பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 16, 2010

பெயர் இல்லாத நாளில்


போன வாரம் பொன் நிற விஸ்கியின்
துணைக்கு சேர்த்த நொறுக்கல்களை சுமந்த
கறுப்பு பாலித்தீனின் சன்னமான
அசைவையும் நாடகத்தொனியாக்கும் சப்தம்,



எங்கோ இயங்கும் மழலையர் பள்ளியின்
மங்கிப்போன குழந்தைகளின் கூட்டுச்சப்தம்.

காற்றைத் தட்டிப் பிரித்து தடதடக்கிற
தலைக்கு மேலான காற்றாடியின் சப்தம்.

அனுப்பாமல் விடப்பட்ட கடிதம்மோ,
எழுதி முடிக்காத கதையோ,
வங்கியில் இடப்படாத காசோலையோ,
என் அந்தரங்கம் தடவிய
குறிப்புகளில் இருந்து தப்பியதோ,

விஸ்பர் ரை பொதிந்து வந்த தாளோ
என எதுவாக

வேண்டுமானலும் அத்தாள் இருக்கலாம்.
மரமேசைக்கு அடியிலோ அறையில் சிதறிக்கிடக்கும்
சம்பந்தம்மற்ற பொருட்களுக்கு அடியிலோ
அது சதா பேசும் சப்தம்.


என எல்லாம்
பெரும் குரலெடுத்துச் சொல்கிறது
செத்தப் பின்னும் செவிக்குக் கேக்கும் என.

ராம்-











தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com