யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது.
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்
அஞ்சனாவின் தந்தைக்கு குறுக்கெழுத்து போட்டிகள் என்றால் அத்தனை இஷ்டம். அதுவும் Indian Expressல் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் Cross words and Scramble பகுதி முடிக்காமல் போனால், அந்த ஞாயிறு அர்த்தம் இல்லாதது போல என்பார். அவரால் ஆங்கிலத்தின் அழகு தெரியத் துவங்கியது அஞ்சனாவிற்கு. Vocabulary என்பதன் அர்த்தமும் பலமும், ஒரு வார்த்தையை நினைவுப்படுத்தும் இன்னொரு வார்த்தையும் விட ஆங்கிலம் அவளுக்கு மிக பிடிக்க, அப்பாவின் அடர்ந்த புருவமும், கூர்ந்த கண்களும், பேனாவை கையில் பிடித்தபடி, யோசனையில் லேசாய் சுறுங்கும் மூக்கும் நெற்றியும், வார்த்தை கண்டுப்பிடித்தவுடன் உதட்டோரம் மீசையினுள் நெளியும் சிறு சிரிப்பும், cross wordல் இருந்த வெறும் skeleton போன்ற இடங்களை வார்த்தையால் நிரப்பி அர்த்தம் சொல்லும் நிமிடங்களும் நெறுக்கமும் அவர் வாசமும் தான் காரணம்.
அதனால் தவறாது அப்பாவின் அருகே தோளில் சாய்ந்தமர்ந்து அவர் எழுதும் வார்த்தைகளை கவனிக்க தொடங்கினாள் அஞ்சனா. அப்பா அவளுக்கு வாசிக்க கற்றுக்கொடுத்த முதல் புத்தகம், Oxford dictinionary. எப்படி வார்த்தைகளை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் எத்தனை வார்த்தைகள் இருக்கிறது ஒரே சொல்லிற்கு என்றும் சொல்லிக்கொடுக்க, அதில் ஆழ்ந்து போனாள் அஞ்சனா. ஒரு வார்த்தையை பார்க்க அது இன்னொரு வார்த்தையில் போய் விட, அங்கு தொடங்கி இன்னொன்று. இப்படி ஒரு chain reaction நடக்க, ஆங்கிலமும் அவளுக்கு பிடிக்கத்தொடங்கியது. வெகு விரைவில், தந்தையோடு அமர்ந்து அவளும் வார்த்தைகள் எடுத்துக்கொடுக்கும் அளவிற்கு போனாள். இன்று வரை அவளுக்கு மொழிகள் பற்றி தெரிந்துக்கொள்ள அத்தனை பிடிக்கும்.
அம்மா அப்பாவின் களைப்பூட்டும் வேலையால், மதியங்களில் ஒரு இரண்டு மணி நேரமாவது உறங்கியெழுந்தால் தான் மறுபடி இரவுகளில் போய் நோயாளிகளைப் பார்க்க இயலும். அப்பா செய்தித்தாள் வைத்தப்படி படுத்திருப்பார். நிறைய சமயங்களில் பேப்பர் ஒரு கையிலும் பேனா ஒரு கையிலும் வைத்தப்படியே உறங்கியிருப்பார். கைவலிக்குமே என்று அஞ்சனா பூனை போல போய், அதை கையில் இருந்து மெல்ல எடுக்க முயல, திடுக்கிட்டு எழுவார். அதே போல தான், எப்போதும் தூக்கத்தில் இருந்து எழுப்பும்போதும், எத்தனை மெதுவாக சென்று அழைத்தாலும் பதறியெழுவார். அவளும் அப்படிதான், அண்ணாவும் அப்படி தான் எழுவார்கள். அஞ்சனாவிற்கு ஒரு போதும் அப்படி எழுப்பவோ எழவோ பிடிக்கவே பிடிக்காது. அப்படி பதறி எழும் அந்த நொடி முழுக்க முழுக்க adrenaline rush நிறைந்தது. சில வேளைகளில் அப்படி எழுந்தது நல்லதாகினும், பல சமயம் அது தொடர்ந்து வரும் தலைவலியும், கைக்கால் தடதடப்பும், எரிச்சலும் அவளுக்கு பிடிக்காது.
