக்கடலுக்குள் சென்றதை பார்த்து, படகு ஓட்டிக்கொண்டிருந்த மார்வினிடம் (Marvin) வந்து பேச தொடங்கினாள். போன முறை டிஸ்கோ சென்ற போது வந்த 25 பேரில் ஒருத்தன். ஈறு தெரிய சிரிக்கும் அவனை பார்த்து கேட்டாள் எங்கு செல்கிறோம் என்று. அவன் இன்னும் சற்று தொலைவில் இருந்த கசின் மற்றும் கியுரியஸ் ( Cousin and curiese ) தீவுகளுக்கு போக போவதாய் சொன்னான்.
இந்த இரு தீவிலும் மக்கள் நடமாட்டமே கிடையாது என்றான் மார்வின். அஞ்சனா அவனிடம் பிறகு ஏன் அங்கு போகிறோம் என்று கேட்க, ‘’ You will see, girl! ‘’ என்றான். 

அவனிடம் இருந்து விலகி வந்து படகின் கம்பிகளில் சாய்ந்த படி நிற்க, அவனுடைய காதலி ஷீபாவிற்கு (sheebha) முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த டேமியனை பார்த்தாள் அஞ்சனா. அவளை பார்த்து கண்சிமிட்டிவிட்டு ஷீபாவிற்கு முத்தம் கொடுத்தபடி நின்றான். அஞ்சனா அவனை பார்த்து, `` oh god! Get a grip or a room!‘’ என்று கிண்டல் செய்தாள். பட்டவர்த்தனமாக இது போல முத்தமோ, கட்டியோ பிடித்தால் பொதுவாக சொல்லும் வார்த்தை அது. இவர்களிடம் இருந்து தள்ளி, படகின் முன்பகுதிக்கு சென்றாள் அஞ்சனா. ஏனோ அந்த இடத்திற்கு சென்றதும், டைட்டானிக் (Titanic) படத்தில், ஒரு காட்சியில் டிகேப்ரியோவும், கேட்டும் (De caprio, Kate), ஜாக் மற்றும் ரோஸாக (Jack and Rose) மாறி கையை விரித்து நின்றது தான் நினைவிற்கு வந்தது. நிஜத்தில் படகின் முனையில் நின்று வேகமாக போக, பறப்பதை போலவே இருக்க, அந்த நிமிடத்தில் தொலைந்தாள் அஞ்சனா. மத்தியமாகி இருந்தாலும், மழை வருவது போல இருந்த அந்த வானமும், வெயில் இல்லாது சிலிர்ப்பாய் வீசிய காற்றும், அணிந்திருந்த நீண்ட பாவாடை சலசலக்க, முடி காற்றில் பறக்க சுற்றி சுற்றி பார்த்தப்படி நின்று கொண்டு இருந்தாள்.

லூயிஸ் அங்கு இருந்து கத்தினான், `` அஞ்சனா, Missing Didier... Are you, sweetheart?’’ என்று. எல்லோரும் சத்தமாக சிரிக்க, அஞ்சனா வெறுமே முகத்தை நன்கு பழித்து காட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள். சிறிது தூரம் போனதும், படகின் ஒரு புறம் டால்பின் ஒன்று படகை தொடர்ந்து வருவதை பார்த்தாள் அஞ்சனா. குதித்து குதித்து வந்த டால்பினை பார்த்ததும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இது வரை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு விலங்கை நேரில் பார்க்க நேர்ந்ததும் அஞ்சனாவின் சந்தோஷத்தை வெளியே சொல்லவே முடியவில்லை.

எல்லோரையும் கூப்பிட்டு காட்டினாள் அஞ்சனா. இவளை தவிர எல்லோருக்கும் அது எப்போதும் காணக்கூடிய விஷயம் ஆதலால் அவர்கள் அத்தனை பெரியதாய் react செய்யவில்லை. டேமியன் ஷீபாவிடம் இருந்து விலகி வந்து, அஞ்சனாவின் பக்கம் நின்று டால்பினை பார்த்தான். திரும்பி மார்வினிடம் harpoon இருக்கா என்று கேட்க, பதறி போனாள் அஞ்சனா. ``ஏண்டா அதை கேட்கிறே`` என்று ரொம்பவும் கோபித்துக்கொண்டாள். பெரிய ஈட்டி போல இருக்கும் Harpoon வைத்து தான் பெரிய நீர்வாழ் உயிரினங்களான சுறா, திமிங்கலம், டால்பின் போன்றவற்றை கொல்வார்கள். இவள் கோபத்தை பார்த்து சிரித்து விட்டு, டால்பின் குழம்பு சாப்பிட்டு நாளாகி போயிற்று என்று சொன்னான். நிஜத்தில் கடம்பத்தூரில் அப்பாவிற்கு பிடிக்கும் என்று சுறாபுட்டு செய்யும் போது, மூக்கை பிடித்துக்கொள்வாள். சேய்ஷல்ஸில் வந்து ஒரு பார்ட்டிக்கு போக அந்த டேபிள் முழுக்க ஆக்டபஸ் வறுவல், டால்பின் குழம்பு, சுறா இன்னும் இப்படி பெயர் தெரியா பெரிய பெரிய மீன்களை குவித்து வைத்திருந்தார்கள். அஞ்சனா ஓடியே வந்துவிட்டாள், டால்பினை சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்ததும்.

