லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர்.உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த அனுபவங்களை அவர் காட்சி வாசகர்களுடன் முதன்முறையாகப் பகிர்ந்துகொள்கிறார்.
1955 தமிழகத்தைக் கடும் புயல் தாக்கிய நேரம். மோசமான வறுமையில் வாடிய தாயின் வயிற்றில் பிறந்தேன். என் குடும்பம் மட்டுமல்ல, ஊர் முழுதுமே பஞ்சம் நிலவிய காலம் அது. என் பிறப்புக்கும் இந்தப் பஞ்சத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு இதுவரை புரியவில்லை. ஆனால், பஞ்சம் வந்ததே என் பிறப்பால்தான் என்று என் தாயும் தந்தையும் என்னை வெறுத்தனர்.
அப்பா, சுப்ரமணிய வைத்தியர். அவர் அந்தக் காலத்திலேயே ஓமியோபதியில் கை தேர்ந்தவர். அம்மா மாரியாயி. அம்மா, கடுமையான உழைப்பாளி. அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அவர் எப்போதுமே நிதானம் இல்லாத அளவுக்குக் குடிப்பவர். அவரது குடியால் வராத வறுமை என்னால் வந்ததால், என்னை ‘ஜென்ம சனியன்’ என்று அழைத்தார்கள்.
பசி ஒன்றே நிரந்தரம் என்பதையே என் சிறு வயது எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம். நல்ல அன்பைக் காட்டும் உறவுகள் எதுவும் நிலையாக இருக்கவில்லை. யாரெல்லாம் கொஞ்சம் அன்பாகப் பேசினார்களோ, அவர்கள் பின்னால் எல்லாம் அலைந்தேன்.
அம்மா என்று அம்மாவை அழைக்கவில்லை. அப்படி அழைக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை. அம்மாவை, பெரியம்மா என்றுதான் அழைத்தேன். அப்பாவின் இரண்டாம் மனைவியை சின்னம்மா என அழைத்தேன். ஆக, எனக்கும் அம்மாக்களுக்குமான உறவு முறை அப்பாவின் இரு மனைவிகள் என்ற அடிப்படையில்தான் அமைந்தது. சேர்லி என்ற பையனின் குடும்பம், அருகே வசித்தது. அவனது அம்மாவைத்தான் அம்மா என்றேன்.
பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. வீட்டில் அனுப்ப மறுத்தனர். நான் வசித்த பகுதி, பல மதங்களும் சாதிகளும் கலந்த பகுதி. செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் மகள் பார்வதி, என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டாள். பள்ளி ஆசிரியை ஆரோக்கிய மேரி, சீருடை தைத்துக் கொடுத்தார். இந்த ஆசிரியையின் புதல்வனும் என் வகுப்பில் படித்தான். உடைந்த சிலேட்டும், பழிய புத்தகமும் கொடுத்து உதவி செய்தான். பள்ளியில் ஒவ்வொரு மாணவ, மாணவியருடனும் நான் ஒன்றிப் போனேன். அது கிறித்துவ மத நிறுவனம் நடத்திய பள்ளிக் கூடம். வீட்டின் மாட்டுக் கொட்டகையில் சிறு திண்ணை இருந்தது. அதுவே எனது தங்குமிடம்.
வீட்டிலிருந்து இரண்டு நிமிடம் தெற்குப் பக்கம் நடந்தால், அருணாங்குளம் வரும். ஊருக்கு அதுதான் பொதுக்குளம். பொழுது விடிந்ததும் குளத்தில் குளித்துவிட்டு, பள்ளி மைதானத்தில் இருக்கும் மாதாவிடம் சென்றுவிடுவேன். மாதா முன் முட்டி போட்டு அமர்ந்து கொள்வேன். ’மாதா...உன் தலை முக்காட்டுக்குள் என்னையும் சேர்த்துப் போத்திக் கொள்ளக் கூடாதா?’ என்று அழுவேன். அப்போதெல்லாம் எனக்கு இப்படித் தோன்றியது. மாதாவின் முக்காடு என்னையும் உள்ளிழுத்துக்கொள்வதற்கானது என்பது என் நம்பிக்கையாக இருந்தது. மாதாவே என் தாய் என்ற எண்ணம் நிரந்தரமாக இருந்தது.