இப்போதும் டேமியன் எழுதிய இந்த கட்டுரையை ஆழ்ந்து படித்துக்கொண்டு இருந்தவளை அப்படி துணுக்குற வைத்தது, கதவு படபட என்று தட்டும் ஓசை. புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, கண்ணாடி ஜன்னல் அருகே சென்று பார்த்தாள் அஞ்சனா. தனியாக இருப்பதாலும், அங்கு அதற்கு முன்பு நடந்த சில சம்பவங்களாலும், சட்டென கதவை திறக்கும் பழக்கத்தை விடுத்து, திரைச்சீலையை விலக்கி பார்த்து, தெரிந்தவர்களானால் மட்டுமே கதவை திறக்க பழகினாள். இப்போதும் அப்படி பார்க்க, ஜீப் ஒன்று வாசலில் நிற்க, லாடக்யூர் (ladacoure) பெண்கள், கிரிஸ்டியானா (Christiana) மற்றும் ஃபெமினா (Femina) இருவரும் நின்றிருந்தார்கள்.
இந்த 8 மாதக்காலத்தில் ஓரளவு அங்கு இருந்த அனைவரும் பரிச்சயமாகியே இருந்தார்கள். ஆனாலும் அவளது விடுப்பு நாட்களில் யாரையும் பார்க்கவேண்டாம் என்று சீனிவாசன் செட்டி சார் சொன்னது நினைவுக்கு வர, அவள் கதவை திறந்தாள். அஞ்சனா கிரிஸ்டியானாவை பார்த்து, உடம்பு சரியில்லையா. இன்று விடுமுறை ஆயிற்றே என்று கூறினாள். அதற்கு அவள், உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயம் பேசவேண்டும், ஒரு 10 நிமிடம் தாருங்கள் டாக்டர் என்றாள். அதுவரை கிரிஸ்டியானாவையே பார்த்து பேசிக் கொண்டிருந்தவள், ஃபெமினாவை பார்த்தாள் அஞ்சனா. எப்போதும் இருக்கும் குறும்பும், சிரிப்பும் இல்லாது Femina looked like a tortured Zombie.
ஏதோ சரியில்லை என்று பட, வீட்டினுள் வரவழைத்தாள் இரு பெண்களையும். ஃபெமினாவால் இருக்கையில் சரியாக உட்காரமுடியவில்லை, நாற்காலியிலேயே சரிந்தாள் குடிகாரியை போல. அதனால் அஞ்சனா ஒரு பக்கமும், கிரிஸ்டியானா ஒரு பக்கமும் பிடிக்க, consultation அறையில் இருந்த படுக்கையில் படுக்கவைத்தார்கள். கண்கள் முழுக்க தளும்பிய கண்ணீரோடு இருந்த கிரிஸ்டியானாவையும், கண்கள் செறுகி, கழுத்தெல்லாம் பல்லால் கடித்த தடம் வைத்திருந்த ஃபெமினாவையும் மாறி மாறி பார்த்தாள் அஞ்சனா. முகமும் மனமும் கறுத்து, என்னாவாக இருக்கும் என்று ஒருவாறு யூகித்து, இருக்கையில் வந்து அமர்ந்து கிரிஸ்டியானாவை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டாள்.
