அவனப்பன் என்
முப்பாட்டனுக்கு கொடுத்தான்
முப்பாட்டன் என்
தாத்தனுக்கு கொடுத்தான்
தாத்தன் என்
அப்பனுக்கு கொடுத்தான்-என்
அப்பன் எனக்கு
கொடுக்க முயலும் போதுதான்
என் இடதுகாலால்
எட்டிஉதைத்தேன்
உங்கள் அதிகாரங்களையும்
எங்கள் தலைமுறையின்
அவமானங்களையும்
முறைக்காதீர்கள் என்
அவமானங்களையும்
முறைக்காதீர்கள் என்
தொடர் தலைமுறையின்
சீற்றம் இன்னும்
உக்கிரமாயிருக்கும்........

