காட்சிக்கு, யமுனா ராகவன் “அற்றவைகளால் நிரம்பியவள்” தொடர்கதைக் குறித்து மின்னஞ்சலில் வந்த ஒரு பின்னூட்டம்:
வணக்கம்
யமுனா ராகவன்
உங்கள் அற்றவைகளால் நிரம்பியவள் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிருக்கிறேன். தமிழில் இதுவொரு புது திறப்பு.
தமிழ் பெண் எழுத்தாளர்கள் குறிப்பாக நவீன பெண் எழுத்தாளர்களை மக்கள் தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியில் சொல்வதை போல “னி” என்ற வார்த்தையில் முடியும் சொல்லை தவிர்த்து விட்டு எழுத வேண்டும் பேச வேண்டும் என்று சொன்னால் உடனடியாக ;பேணாவை மூடிவிடுவார்கள். “னி” இன்றி இயங்காது அவர்கள் உலகு. {அய்யனே கோபித்துக் கொள்ளாதீர்} மலைக்க வைக்கும் அளவிற்கு உறுப்புகள், உறுப்புகள் உறுப்புகள். சிறுவயதில் உறுப்புதள்ளும் நோய்க்கு ஆட்பட்டிருக்கும் சின்ன பிள்ளைகளை பார்த்திருக்கிறேன்.இப்பொழுது மறுபடி இவர்கள் எழுத்தில் பார்க்கிறேன்.
உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது.வெளியில் இருந்து தமிழில் எழுதுபவர்கள் குறைவு. பழைய எழுத்தாளர் லட்சுமி என்ற திரிபுரசுந்தரி கூட ஆப்பிரிக்காவில் மருத்துவராக தான் பணிபுரிந்தார். {என்ன ஒரு ஒற்றுமை}அதை பற்றி அவர் எழுத்தில் ஒருவரி கூட கிடையாது. அவருடைய சுய சரிதையான “ஒரு காவேரியை போல”வில் எதாவது எழுதியிருக்கலாம். அதை நான் வாசிக்கவில்லை. மற்றபடி உடனடியாக ஞாபகம் வருவது காஞ்சனா தாமோதரன் மட்டுமே..
மிக இயல்பாக நகர்கிறது உங்கள் கதை. ஒரு ஆப்பிரிகக தீவில் தனியாக வாழும் தமிழ் பெண் அங்கு நான்கு தலைமுறையானலும் சாதியை விடாத தமிழர்கள் .யாரை வேண்டுமானலும் அழைக்கும் கலாச்சாரம்..தலித்திய பின்னணி, தனிமை, சுதந்திரம் ,ஊர் சார்ந்த ஞாபகங்கள், தாத்தா, அவர் கட்டிய கோவில் ,தினமும் வெளியே போக அழைக்கும் 58 வயது கிழவர், மலை மேல் இருக்கும் சக பணியாளரின் வீடு, வசீகரமான பக்கத்து வீட்டுக்காரன், அவர்களின் டிஸ்கொதே, குளியலறை கடல், தீவு,என வசீகரமாய் விரிகிறது கதை.
உங்கள் கதையை படிக்கும் பொழுது ஏற்படும் குறுகுறுப்பை, அது தரும் சந்தோசத்தை சொல்லித்தான் தீர வேண்டும். எனக்குள் ஏதோவொரு இனம் புரியா ஏக்கத்தை எற்படுத்துகிறது. இந்த வாழ்க்கையை இன்னும் சரியாக வாழ்ந்திருக்க வேண்டுமோ என்ற குற்ற உனர்ச்சியை எற்படுத்துகிறது. அதுவே உங்கள் வெற்றி.
நிறைய இடங்களில் வேகமாக நகர்ந்து விடுகிறீர்கள். கொஞ்சம் மெதுவாக போனால் நன்றாய் இருக்கும் என தோன்றுகிறது. விரிகக முடிந்தால் நலம்.
எப்படியும் தமிழுக்கு இது நல்ல பங்களிப்பு. எழுதுங்கள். உங்களின் அடுத்த அத்தியாயத்திற்கு ஆர்வமாய் காத்திருக்கிறேன். வாழ்த்துக்களுடன்
- செந்தில்குமார்
April 10, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