ப்ராலின் வந்ததில் இருந்து லாடக்யூர் குடும்பம் அஞ்சனாவிடம் வந்து தான் சிகிச்சை பெற்று சென்றார்கள். எப்போதும் அவளுக்கு ஆசையாக இருக்கும் இந்த குடும்பத்தை பார்க்க, அன்பான அப்பா அம்மா, இரண்டு பெண்கள் ஒன்றாக தான் வருவார்கள். இருவருமே அத்தனை அழகு பார்க்க. ஒல்லியாக இருந்தாலும், குச்சி போல இல்லாது, திரண்ட உடல்வாகும், ஏதோ ஒரு தலைமுறையில் ஃப்ரெஞ்ச் மக்களோடு கலந்ததில், சிகப்பாகவும் இல்லாது, கறுப்பாகவும் இல்லாது, Mexican போல ஒரு dusky complexion, கூர் மூக்கு, உயர்ந்த தாடையும் வைத்து, பெரியவள் கொஞ்சம் ஹிந்தி நடிகை Sonali bandre போலவும், இளையவள் தெலுங்கு நடிகை Ileana போலவும் இருப்பார்கள்.
என்ன படித்திருப்பினும், ஒரு அழகான பெண்ணை பார்க்க நேர்கையில் எல்லா பெண்களுக்கும் ஒரு லேசான பொறாமை வருமா? கடவுளுக்கு எத்தனை ஓரவஞ்சனை என்று தோன்றுமா? Genes are such a funny thing. அஞ்சனா குடும்பத்தில் அண்ணாவும், தம்பியும் தவிர மற்ற எல்லோரும் பெண்கள். ஏனோ எல்லோரும் இவளை விடவும் அழகு தான், கலரும் கூடுதல் தான். அத்தை பெண்களும், சித்தி பெண்களும் எல்லோருக்கும் நல்ல மாசுமருவில்லாத சருமம், நல்ல பல்வரிசை, இன்னும் அழகான முடி, நல்ல கலரும் கூட. Super Mario விளையாட்டில் பச்சை மேகங்கள் மேலிருந்து விழும் orange with red dotted Mushrooms நகர்ந்து தானாக ஒரு இலக்கை random ஆக சென்றடைவது போல, இவளை மட்டும் skip செய்து நல்ல விஷயங்கள் தாங்கியிருந்த Genes, மற்ற பெண்களிடம் போய் சேர்ந்ததோ என்று தோன்றும் அவளுக்கு. அழகான அவள் வீட்டு பெண்களோடு ஏதாவது ஒரு விசேஷத்தில் நிற்கும் போது, பொறுந்தாதது போலவே இருப்பினும் வேறு வழியில்லாது நிற்கவேண்டியிருக்கும் போதெல்லாம், அஞ்சனாவிற்கு அவளை பார்க்கையில் Ugly stepsister amongst all pretty Cinderallas போல தோன்றும்.
இந்த வேளை, இந்த இரு பெண்களும் பார்க்க வேறுவிதமாக இருந்தனர். எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லை. ஒரு 6 மாதமாகவே இவ்விரு பெண்களையும் அஞ்சனா பார்க்கவில்லை. 22 வயதாகும் கிரிஸ்டியானாவிற்கு ஒரு வயதில் ஒரு மகள் இருந்தாள். மார்செலா (Marcela)... குண்டு கன்னங்களுடன், பழுப்பு கண்களும், தலை முழுக்க சாம்பல் வண்ண சுருண்ட முடியோடும், குவிந்த உதடோடும் ஒரு குட்டி பொம்மை போல இருக்கும் அவளை அஞ்சனாவிற்கு மிகப் பிடிக்கும். இப்போதெல்லாம் மார்செலாவிற்கு உடம்புக்கு முடியலை என்றால் கூட்டிவரும் அவளுடைய பாட்டி தாத்தா, முகமும் சரியாக இல்லை. ஆனால் அவர்களாக சொல்லாது அவரவர் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது பிடிக்காது அஞ்சனாவிற்கு. அதனால் வந்தால் மருந்து கொடுத்து பொதுவாய் விசாரித்து அனுப்பிவைப்பாள்.
