பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 17, 2010

இறுதி யுத்தத்தில் தப்பித்தவரின் வாக்குமூலம்(தமிழ்/ஆங்கிலம்) - பகுதி 2






நான் தங்கியிருந்த அகதிகள் முகாமில் பார்த்த மக்களை சாலைகளில் சந்தித்தேன். பேசி பகிர்ந்தோம் எங்களின் சோகம் தாங்கிய நாட்களை பற்றியும், விழுந்த செல்கள் பறித்த உயிர்களும் உறுப்புகளையும் பற்றி. பல கர்ப்ப ஸ்திரீக்கள் விதவையாயிருந்தார்கள் கணவர்களை குண்டுக்கு இரையாக்கி. என் பூமியில் பிறக்க இருந்த இத்தனை ஆயிரம் குழந்தைகளும் தந்தையின் முகத்தை பார்க்காது வந்து பிறக்க போகிறது என்று யோசிக்கையில் கொடுமையாக இருந்தது.





இப்படி ஆண்கள் இறக்க ஒரு முக்கிய காரணம், அவரவர் உடைமைகளை வண்டிகளில் கட்டிக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போகையில், பெரும்பாலும் குடும்பத்தினர் பங்கருக்குள் பதுங்க, பொருட்களை காக்கும் ஆண்கள் குண்டுகளுக்கு இரையானார்கள். சில வேலைகள் பங்கர்களே தாக்குதலுக்கு ஆளானதால், மொத்த குடும்பமே சிதறி இறந்தனர். அப்படி நடந்த ஒரு நிகழ்வு மார்ச் மாதம் நடந்தது. 

எங்களுடைய டெண்டிற்கு ஒரு 50 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு டெண்டில் ஒரு குடும்பம் வசித்தது. மூன்று குழந்தைகளும் தாய் தந்தையும் இருந்த குடும்பம். அவர்கள் பதுங்கிய பங்கருக்குள் செல்லடிக்க அந்த மொத்த குடும்பமும் சிதறி இறந்ததை பார்க்க ஓடினோம் எல்லோரும், யாராவது பிழைத்து இருக்கமாட்டார்களா என்று பார்க்க. ஆனால் யாருடைய அங்கம் யாருடையது என்று தெரியா வண்ணம் சிதறி போயிருந்தார்கள். மொத்தமாக அள்ளி பிளாஸ்டிக் பைகளில் கட்டி அந்த பங்கருக்குள்ளேயே புதைத்தனர் அந்த குடும்பத்தை. இதே போன்றதொரு சம்பவம் நடந்தது உடையர்காட்டில். தேதி நினைவில்லை. ஒரு பங்கருக்குள் இருந்த குடும்பம், அதில் இருந்த ஐந்து பிள்ளைகளோடு மொத்தமும் இறந்தார்களாம், அந்த நேரம் கடைக்கு போயிருந்த ஒரு குழந்தையை தவிர்த்து.

மார்ச் இறுதிக்குள், உணவு பற்றாக்குறை உச்சத்தை அடைந்தது. சிறிது அரிசியும், பருப்பும் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை மக்களுக்கு. அதுவும், கொஞ்சம் உணவு பொருளைச் சேமித்து செல்லும் இடம் எல்லாம் தூக்கி சென்றதால் தான். எங்களுக்கும் எங்களை சுற்றி இருந்த எல்லோருக்கும் சிறிதளவு ஆவது உணவு கிடைக்க ஆன பாடுப்பட்டோம். Tamil Rehabilitation Organisation அகதிகளுக்கு கஞ்சி வழங்கத் தொடங்கியது. மக்கள் காலை தொடங்கி சாயந்திரம் வரை குடுவைகளும், கின்னங்களும் வைத்துக் கொண்டு காத்து இருந்தார்கள். இந்த கஞ்சி அரிசி, தண்ணீர், உப்பு, கொஞ்சம் தேங்காய் பால் சேர்ந்தது. சில நேரங்களில் இந்த கஞ்சிக்காக காத்திருந்த மக்களின் மீதும் குண்டு தாக்குதல் நடத்த, சில நூறு பேர்கள் இறந்து போனார்கள்.