நாயை விட அதிக மூளை இருக்கும் பாலூட்டியான டால்பின் பற்றி நிறைய படித்திருக்கிறாள் அஞ்சனா. தூங்கும் சமயம் ஒரு பக்கத்து மூளையும் கண்ணும் உறங்க, இன்னொரு பக்கத்து மூளையும் கண்ணும் விழித்து இருக்க வைக்கும் திறனுடையது. ஆனாலும் அத்தனை பிடிக்க காரணம் டிஸ்கவரியில் பார்த்த ஒரு டாகுமெண்டரியால் தான். டால்பின்கள் ஒன்றோடு ஒன்று பேச உபயோகிக்கும் சப்தம் ultrasound போன்றது. ஒரு 9 மாத கர்ப்பஸ்திரியின் வயிற்றில் இருந்த குழந்தையோடு பேசியதும், அந்த குழந்தை வயிற்றில் respond கொண்டு இருந்ததும் பார்த்த நாள் முதல் பைத்தியமாகிவிட்டால் டால்பின் மேல். டேமியன் அஞ்சனாவின் முறைப்பை பார்த்து, ``சரி சரி, do you want to swim with it?`` என்று கேட்டான். அஞ்சனா நீச்சலே இங்கு வந்து தான் பழக தொடங்கியிருந்தாள். இதில் நடுக்கடலில் டால்பினோடு நீந்துவதா என்று சொல்லி யோசிக்க, கடலை தொட்டது போன்ற படகின் தாழ்வு பகுதிக்கு அழைத்தான் டேமியன் எல்லோரையும். பார்த்துக்கொண்டே இருக்கும் போதே தண்ணீரில் குதிக்க, டால்பின் இவன் அருகே வந்தது. மெதுவாக அதனோடு பழகி, அஞ்சனா நிற்கும் இடத்திற்கு அழைத்துவந்தான்.

இவளும் ஆஞ்சலினும் இறங்கி போய் படகின் ஓரத்திற்கு வந்து முட்டி போட்டு அமர்ந்து டால்பினை தடவினார்கள். வழுவழுவென்று ஈரமாக இருந்த டால்பினை வாஞ்சையோடு தொட, அது கெக்கலிப்பது போல சப்தமிட்டது. ஒரு வேளையாக அங்கு இருந்து கிளம்பினார்கள் அதற்கு சில மீன் துண்டுகள் உணவாக கொடுத்துவிட்டு. அந்தி சாய தொடங்கி இருந்த நேரத்தில் கியூரியஸ் தீவு போய் சேர்ந்தார்கள்.

வெறும் மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த தீவு அது. கடலின் ஓரத்திலேயே ஒரு இடத்தில் சில டெண்ட் அமைத்து அமர்ந்தனர் அத்தனை பேரும். நல்ல நிலவொளி, அழகான காற்று, நல்ல சிரிப்புகளின் ஊடே, மீன் barbecue grill செய்துக்கொண்டிருந்தார்கள். மார்வினும், ஹாரிஸும் சென்று விறகு எடுத்துவந்து Bonfire தொடங்கினார்கள். அதற்குள் நன்கு இருட்டியிருக்க, நெருப்பின் சூட்டில் அனைவரும் குளிர் காய்ந்தார்கள். தகதகக்கும் தீ ஜ்வாலையில் எல்லோரும் வெகு அழகாக இருந்தார்கள் அஞ்சனாவிற்கு. லூயிஸ் கையில் கிடாரும், மார்வின் கையில் நம்மூரில் தென்படும் பறை மேளத்தோடு பாட்டு பாடத்தொடங்கினார்கள். டேமியன் அஞ்சனாவின் பக்கம் அமர்ந்து சொன்னான், இது தான் ``செகா இசை`` என்று. பீர் கேன்கள் ஒன்றன் பின் ஒன்றாக காலியாக, ஆஞ்சலினும், ஷீபாவும் இப்போது ஆட தொடங்கினார்கள். செகா இசைக்கு ஆடும் நடனத்தில் முக்கியமான விஷயம் இடுப்பு ஆட்டுவது தான்.  இருவரும் இசையில் லயித்து தன்னை மறந்து அத்தனை லாவகமாக கிறக்கமாக ஆடினார்கள். The ambience of that place was one of a kind, one she has never experienced before. அஞ்சனாவிற்கு அந்த இருட்டும், நிலவும், கடலும், நெருப்பும், இசையும், நடனமும் சேர்த்து பார்க்க ஒரு overwhelming experience ஆக இருந்தது.