மருத்துவத்தொழில்... மிக வினோதமான ஒன்று. ஒரு அலுவகத்தில் வேலை பார்க்க நேர்ந்தால் அந்த அலுவகத்தில் இருப்போர் பற்றி ஓரளவு தெரிய வரும் ஆனால் these acquaintances and relationships will always come with its own constrains. ஓரளவிற்கு மேல் இருக்கும் கோட்டை யாரும் தாண்டிவர முடியாது, மிகவும் நெருக்கமாக இருந்தாலே ஒழிய. பெரும்பாலும் உள்ள வேலைகள் இப்படி தான். ஆனால் ஒரு மருத்துவரிடமும் முன்பின் தெரியாத நபராகிலும் அந்தரங்கங்களும் பகிர, முழு உடலும் நிர்வாணமாக்கி காட்ட ஒரு தயக்கமும் இருப்பதில்லை. Being a doctor, you really have to be calm and collected, no matter what you come across. இது மருத்துவ நியதி. ஒரு பெண்ணாய் அஞ்சனாவிற்கு நிறைய சமயங்களில் கூச்சமாகிலும், Doctor அஞ்சனாவாக அதே சமயங்களை dignity, professionally attitude, courtesy இப்படி எல்லாம் தாங்கி நடக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.
ஒரு வளர்ந்த ஆண் வந்து எனக்கு ஆண் தன்மை குறைந்து போய்விட்டது. என்னால் என் துணைவியோடு உடலுறவு வைத்துக்கொள்ளவே முடியவில்லை என்று சொல்லிக்கேட்டாலும் சரி, திருமணமாகாத பெண் வந்து நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன், என் வீட்டில் சொல்லவேண்டாம். மருந்து தாருங்கள் என்றாலும் சரி, கணவன் அடித்தான் என்றோ சூடுவைத்தான் என்றோ தொடையையோ மார்பையோ காட்டும் பெண்ணாகினும் சரி, வீட்டில் யாரும் பேசவே மாட்டேன் என்கிறார்கள், எது கேட்டாலும் முகம் சுணங்கி பதில் வருகிறது, ஏதாவது கஷ்டமில்லாது சாக மருந்திருக்காம்மா என்று கேட்கும் முதியவரானாலும் சரி, இது போன்ற நிகழ்வுகளை Emotional ஆக பார்க்காது மருத்துவ கண்ணோட்டத்தோடே தான் பார்க்கவேண்டும் என்கிறது HIPPOCRATES OATH. பட்டம் வாங்கி இத்தனை நாள் ஆகினும், முகத்தில் எந்த ஒரு சலனமும் காட்டாது அந்த அந்த மக்களின் முன் பிரச்சினைகளை தீர்க்கமுடிந்த வரை தீர்த்து, அந்த கணத்தோடு அந்த விஷயத்தை மறப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. அதை விடவும் கடினம் அடுத்தமுறை அவர்களை காண நேர்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்த விஷயமே மனதில் கொள்ளாது நடக்கவேண்டியது தான். ‘’Patch adams’’ படத்தில் Robin Williams கேட்பார், `` what is wrong if you show a little bit of compassion’’ என்று கேட்பார். ஏனோ அதற்கான விடை அவளுக்கு இன்னமும் வரவில்லை.