பள்ளி மைதானத்தில், புளிய மரம், அரச மரம், மரமல்லி மரம் எனப் பலவிதமான மரங்கள் இருந்தன. பருவத்திற்கேற்ப அவை எனக்கு பழங்கள் வழங்கி வயிறு நிரப்பின. புளியம் பழங்களையும், அரசம் பழங்களையும் பொறுக்கித் தின்பேன். மரமல்லி உதிர்க்கும் பூக்களை மாலையாகக் கட்டின் மாதாவுக்குப் போடுவேன். மதிய சாப்பாடு பள்ளிக் கூடத்தில் கிடைத்துவிடும்.
மாலையில் என் தெருப் பிள்ளைகளோடு விளையாடிவிட்டு வீடு திரும்புவேன். இரவு தூக்கம் திண்ணையில்தான். வீட்டுக்குள் எனக்கு அனுமதி கிடைத்ததில்லை. நான் பள்ளிக்குச் சென்றதால் என் மீதான கோபம் என் வீட்டாருக்குக் கூடிப் போயிருந்தது. இதற்கிடையில், அப்பாவின் இரண்டு மனைவிகளுக்கும் மேலும் குழந்தைகள் பிறந்தார்கள். என் இரண்டாவது தங்கை சரோஜா பிறந்ததும், வறுமை மாறத் தொடங்கியது. எனவே அவள் செல்லப் பிள்ளை ஆனாள். தொடக்ககால வறுமைக்குக் காரணம் என் பிறப்புதான் என்ற பழைய நம்பிக்கை இதனால் வலுப்பெற்றது.
தொடர்ந்து வீட்டில் இருந்து படிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. அப்பா குடித்துவிட்டு வந்து மோசமாகப் பேசுவார், அடிப்பார். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஆரோக்கியமேரி டீச்சரிடம் கெஞ்சிக் கூத்தாடி, பள்ளிக்கூடத்தில் உள்ள மடத்தில் சேர்ந்துவிட்டேன். உள்ளூரிலேயே உள்ள பள்ளி அனாதை மடம். அந்த மடத்தில் சேர சில விதிமுறைகள் இருந்தன. அப்பா அம்மா இருக்கக் கூடாது என்பது அவற்றில் ஒன்று. அப்படி சேர்ந்தால் மட்டுமே உணவும் உடையும் இலவசம். நான் சேர்ந்தது ஒரு விதிவிலக்குதான். எனக்குப் பெற்றோர் உண்டு; ஆனால் நான் ஒரு அனாதை. இப்படிச் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் அல்லவா! எனக்கு உணவு உடை இலவசமாக வேண்டும். ஆரோக்கியமேரி டீச்சருக்கு மட்டும் இது புரிந்தது. அவர் என்னையும் என் குடும்பத்தையும் நேரில் பார்த்தவர் என்பதால், மடத்து நிர்வாகத்தில் தனக்கு இருந்த செல்வாக்கைக் கொண்டு என்னை அந்த அனாதைகள் மடத்தில் சேர்த்துவிட்டார்.
பள்ளி மடத்திற்கும் வீட்டுக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. பள்ளியின் சுவர் மேல் ஏறி நின்றால் வீடு தெரியும். அந்தளவுக்குப் பக்கத்தில்தான் இருந்தது. இரவு மடத்தில் படுத்திருக்கும்போது, அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாக்களை அடிக்கும் சத்தமும் அம்மாக்களின் கதறலும் எனக்குக் கேட்கும். பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டுக்குப் போய்விடுவேன். ஆடு மாடுகள் மேய்க்க வேண்டியிருக்கும்.
