வணக்கம். நான் ராம்.
கற்றது தமிழ் இயக்குநர்.
காட்சி
நாம் காண்பது அல்ல காட்சி. நாம் காண்பவற்றில் இருந்து
கண்டடைவதே காட்சி. அம்மெய்ப் பொருளைத் தமிழ் தத்துவம்
என்கிறது. காட்சிக்கு நிகரான வடமொழிச் சொல் தரிசனம்.
கலை, இலக்கியம், திரைப்படம், அரசியல் சுற்றுச் சூழல்
என பல்துறைக்குறித்து நம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்
சரியானவற்றை அங்கீகரிக்கவும் அடையாளம் காட்டவும்
அவசியப்பட்டால் கடுமையாக சாடவும், நானும் என் தோழர்களும்
இணைந்து காட்சி என்ற இத்தளத்தை இணையத்திலும்
சென்னையிலும் தொடங்குகிறோம்.
நீங்களும் நாமாக இணைந்து செயல் பட விரும்பினால்
உங்களது மின்னஞ்சல் முகவரியையும், தொடர்புக்கான எண்ணையும்
எங்களுக்கு அனுப்புவீராக.
நன்றி
ராம்.
தொடர்புக்கு : 00 91 9080442430
kaattchi@gmail.com