ஆஸ்ட்ரேலியாவில் இருந்து வந்த ஒரு எஞ்சினியர் எங்களுக்கு உதவினார். காயப்பட்ட மக்களையும், இறந்த மக்களையும் நகர்த்தவும், மக்களுக்கு சிறு சிறு வேலைகள் செய்வதும், கஞ்சி போன்ற உணவையோ, மக்களையோ, மருந்துகளையோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றும் உதவினார். பல வேலைகளில் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலிலும், மக்கள் விட்டு போன இடங்களில் இருந்து டெண்ட், விறகு போன்றவற்றை மீட்டுக்கொண்டு வந்தார். இது எல்லாம் சிங்கள அரசால் பாதுகாப்பான இடம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் நடந்தேறி கொண்டு இருந்த நிகழ்வுகள். மொத்தமாக 6 கிலோமீட்டருக்கும் குறைவான நிலப்பகுதியும், சதுப்பு நிலங்கள் ஒரு பக்கமும், கடலும் ஒரு பக்கம் இருந்த இடத்தில் அடங்கி போயிருந்தோம். 

ஏப்ரல் கடைசியில் உள்ளூரில் செயல்ப்பட்டுக் கொண்டு இருந்த ஒரு NGO இனிப்பு பலகாரம் வினியோகித்தார்கள். வேறு ஒரு கடையோ, உணவு பொருளோ இல்லாததால் இந்த இனிப்பை வாங்க ஒரு பெரிய கூட்டமே சேர்ந்தது. பெரிதாய் ஒன்றும் இல்லை, அந்த பண்டத்தில், வெறும் கோதுமை மாவும், சக்கரையும் கலந்து எண்ணெயில் வறுத்து இருந்தார்கள். வெகு சிறிய விலைக்கு இந்த இனிப்பை விற்றார்கள். நானும் என் நண்பரும் ஒரு மோட்டர் சைக்கிளில் இன்னொரு தோழரை சந்திக்க சென்றுக்கொண்டு இருந்தோம். ஒரு 3 நிமிடம் கடந்து போகும்மாறு வரை அந்த வரிசை நீண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த வரிசையில் ஒரு அம்மா அழுதுக்கொண்டிருந்த கைக்குழந்தையோடு சண்டை இட்டுக்கொண்டிருந்தாள், தன்னை முன்னுக்கு அனுப்பும் படி. நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கும். பலத்த வெடிச்சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, உணவு வாங்க நின்றிருந்த அந்த வரிசையில் குண்டு தாக்கி, 12 பேர் அந்த இடத்திலேயே இறந்து போனார்கள். பலர் காயமடைந்து குற்றுயிராய் கிடந்தார்கள். 

இது போன்ற கொடுமைகளின் ஊடே, இடம் மாற்றி இடம் அகதிகளாய் சுற்றிக்கொண்டே இருந்தோம். ஒரு இடத்தில் தங்கி கழிவறை வசதி செய்துக்கொள்ள தொடங்கும் முன்னரே அந்த இடத்தை விட்டு ஜாகை மாற்றவேண்டியதாய் இருந்தது. அப்படி அமைக்கப்பட்ட கழிவறை என்ன என்றால், பெரிய குழி ஒன்று தோண்டப்பட்டு, அதில் பிளாஸ்டிக் பேரல் வைத்து அலுமினிய தகட்டால் மூடி இருப்பார்கள். இது கொஞ்சமேனும் சுகாதாரமாக இருக்கும் என்றார்கள். ஆனால் இப்படி இடம் விட்டு இடம் நகர, கழிவறை வெறுமே குழிதோண்டி, பனைமரப்பட்டைகள் இருப்புறம் இருக்க, அதற்கு பக்கத்திலேயே குழி வெட்டி, ஊற்றாய் வரும் தண்ணீரை காலி பெப்ஸி இல்லை கோக் பாட்டில் கொண்டு நிரப்பி, கழுவி கொள்ள வைத்திருந்தார்கள். வெகுவும் சுகாதாரமற்று, நாற்றமடித்து கொண்டிருந்த இந்த குழிகளால், ஆங்காங்கே வயிற்றுப்போக்கு பரவியது. நானும் இந்த அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தேன். மருந்துகள் கிடைப்பது அரிதாக இருந்தது. வெறுமே கருப்பட்டி டீயை குடித்துக்கொண்டிருந்தேன் வயிற்றுப்போக்கு நிற்கவேண்டி. எனக்கு வந்த தகவல், பல பல குழந்தைகள் இந்த வயிற்றுப்போக்கால் இறந்துக்கொண்டிருந்தார்கள் என்பது தான். ஒன்றும் செய்ய இயலவில்லை.