இப்போதும் உதடு விம்ம உட்கார்ந்திருந்த கிரிஸ்டியானாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சனா. There is a slippery side in doing medicine as a career. ஒரு எழுத்தாளரோ இயக்குனரோ யாரை பார்த்தாலும் அதில் ஒரு கதை பார்ப்பாராம். ஒரு cameraman பார்க்கும் எல்லா ஆட்களையும் இடத்தையும் ஒரு lens வழியே பார்ப்பது போலவேதான் பார்ப்பாராம். காவல்துறையில் இருப்பவர் எல்லாவறையும் குற்றவாளியின் கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பாராம். Curse of the profession holds life in its talons.. இது போலவே மருத்துவராக நேர்ந்தபின் மனிதர்களின் பெயர்கள் மறந்து நோய்கள் மட்டுமே நினைவில் நின்றது. House surgeon ஆனபின் ward rounds போகும்போது, இந்த bed Diabetic ketoacidosis, அடுத்த bed infective exacerbation of COPD இப்படி தொடங்கி பாதி நேரம் பெயர், முகம், நிறம், குலம், கோத்திரம் எல்லாம் மறந்துபோனது, இன்று வரை தொடர்கிறது. ஆனால் பார்ப்பதிலேயே என்ன உடல் கோளாறாக இருக்கும் என்று ஒரு 60% தெரியத்தொடங்கிவிட்டது. ஆனால் அவர்களாக வந்து சொல்லாது இவளாக போய் எதுவும் கேட்பது இல்லை.
கிரிஸ்டியானா இன்னும் கொஞ்சம் ஒல்லியாகி, கன்னம் லேசாக இடுங்கி, கண்கள் குழிவிழுந்து கருப்பு வளையம் கொண்டு, சருமம் வரண்டு, கொஞ்சம் முகம் வெளுத்து, முடியெல்லாம் கொஞ்சம் கொட்டி, சற்று வயதானது போல தோன்றியதிலேயே தெரிந்தது அஞ்சனாவிற்கு என்ன நடந்துக்கொண்டிருந்தது என்று. சேய்ஷல்ஸில் தான் முதன்முதல் போதை பொருட்களை அத்தனை பக்கத்தில், அத்தனை சர்வசாதாரணமாக மக்களின் ஊடே புழங்குவதை பார்த்தாள் அஞ்சனா. Forensics என்ற பாடப்பிரிவில் Toxicology என்ற துணைப்பிரிவு உண்டு. இது வரை அறிவியல் கண்டுப்பிடித்த எல்லா வேதிப்பொருட்களும், இயற்கைப்பொருட்களும் மனித உடம்பில் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்றும், Narcotics பிரிவில் soft drugs and hard drugs என்று ரகவாரியாகவும், Pathophysiology of addiction பற்றி படித்திருந்தாலும், Forensic departmentல் வைக்கப்பட்டிருந்த specimens மட்டுமே பார்த்த அவளுக்கு, முதன்முறை மார்க்கோ, cat coco படகில் boat skipper ஆக வேலை செய்பவன், Full blown Heroin withdrawal symptoms கொண்டு வந்தப்போது சிகிச்சை கொடுத்தில் தான் புரிந்தது, எத்தனை எளிதில் இந்த பொருட்கள் நடுத்தர மக்களின் கையில் இங்கே கிடைக்கிறது என்று.
கடம்பத்தூரில் அஞ்சனாவின் வீட்டின் அருகே ஒரு சிறிய அங்காளம்மன் கோயில் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் அத்தனை கூட்டமாக இருக்கும் அங்கே. ஒரு பக்கம் எலுமிச்சைப்பழத்தில் விளக்கு ஏத்திக்கொண்டிருக்கும் எல்லோரும், பெரும்பாலும் சிகப்பு உடையுடுத்தி வெவ்வேறு வயது பெண்கள், வெவ்வேறு அகல குங்குமப்பொட்டோடு, வெவ்வேறு அடர்த்தியில் மஞ்சள் முகத்தில் மின்ன வலம் வருவார்கள். அதை பார்க்கும் அஞ்சனாவிற்கு எப்போதும் தோன்றுவது மருத்துவமனையில் பணிபுரியும் nurses தலையில் அணியும் cap. அது அவர்களின் experience மற்றும் position பொறுத்து பெரிதாகி கொண்டே போகும். இருப்பதிலேயே பெரிய cap போட்டு இருப்பவர், Matron.. நர்ஸ்களின் head.... அது போலவே இந்த கோவிலில் வெகு நாளாய் வரும் பெண்களின் வயதும் பங்கேற்பிற்கும் ஏற்ப பொட்டின் அகலம் அதிகமாக போய்க்கொண்டே இருப்பதையும், முகத்தில் மஞ்சளின் அடர்த்தி அதிகரிப்பதையும் பார்த்து ரசிப்பாள்.