எங்கள் ஊர் வல்லம். தஞ்சாவூருக்குப் பக்கத்தில் உள்ளது. எங்கள் ஊரின் அழகே காடுகள்தான். வல்லம் மேடான ஊர். சிறு மலைக் குன்றுகள் எங்கள் ஊரில் இருக்கும். நாங்கள் அவற்றை மலைகள் என்றுதான் அழைப்போம். சோழர் காலத்து சிவன், பெருமாள் கோயில்களும் முனியாண்டவர் கோயில்களும் மலை மீது இருக்கும். மலையைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் இருந்தன. அகழியின் சில இடங்களில் மட்டும் தண்ணீர் இருக்கும். தண்ணீர் உள்ள இடங்களைத் தாண்டிச் செல்ல சிறு மரப் பாலங்கள் உண்டு. அகழியும் மலைகளும் இரண்டாகப் பிளக்கப்பட்டு, தஞ்சை – திருச்சி சாலை போடப்பட்டது.
பெருமாள் கோயில் உள்ள பகுதி ஒரு காடாகவும் பிற தெய்வங்கள் உள்ள பகுதி மறு காடாகவும் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் இருந்த புளிய மரங்கள் சாலையை இருட்டாகவே வைத்திருக்கும். சிவன் கோயில் பக்கத்தில் வச்சிர தீர்த்தம் எனும் குளம் இருந்தது. சிவன் கோயில் அர்ச்சகர் அவசரம் அவசரமாக பூஜை முடித்துச் சென்று விடுவார். கோயில் பின்புறத்திற்கு நந்தவனம் என்று பேர். மனோரஞ்சிதம், பவளமணி, தென்னை போன்ற மரங்கள் அங்கு இருந்தன.
முனியாண்டவர் கோயிலின் எதிரே ஒரு மேடை. அதன் மேல் ஒரு வேல். விளக்கேற்ற சிறுமாடம். விழுது இறங்காத சற்றே சிறிய ஆலமரம் அங்கு இருந்தது. கோயிலுக்கு அருகே பெரிய மண்டபம் ஒன்று இருந்தது. இங்குதான் மாடு மேய்க்க வருவார்கள் எங்கள் ஊர் மக்கள். விடுமுறை நாட்களில் நானும் ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டு இங்கு வந்துவிடுவேன்.
ஆடு மாடு மேய்க்கும்போது எனக்கு ஒரு நாயகன் இருந்தார். அவர்தான் காட்டுராஜா தாத்தா. ஒத்தை நாடி உருவம், கோவணத்தை விடச் சற்றே பெரிய கீழாடை, அதில் செருகி வைக்கப்பட்ட புல்லாங்குழல், கையில் நீண்ட கைத்தடி. இவர்தான் காட்டுராஜா தாத்தா. மேய்ப்பவர்கள் காட்டில் கிடைக்கும் ஆனாம்பழம், சப்பாத்திப் பழம், சூரப் பழம், காரைப்பழம் என பல காட்டுப் பழங்களைக் குவித்து வைத்து சாப்பிடுவது வழக்கம்.

காட்டுராஜா தாத்தா சிவன் கோயில் தேங்காய்களைப் பறித்து, மட்டை உரித்து தேங்காயில் உள்ள மூன்று கண்களின் வழியாகவும் ஓட்டை போட்டு, அந்த துளைகள் வழியே பொட்டுக் கடலை சர்க்கரை திணித்து, ஒரு மூங்கில் குச்சியினால் அந்தத் துளைகளை அடைத்து தீயில் போட்டு விடுவார். குறிப்பிட்ட பதம் பார்த்து, அந்தத் தேங்காயை உடைத்துச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். அதன் மணம் காடு முழுக்கப் பரவும்.
சப்பாத்திக் கள்ளியின் பழங்களைப் பறித்து, அதில் உள்ள தொண்டை முள் எடுத்து சுற்றிலும் காணப்படும் முட்களைத் தரையில் தேய்த்து அழித்து, வாடாமல்லி நிறத்தில் வெளிப்படும் பழத்தை உருண்டையாக எடுத்துக் கொடுப்பார். தொண்டை முள்ளோடு சாப்பிட்டால் ஆபத்து என்பார். முனியாண்டவர் கோயில் மேடை மேல் ஏறி, கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு ராஜா ராணி கதைகளைக் கூறுவார்.