இதன் நடுவே சிங்கள அரசு பிரகடணப்படுத்திய 48 மணிநேர போர் நிறுத்தம் என்றதெல்லாம் வெறும் கேளிக்கூத்து. குண்டு மழை தொடர்ந்துக்கொண்டே தான் இருந்தது, ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. உலகிற்கே தெரியவந்திருக்கும், வான்வழியே Kfir விமானங்கள் மூலம் நடக்கப்பட்ட தாக்குதல் தொடர்ச்சியாக நடந்தேறிக்கொண்டிருந்தது என்று. இன்னமும் நினைவில் இருக்கும் நிகழ்ச்சி, இப்படி ஒரு 48 மணி நேரம் அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது போரை என்று நம்பி மக்கள், பொது வாழ்க்கையில் ஈடுபட, எங்கள் சுற்றுப்புறத்தில் மட்டும் மூன்று முறை குண்டு வெடித்து பலர் இறந்தார்கள். மற்ற இடங்களிலும் இதே கதை தான். அதன் பின் இப்படி வந்த அறிக்கையை பார்த்து சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை எங்களுக்கு.

ஏப்ரல் தொடக்கத்தில், இந்த எஞ்சிய 3,50,000 மக்களும் அந்த ஆறு கிலோமீட்டர் பரப்பளவுக்குள், நெரிசலாய் தங்கியிருந்தோம், தினம் வெடிக்கும் குண்டுகளுக்கு எங்கள் சுற்றம் சூழலை பறி கொடுத்துக்கொண்டு. வேறு எங்கேயும் போக இடம் இல்லை. ஏப்ரல் மாதம் நடுவில், மாதளன், பொக்காணை இடங்களை சுற்றி கடுமையான குண்டு தாக்குதல் நடைப்பெற்றது. ராணுவம் ஒரு கட்டம் போல எல்லா பக்கங்களில் இருந்தும் சூழ்ந்தார்கள். இந்த கட்டத்தில் சிக்கிய அத்தனை பொது ஜனமும் சுட்டு கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்த கட்டத்தை சுற்றி இருந்த இடத்தில் எல்லாம் வான்வழி தாக்குதல் நடைப்பெற்றது. இரண்டு நாட்களில் இந்த இடத்தில் மட்டும் 2000த்திற்கும் மேற்ப்பட்டவர்கள் இறந்தார்கள், எஞ்சிய 80,000 மக்கள் பிடிப்பட்டனர் ஒரு இரண்டு கிலோமீட்டர் பரப்பளவுக்குள். இது அத்தனையும் நடந்தது சிங்கள் அரசால் பாதுகாப்பான இடம் என்று உத்தரவாதம் தந்த இடத்தில் தான்.

இந்த காலக்கட்டத்தில் அடிப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது இருக்க, உதவித் தொண்டு நிறுவனங்களும் ஆட்களும் குறைவாக இருந்தபடியால் நான் அங்கு இருந்த ஒரு மருத்துவமனையில் உதவி செய்தேன். முதலில் நான் அட்மிஷன் இடத்தில் தான் பணி புரிந்தேன். இந்த இடம் ஒரு நீல நிற டார்பாலின் குடில். அவ்வளவே. ஒவ்வொரும் நிமிடமும், புதிய நோயாளிகளை வேன்களில் கொண்டுவந்து குவித்தப்படி இருந்தார்கள், Tamil Rehabilitation Organization மற்றும் இது போன்ற சில குழுக்களும். ஒரு கட்டத்தில் தனிநபர்களும் உயிரோடு இருக்கும் யாரையும் கொண்டு வந்து மருத்துவ உதவிக்காக விட்டார்கள். அங்கு நாங்கள் செய்ததெல்லாம், சிறியமுதலுதவிதான். பிறகு கொஞ்சம் ரத்தப்போக்கு நின்றால், அங்கு இருந்த அறுவை சிகிச்சை அறைக்கு நோயாளிகள் நகர்த்தப்பட்டார்கள். இன்னமும் அதிக மருத்துவ உதவி தேவைப்பட்டவர்கள், வரிசையில் காத்து இருந்தார்கள், அடுத்த ICRC கப்பல் வரும்வரை.

