பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 17, 2010

keyboard-க்கு அகப்பட்டது monitor க்கு அகப்படா கதை(மக்களே! இது வரவு எட்டணா செலவு பத்தணா வைப்பற்றிய கதை அல்ல) - ராம்

சென்னைக்கு சொந்தக்காரர் யார் வந்தாலும் அன்னார் வீடுதான். வருபவர்களை கடை கடல் theme park அழைத்துப் போக அலையும் fasttrack.தொலைக்காட்சியில் காட்டும் எல்லா பொரு்ளையும்
வாங்கியேத் தீர்க்கும் குழந்தை.தொலைபேசித்தால் வரும் பிஸ்ஸா. சனி ஞாயிறில் மாயா ஜாலோ ஐனாக்ஸ்ஸோ அப்புறம் வெளிச்சாப்பாடு இல்லாவிட்டால் கோபப்படும் மனைவி. மாமானாரி்ன் அறுபதாம்
திருமணத்திற்கு எடுத்த personal loan.இன்ன பிற என்னவென அவன் தினமும் தினமும் அடித்து அடித்து எழுதும் கணக்கு புத்தகத்தைப் பார்த்தால் தெரியும்.



மென் பொறியாளன் வேலையில் அவனுக்கு ஆண்டுக்கு ஆறு லட்சம் வந்த போதும் பத்திய பாடில்லை. போன வருடம் 4 லட்சம் வந்த போதும் keyboard-க்கு அகப்பட்டது monitor க்கு அகப்படா இதே கதைதான்.
அடித்து அடித்து எழுதியக் கணக்குப் புத்தகம் காட்டும் கைஇருப்பும் கையில் இருப்பதும் மாறியே வந்ததால் computer வாங்கலாம் எனத் தீர்மானித்தான்.

30 ஆயிரம் ரூபாய்க்கு எப்படி எழுதிப் பார்த்தும் அந்தப் பாழாய்ப் போன கணக்குப் புத்தகம் வழி காட்டுவதாய் இல்லை. மகள் மனைவி இருவரும் சில வாரச் செலவுகளை தற்காலிகம்மாய் நிறுத்தி வைப்பதாய் சத்ய பிரமானம் செய்தார்கள். ஊரில் இருந்து வருவாதாய்ச் சொன்ன அப்பா அம்மாவிடம் ஏதேதொ பொய்ச் சொல்லி வருகையைத் தவிர்த்ததிலும் கொஞ்சம் வெளிச்சம் பிறக்க ஒருவழியாய் computer ன் மின் வெளிச்சம் அவன் படுக்கையறையை வியாபித்தது. பின் internet யானையும் சப்தமில்லாமல் சேர்ந்து கொண்டது.

FARMVILLE வி்ற்காக மனைவியும் பெயர் தெரியா விளையாட்டு்க்காய் மகளும் நடந்த்திய computer உரிமைப் போராட்டத்தி்ற்கு முடிவு கட்ட நேரப்பட்டியலை பிரித்து ஒட்டியதில் இவனுக்கு்க் கணக்குத்தட்ட பத்து நிமிடம் கிடைத்தது. அதையும் மகள் பாசம் பறித்துக் கொள்ள இவன் பயன் படுத்தாத வீட்டுப் பொருட்களில் computer ம் சேர்ந்து கொண்டது. தூர எறிந்த கணக்குப் புத்தகத்தில் மீண்டும் அடித்தும் திருத்தியும் எழுதத் தொடங்கி computer ஏப்பமிட்ட 30 ஆயிரத்தை ஈடுகட்ட பெரும் பாடு பட்டான்.

computer ஆல் ஆன பயன் என்னவென் சொல் என மனைவியிடம் புகார் வாசித்ததில் பெரும் மொளனம் மட்டும்மே பயன் ஆனது. மூன்று மாத internet bill ம் கணக்குப் புத்தகத்தில் சேர்ந்து கொண்டது. மென் பொறியாளனுக்கு தன் computer மேல் பெரும் கோபமும் வருத்தமும்மே.

புதிய வேலைக்கு interview வந்தது.பார்க்கும் வேலையின் சம்பளம் 8 லட்சம் என்று ஒரு குட்டிப் பொய் சொன்னதின் பயனாய் 10லட்சம் தருகிறோம் என்றார்கள் ஆண்டிற்கு. மகிழ்ந்தான். பணியில் இணையும் போது பார்க்கும் வேலையின் சம்பளச் சான்றிதழ் வேண்டும் என்றார்கள். எங்கே போக? அவனிடம் ஆறு லட்சத்திற்கான சான்றிதழே இருந்தது soft copy யாய். அவனை எரிச்சல் படுத்திய computer, ctrl x மற்றும் ctrl v யுடன்
உதவி செய்தது. மனைவி மனம் உகந்து தன் computer நேரத்தை அவனுக்கு உகந்தாள். 8 லட்ச சம்பள சான்றிதழை adobe photoshop அவனுக்குப் பரிசளித்தது.

மனைவி மொளனம் கலைந்தாள். பாத்தீங்களா 30 ஆயிரம் ரூபா போச்சு போச்சு என தூக்கத்தில் எல்லாம் புலம்புனீங்களே, எங்க அப்பா அம்மாவா வரவிடம்மா பண்ணிட்டியேன்னு என்னை இம்சித்தீங்களே, இப்ப லாபம் 4 லட்சம் என்று சிரித்தாள். இவனும் முதன் முதலில் computer i பார்த்து சிரித்தான்.

நமக்குள்ள ப்ரச்சனை வரமா இருக்கணும்னா உங்களுக்குத் தனியா நீங்க ஒரு laptop வாங்கிக்குங்க என முற்றுப் புள்ளி வைத்து சிரித்தாள். அவனுக்கும் அது சரி எனவே பட்டது.

மென் பொறியாளன் வேலையில் அவனுக்கு ஆண்டுக்கு பத்து லட்சம் வந்த போதும் பத்திய பாடில்லை. போன வருடம் 6லட்சம் வந்த போதும், keyboard-க்கு அகப்பட்டது monitor க்கு அகப்படா இதே கதைதான்.

ராம்


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com