சிறுவர்கள் எல்லாரும் பாதிக் கிறக்கத்தில் கதைகள் கேட்போம். பெரியவர்கள் மரத்தடியின் நிழலில் ஆண்களும் பெண்களும் கேலி கிண்டலுடன் விளையாடுவார்கள். தாத்தா உச்சி வெயில் வந்ததும் கதை கூறுவதை நிறுத்திவிட்டு, ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட எங்களை வழி நடத்திச் செல்வார். தாத்தா மட்டும் புல்லாங்குழல் ஊதிக் கொண்டு அகழியை நோக்கி நடப்பார். தாயைத் தேடி வரும் கன்றுகள் போல், ஆடு மாடுகள் அவர் பின்னால் ஓடும்.
மீண்டும் மடம்:
நடுநிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு ஆசிரியர் பாப்புதாஸ். மாணவர்களின் திறமையை வளர்த்து எடுப்பதில் தனி ஆர்வம் காட்டியவர் இவர். பள்ளிக்கென சிறு நூலகம் வேண்டும் என்ற இவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. நூலகத்துக்கு வார, மாத இதழ்கள் வரத் தொடங்கின. காஞ்சி, அண்ணாவின் கடிதங்கள், மஞ்சரி, குமுதம் உள்ளிட்ட நூல்கள் வந்தன. எனக்கும் வெளியுலகுக்குமான தொடர்பை அந்தச் சிறு நூலகம் ஏற்படுத்தியது. அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், முகமூடி போன்ற கதைகளை விரும்பிப் படிக்கத் தொடங்கினேன். அவை என்னைச் சிரிக்க வைத்தன. கற்பனையில் சாகசங்களைச் செய்ய வைத்தன.
உயர்நிலைப் பள்ளிச் செல்லும்போது எனக்கென தோழிகள் கிடைத்தனர். எலிசபெத், சௌந்திரம் மற்றும் நான், மூவரும் பிரிந்ததே இல்லை. உயர்நிலைப் பள்ளியில் பாடம் எனக்குக் கடினமாக இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது விருப்பப் பாடம் வேதியியல் எடுத்தேன். வகுப்பு ஆசிரியர் பழனிராஜன். தமிழாசிரியர் கலியபெருமாள். இவர்கள் இருவரும் எனக்குப் பொது அறிவைப் புகட்டினார்கள். கணக்கு எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.
எனக்குப் பொதுவாகவே படிப்பில் ஆர்வம் குறைந்தது. நூலகத்தில் எனக்கான கற்பனை வாழ்க்கை காத்திருக்கும்போது, வகுப்பறையில் நாட்டம் ஏற்படவில்லை. காண்டேகரின் மொழிபெயர்ப்பு நூல்கள், பொன்னீயின் செல்வன் ஆகியவற்றைப் பலமுறை படித்தேன். ஆயினும், நூலகத்தில் நான் படித்தவை பெரும்பாலும் அதீத கற்பனைக் கதைகளே. தங்க மாம்பழம் அவற்றில் ஒன்று. இந்த நாவலில், ஒரு சிறுவனும் சிறுமியும் மந்திரவாதக் கிழவியால் சிறைப் பிடிக்கப்படுவார்கள். அவர்கள் முதன் முதலாகத் தப்பி வெளிச்சத்தைப் பார்க்கும்போது, கண்கள் கூசும். காடு முழுக்க ஓடுவார்கள். பிறகு பல்வேறு மந்திரத் தடைகளைத் தாண்டி, தமது பெற்றோரைத் தேடிச் செல்வார்கள். அவர்கள் பெற்றோரை மந்திரவாதிக் கிழவி சிலையாக மாற்றியிருப்பாள். மந்திரத் தண்ணீர் தெளித்தால்தான் அவர்கள் உயிர் பெறுவார்கள். என் வாழ்க்கைக்கும் இக்கதைக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவே அடிக்கடி நினைப்பேன்.

என் பெற்றோரும் சிலைகள்தான். ஆனால், எந்த மந்திரத் தண்ணீர் தெளிப்பது எனத் தெரியவே இல்லை.
- தொடரும் -