முதல் நாள் மருத்துவமனையில் சேவை புரிய சென்றது 23ம் தேதி ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன். அங்கு ஒரு வயதான அம்மா கை உடைந்து படுத்து இருந்தாள். அவளை அடுத்து அவள் மகன் அமர்ந்திருந்தான். அவனுக்கு தலையில் பலத்த அடிப்பட்டு கட்டுப்போட்டு இருந்தான். அவளுக்கு ஏதாவது கொடுக்க, உதவ முயற்சிக்கும் போது எல்லாம் அவன் தள்ளாடி தரையில் விழுந்தான். மருத்துவமனையில் பணி புரியும் எல்லோரும், அன்று சாயந்திரம் வர இருந்த ICRC கப்பலுக்கு இவளை அனுப்பவேண்டும் என்று சொன்னார்கள். மருத்துவமனையில் எந்த பக்கம் திரும்பினாலும், உடலில் காயம் தாங்கிய மக்கள் தரையில் பாயில் படுத்து இருந்தார்கள். எதுவும் முறையாக இல்லை. உணவு இல்லை, மருந்து இல்லை, ஆட்களும் இல்லை. நான் இருந்த மருத்துவமனையை சுற்றி சுற்றி குண்டு வெடித்துக்கொண்டே இருந்தது. அங்கு இருந்த டாக்டர்களும் நர்ஸ்களும் அவர்களால் இயன்றதை செய்தார்கள்.





என்னை அட்மிஷன் பிரிவில் இருந்து, அறுவை சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள், அங்கு பற்றாக்குறை இருந்ததால். டாக்டர்கள் 24 மணிநேர ஷிப்ட் வேலை பார்த்தார்கள், தினமும். அங்கு இருந்த மூன்று மருத்துவர்களில், இருவர் தமிழ் ஈழம் மருத்துவ கல்லூரியில் படித்தவர்கள், இன்னொருவர் அரசாங்க மருத்துவர். குண்டடி பட்டு வந்தவர்களின் காயத்தை கிழித்து, அங்கு மருந்து ஊசி செலுத்தி, பிறகு உள்ளே குண்டின் பகுதி ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்று தேடி, அந்த இடத்தை தையல் இட்டு, கட்டு போட்டு அனுப்பினார்கள். இதற்கு நான் உதவினேன், பலமுறை. தொடக்கத்தில் இந்த பணியோடு, அடிப்பட்ட மக்களிடம் இருந்து கையெழுத்து வாங்கி ஐக்கியநாடுகள் சபையின் பிரிவிற்கு அந்த படிமங்களை கொண்டு சேர்ப்பதும் செய்தேன்.

- தொடரும்

முந்தைய பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.

வாக்கு மூலம் ஆங்கிலத்தில்





the statement of the last - battle survivor


On the road, I would meet people whom I had earlier met at the displaced camps and we exchanged regards on the road.  They would utter stories of shell attacks and how their family members were wounded.  It was such a common story that many men were dying due to shelling leaving many pregnant mothers as widows.  It was very hurting to realize that this land was going to have many children who had not seen the face of their father.    It was mostly the men who load their goods onto vehicles to displace to another location while their family stays inside the bunker seeking protection from the indiscriminate shelling.  At times like that, the shelling was causing more deaths among men.  Sometimes bunkers were themselves the target of shells and whole families were killed inside the bunker.    

In late March, I believe, there was a family living 50 metres in a tent beside ours.  It was a family of three children.  A shell hit the bunker in which the family was seeking protection and the whole family was killed inside the bunker.  Everyone went running to look at the dead.      I went in and saw that the bodies were covered in plastic bags and they were burying the family in the same bunker.   
In another earlier incident in Udaiyarkaddu, I dont remember the day, a family of five children was the target of the shells.  One of the children had gone to the shop to buy some things and that child was the only survivor in the incident after the shells hit the bunker in which these children were seeking shelter.
By end of March, food was getting really scarce.  People were left with nothing but dal and rice.   This was only available who had a good quantity of stock saved for their family and had carried it all along.  We were striving hard to give some kind of nutrition to ourselves and the people around us.  Tamil Rehabilitation Organization was providing gruel to people.  People would line up from morning to evening with their jugs and bowls to get the gruel.  This gruel was made of rice, water, sale and very little coconut milk.  There were instances when those line up were also targets of the shelling and many people were killed.     