அங்கு பூஜை செய்யும் பூஜாரி ஜனா.. ஒரு physically challenged Deaf and dumb person. ஆனாலும் எப்போதும் கோவில்களில் கேட்கும் புரியாத மந்திரங்கள் சத்தம் கேட்காது அமைதியாக பூஜை செய்யும் அவரை அஞ்சனாவிற்கு பிடிக்கும். ஒரு நாள் இரவு மனது சரியில்லாது, வெறும் ஒரு குண்டு பல்ப் மட்டும் மஞ்சள் ஒளியோடு தீனமாய் எரிந்துக்கொண்டிருந்த கோவிலிற்கு சென்றாள் அஞ்சனா. பகலில் அத்தனை கூட்டத்தில் அழகாக தெரியும் அந்த கோவில் ஏனோ இருட்டில் அந்த மெல்லிய வெளிச்சத்தில் விகாரமாக பயமாக தெரிந்தது. இருப்பினும் அங்கு இருந்த பெரிய ஆலமரத்திடம் செறுப்பு விட்டுவிட்டு கோவிலின் உள்ளே செல்ல அங்கே இருந்த வேப்பமரத்திடன் ஒரு கட்டையான கறுப்பு பெண்மணியை பார்த்தாள். இவளும் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு, சிகப்பும் மஞ்சளும் சேர்ந்து ஒரு புடவை கட்டியிருந்தாள். உதடு வெற்றிலையும் புகையிலையும் இட்டதில் ஒரு அழுக்கு சிகப்பாக இருக்க, ``என்ன பாப்பா இந்த நேரத்தில இங்க வந்து இருக்க`` என்று புருவம் உயர்த்தி கரகரப்பாக கேட்டாள். அஞ்சனா இதற்கு முன் ஒரிரு முறை அவளை தெருக்களில் பார்த்திருக்கிறாள். டாக்டர்களின் மகளாதலால் இவளுக்கு தெரியாதவர்களுக்கு கூட இவளைத் தெரியும். அதனால் யார் அவளோடு பேசினாலும் மரியாதையோடு பேசவே தாய் தந்தை கற்றுக்கொடுத்திருந்த பழக்கம் கருதி, அஞ்சனா சாமி கும்பிட வந்தேன் aunty என்றாள்.
காலேஜ் சேர்ந்த இரு வருடத்தில் அப்பா இறந்தபோது அவளுக்கு வயது 19. விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து அப்பா இல்லாத அறைகளின் தனிமையும், வீட்டின் உள்ளே இருந்த கலகலப்பும் தொலைந்து எல்லா இடத்திலும் பரவி இருந்த சோகமும், அப்பாவை தவிர வேறு எல்லா விஷயங்களும் வீட்டில் இருந்தும் அவர் இல்லாது அது அவள் வீடு போலவே இல்லாததால், மனது வெகுவாய் கனத்து, கோபமா, எரிச்சலா, ஆதங்கமா, சோகமா என்று தெரியாது, அவள் வயதுக்கு உரித்தான hormonal rages of teanageம் கலந்து, எங்கே செல்வது என்று தெரியாது, பாட்டியிடம் சண்டையிட்டு விட்டு, தோழி பாரதி வீட்டிற்கு செல்வதாய் சொல்லி இங்கு வந்து சிறிது நேரம் அமரலாம் என்று தோன்றி வந்தாள் அஞ்சனா.