எல்லாம் ஒரு மாதிரி அடங்க, சிறு பேப்பர் தட்டில் எல்லோரும் சாப்பிட தொடங்கினார்கள். டேமியன் கேட்டான், ``இந்த இசை எப்படி இங்கு வந்தது என்று தெரியுமா`` என்று. அஞ்சனா தெரியாது என்று சொல்ல, அவன் சொன்னான். இந்தியாவில் இருந்து முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட அடிமைகளின் இசை இது என்றான். திராவிட இனத்தின் தோல் பறை தான் இது என்றான். இங்கு வந்து தனித்துவிடுப்பட்ட போது அடிமைகள் இது போன்ற மேளங்கள் அமைத்து அவர்கள் கதையை பாடினார்கள் என்றான்.

இதற்குள் அவளுக்கு வெகு அருகில் ஏதோ சலசலப்பு கேட்க, அஞ்சனா பயந்தே போனாள். அவளுக்கு வெகு அருகே ஒரு பெரிய ஆமை. எத்தனை பெரியது என்றால் அந்த ஆமையில் மேல் இவள் அமரலாம். கிட்ட தட்ட 5 அடி நீளமும், 200-250 கிலோ எடை இருக்கும். அத்தனை பெரியது. இவள் நடுங்கியதை பார்த்து, எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க, இவளுக்கு வெட்கமாகி போனது. இந்த தீவில் மட்டும் தென்படும் இந்த ராட்சஸ ஆமைகளுக்கு கிட்ட தட்ட வயது 120ல் இருந்து 150 வரை இருக்குமாம். அது மட்டும் இல்லாது, இந்த தீவு, முன்பு எதற்காக வைத்திருந்தார்கள் என்றால் வெள்ளையர்களால் இப்படி அடிமை படுத்தப்பட்ட மக்களுக்கு தொழுநோய் வந்தால், இந்த தீவில் வந்து விட்டு விடுவார்களாம். ஒரு சமயம் மட்டும், இந்த 3 கிலோமீட்டர் தீவில் 800க்கும் மேற்ப்பட்ட தொழுநோயாளிகள் இருந்தார்கள் என்றும் இந்த தீவில் உணவு இல்லாது, புண்களுக்கு மருந்து இல்லாது, ஆண்கள் பெண்களும் abandon செய்யப்பட்டார்கள் என்று சொன்னதை கேட்க அஞ்சனாவிற்கு மனதே வலித்தது.

பெரும்பாலும் இந்த தீவில் தென்படுவது தென்னை மரம் தான். அதை தவிர சாப்பிட என்ன கிடைத்திருக்கும் அந்த மக்களுக்கு என்று நினைத்தாள் அஞ்சனா. மீன் பிடிக்கவோ சமைக்கவோ கூட ஒன்றும் இல்லாத சமயத்தில் எத்தனை கொடுமையாக இருந்திருக்கக்கூடும். தொழுநோய் ஒரு தொத்து வியாதி, பெரும்பாலும் சரியான சுற்றுச்சூழல் இல்லாது அடைசலாய் வாழும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மக்களிடம் மிக வேகமாக பரவும் என்று படித்திருக்கிறாள்.

அங்கு இருந்த சில கற்களை காட்டினான் ஹாரிஸ். அங்கு இருந்து இறந்த சில நோயாளிகள் கல்லில் பதித்திருந்த வார்த்தைகளையும், உருவங்களையும். அந்த இருட்டில், வெறும் அந்த தீயின் துணையோடு அஞ்சனா பார்க்க, அங்கு இருந்த சிலது வட்டெழுத்து போலவும், ஒரு உருவம் முருகர் போலவும் இருக்க, அவளுக்கு நெஞ்சை அடைத்தது. எந்த கிராமத்தில் இருந்த ஆணோ பெண்ணோ, விருப்பத்திற்கு மாறாக தன் பூமியில் இருந்து, தனியேவோ அல்லது குடும்பத்தோடோ கொண்டு வரப்பட்டு, பச்சை பசேல் வயல், சொந்த பாஷை எல்லாம் மறைந்து போக, சுற்றி சுற்றி கடலும், உப்பு காற்றும், கருப்பு மனிதர்களும், புரியாத மொழியும், வாழ்க்கையும் தென்பட இருக்கும் இந்த பூமிக்கு வந்து, நோய்வாய் பட்டு, ஏதோ ஒரு தீவில் வந்து கைவிடப்பட்டு, நாட்டை பற்றியும் குடும்பத்தை பற்றியும் யோசித்து, இனி பார்க்கவே முடியாது என்று மனதொடிந்து இறக்கும் முன் கல்லில் பதித்த வரிகள் தான் இவள் பார்ப்பது.

இருக்கும் அந்த நேரத்தில் இருந்து சட்டென பின்னுக்கு 200 ஆண்டுகள் கொண்டு போன நினைவால் அந்த தீவை பார்த்தாள் அஞ்சனா. இந்த தீவில் ஒரு காலத்தில் உடல் முழுக்க அழுகி புழுக்கள் தாங்கி, மறிக்கும் மக்களும், 150 வருடங்கள் வாழும் உறுதியான ஆமைகளும் ஒன்றாக சேர்ந்து இருந்திருக்கிறார்கள். Anjana had an epiphany that night. 

- தொடரும்

யமுனா ராகவன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com