There was an Australian Engineer who was there helping as well.  He had a pick-up and he travelled around doing small chores for people, giving transporatation for free, transporting gruel, medicines from one place to the other.    He was also transporting wounded or dead people to the hospital.  Sometimes, He even risked his life to get tents/logs from areas previously abandoned by people.  

This was all now happening in the Government declared safe zone.  It was less than 6 square kilometre of the small strip of land with the lagoon on one side and the sea on the other side.  I think, somewhere in the end of April, One of the local NGOs made flour sweets made with flour and sugar, deep friend and sold it for a very cheap price.  I was passing by the lineup of people waiting to buy the sweet as there were no shops or edible items available anywhere.  The friend I was travelling with stopped the motorbike to talk to a friend and  I saw a women fighting to go ahead in the line with a child.  We passed the line and two minutes later, a large explosion was heard.  The queue for food was hit and more than 12 civilians died on the spot while many others were injured.     
During these months of continuous displacement, it was hard to even get proper sanitary facilities set up as we will have to move again in another few days.  The toilets were built by digging a large pit and placing a plastic barrel in the pit.  Then it was covered with an aluminium panel.  As situation got worse, the toilets were basically pits dug on the ground and then palmyrah logs were aligned a few centimeters apart parallel to each other.  As it was close to the shore, springs were dug few meters away from the pit and a plastic coke/pepsi bottle was placed near the spring.  We would grab water in the bottle and use it to wash.  Diarhea was very widespread.  I myself had Diarhea continuously.   Medicine were very scarce and I just keep drinking black tea to stop the diarrhea. I have heard of many children dying due to Diarhea. 
The Government’s declaration of 48 hours no-firing time, ceasefire  was all a joke.  Shells were continuous and never stopped.  I am sure the world should have clearly known that during this time, aerial Kfir Bombardments were also done on a continuous basis.  It was all a joke. I remember once when it was declared that the Government is stopping its guns for 48 hours.  At this time alone, the Kfir jets bombarded areas close to our place three times.  Many civilians were dead in this incident.  The people felt that it was all a joke. 
In the beginning of April, all these 350,000 people were cramped to less than 6 sq.km of land with deaths occuring on a daily basis. In mid April, shelling was intense for a few days around Maathalan, pokkanai and more than 250,000 people were caught in a box form by the army.  Civilians leaving the boxed area were shot.  Areas all around this boxed area were shelling and more than 2000 people were estimated to be killed in the two days alone.  The rest of the 80,000 less people were caught up in the less than 2 sq.km area still declared as safety zone by the Sri Lankan Government.  
At this time, there were many cases being brought to the hospital wounded.  Since the hospital was in shortage of volunteers, I decided to help at the hospital.  Initially, I was at the admission area which was a blue tent with a tarpauline inside.  Every minute, new patients were brought in pick-ups run by the Tamil Rehabilitation Organization and just anyone.  What we had to do was help with first aid treatment  and do any first aid necessary and request them to be moved to the theatre if they need further treatment.  If not, they would have to wait in line for the next ICRC ship to arrive.  
As I went there the first day on the 23rd of April, a lady was lying down with one of her hand broke.  A young man, her son, was sitting beside her.  He was wounded in the head.  He would get up and then fall down back.  The hospital staff mentioned that she needed to be transported to the ICRC ship that is due to arrive in the evening.  There were wounded people lying all around the hospital in plastic mats.  Nothing was in order.  It was all done according to the minute.  Shelling was heard a few metres from us.  But the doctors and the staff worked their best.  I was then moved to the theatre as help was needed there. Doctors worked in rotating shifts 24 hours a day.  There were three doctors, two of them trained in the Tamil Eelam Medical College and one, a Government doctor.  As patients came in with sharpnel piece injuries, the doctors cut the wounds with the blade, injected their gloved fingers into the cut and scooched around for sharpnel piece.  Once they took it out, they used cotton to stop the bleeding and then used a piece of gauze to cover the wound and bandaged it.  

I faced several incidents during my time at the hospital.  Initially, I went to the hospital to get letters signed by people wounded in the shelling to be sent to the United Nations Security Council.  However, I ended up helping in the patient care and theatre rooms. 









  






தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com