இங்கு சிறிது நேரம் தூணில் சாய்ந்த படி அமர்ந்த அவளிற்கு அழுகையும், வெறுப்பும் ஒன்றாக வந்தது. யாரும் இருக்கமாட்டார்கள் என்று யோசித்து வந்தால் இந்த வெளிச்சத்தில் கோவிலும் அந்த குண்டு பெண்மணியும் அவளை லேசாய் பயமுறுத்தினார்கள். இருப்பினும் அமைதியாக அமர்ந்தவளின் மனம் எப்போதும் போல் அசைப்போட்டு கொண்டிருந்தது. மனதின் உள்ளே தோன்றிய இந்த vacuum என்ன செய்தாலும் எத்தனை நாள் ஆனாலும் போகாது என்று மனது குமுறி, அங்காளம்மனை மனதால் அவளுக்கு தெரிந்த எல்லா கெட்டவார்த்தைகளும் சாபங்களும் கொண்டு திட்டிக்கொண்டிருந்தாள், அஞ்சனா. தன்னெதிரே இருந்தது சாமியா, கல்லா, Omnipotentஆ omnipresentஆ என்று எல்லாம் analyse செய்யதெரியாத அவளுக்கு அந்த நேரத்திற்கு அகப்பட்ட ஒரே Punching bag அம்மன் தான். உள்ளே இருந்த ரௌத்திரம் முழுக்க கொட்டி ஏற்கனவே குங்குமம் சந்தனம் சாத்தி இருந்த சிவந்த அம்மனை இன்னும் ரத்த சிவப்பாக்கி கொண்டிருந்தாள்.
இப்படி தொலைந்து இருந்தவளின் நினைவு திட்டுவதில் இருந்து மீண்டு வந்தது சில காலடி சத்தத்தால். எங்கு இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்று ஒருவாறு தெளிந்து இருந்தவளை தாண்டி சென்ற அந்த கண்சிவந்த ஆண்களை பார்த்து, இப்போது இங்கிருந்து போகவேண்டும் என்று தோன்ற எழுந்தாள் அஞ்சனா. வந்ததில் ஒருத்தன் அந்த பெண்மணியிடம் சென்று இளிக்க, அவனோடு ஒரு குலுக்கமும் இல்லாது சேலை மறைக்காது cleavage தெரிய பாதி மார்பு காட்டியபடி, புடவை முட்டி வரை ஏற்றி, முழங்கால் தெரிய உட்கார்ந்திருந்த அவளை அஞ்சனாவிற்கு பிடிக்கவில்லை. அவளிடம் சத்தமாக பேசிக்கொண்டே இன்னொருவன் அஞ்சனாவிடம் வந்தான். அவனின் வியர்வையும் எண்ணைப்பிசுக்கும், தாடை ஒட்டிய முகத்தில் இன்னும் பெரிதாய் தெரிந்த கண்ணும் அவளை அச்சுறுத்தியது. எழுந்து செல்ல இருந்தவளை மறைத்தார் போல நின்று, `` எங்க கண்ணு நீ இங்க! இந்த நேரத்தில! அப்பா போன சோகத்தில பொட்டலம் வாங்க வந்தியா`` என்று கேட்டு இளித்தவனை வேகமாய் தாண்டி வந்து செறுப்பணிந்து ஓட்டமும் நடையுமாக வந்து வீடு சேர்ந்தாள்.
பாரதியோடு கடைத்தெருவிற்கு செல்ல, அப்போது அந்த பெண்ணை திரும்ப சந்தித்தாள். பாரதியின் வீட்டின் பக்கம் கோயில் இருப்பதால் இவளை தெரியுமா என்று கேட்டாள் அஞ்சனா. அதற்கு அந்த பெண் ஒரு விலைமாது என்றும் அத்தோடு கஞ்சா பொட்டலம் விற்பவள் என்றும் சொன்னாள். அஞ்சனாவிற்கு முதன்முறை போதை பொருள் பற்றி தெரிந்தது அன்று தான்.
- தொடரும்
- யமுனா ராகவன்

