யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது.
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்
அஞ்சனாவின் அந்த இரவு மிக புதுமையாக, விசித்திரமாக இருந்தது. அதற்கு முன் சில நாட்கள் அம்பத்தூரில் மொட்டை மாடியில் படுத்து வானத்தையும், நட்சத்திரத்தையும் பார்த்தது நினைவில் அவளுக்கு இருந்தாலும், இன்று சுற்றிலும் புதிய சூழலில், அத்தனைக்கு பழக்கமில்லாத ஆட்களின் மத்தியில், ஒரு சிறிய தீவில், காற்றும், கடல் அலையின் சத்தமும், பூச்சிகளின் ரீங்காரமும், எங்கேயோ கூவிக்கொண்டிருந்த பறவையின் சப்தமும், இவற்றின் ஊடே ஏதோ ஒன்று மனதை நெருடியபடி, கரும்பச்சை டெண்டில் தனியாக படுத்திருந்த அஞ்சனாவை தூங்க இயலாது செய்தது.

எழுந்து டெண்டின் ஜிப் கழற்றி தலையை எட்டிப்பார்த்தவள், எரிந்துக்கொண்டிருந்த தீயின் வெளிச்சத்தில் கைக்கடிகாரத்தை பார்க்க, மணி நான்கு என்றது. எழுந்து வெளியே வந்தவள், இன்னமும் இருந்த நிலா வெளிச்சத்தில் தன்னை சுற்றி பார்த்தாள். மொத்தம் நான்கு டெண்ட் அமைத்திருந்தார்கள் இவர்கள் ஏழு பேருக்கும். மார்வினும் ஹாரிஸும் ஒரு டெண்ட், இரண்டு ஜோடிகளுக்கு இரண்டு டெண்ட் சற்று தொலைவிலும், அஞ்சனாவினுடைய டெண்ட் இவர்கள் எல்லோரிடம் இருந்து சற்று தள்ளியும் நெருப்பை ஒட்டியமைத்திருந்தார்கள். மத்தியில் இன்னமும் கனன்று கொண்டிருந்த நெருப்பை பார்த்து கொண்டே சிறிது நேரம் நின்றாள் அஞ்சனா.
பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்துவிட்டு, செறுப்பை அணிந்து கடலை நோக்கி நடந்தாள். கடல் நிலவொளியில் கருப்பு மெர்க்குரி போல ததும்பி கொண்டே இருந்தது. கடலலை வந்து தொடும் தூரத்தில் ஈரமணலில் அமர்ந்தாள் . மனது பலவாறு யோசித்தபடி, இந்த நேரத்தில் இந்த இடத்தில் இருப்பதை எண்ணிப்பார்த்தாள். போன வருடம் இந்த நேரம் யாரேனும் இப்படி ஒரு தீவில் இரவில் கடலை பார்க்க அமர்ந்து இருப்பாய் என்று சொல்லி இருந்தால் சிரித்திருப்பாள். இன்று எத்தனை தொலைவில் இருக்கிறாள் அம்பத்தூரில் இருந்து. சுற்றி சுற்றி எத்தனை தண்ணீர்... இதன் மையத்தில் ஒரு சிறு புள்ளியான இந்த தீவில் அவள் இந்த நிமிடம் இருட்டில் அமர்ந்திருக்க, இதே புள்ளியில் இவளுடைய மூதாதையர்கள் விரும்பியோ விரும்பாதோ இருந்திருக்கிறார்கள் என்று எண்ணுகையில் வியப்பாக இருந்தது. ‘’Deja vu’’... This night was evoking mixed emotions in her...
சற்றே சிவக்க தொடங்கியிருந்த வானத்தை பார்த்தாள் அஞ்சனா. அத்தனை அழகாய் அமைதியாய் இருந்த இடத்தை விட்டு நகர மனமில்லாத போதும், நேற்று இரவு பார்த்த பாறைகளை வெளிச்சத்தில் பார்க்க வேண்டி எழுந்து நடந்தாள். அவர்கள் இருந்த இடத்தில் இருந்து சற்றே தள்ளி இருந்த பாறையில் தான் இருந்தது அந்த செதுக்கல்கள்.
மெல்ல நடந்து அந்த இடத்திற்கு வந்தாள் அவள். சேய்ஷல்ஸில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட தீவுகள் க்ரானைட் போன்ற தன்மையுடைய பாறைகளால் அமைந்தது. தரையில் இருந்து குத்தி நின்ற பாறைகள் அத்தனை கடினமானவை. அஞ்சனா அந்த எழுத்துக்கள் தாங்கிய பாறையின் அருகே வந்து நின்றாள். பரவ தொடங்கிய வெளிச்சத்தில், அந்த பெரிய பாறையில் ஒட்டியிருந்த மணலை கையால் தட்டிவிட்டு இன்னும் உற்றுப்பார்த்தாள், பாறையின் அருகே மண்டியிட்டு அமர்ந்து. ஒரு எழுத்தும் புரியாத போதும், வரலாறும் பல்வேறு நாகரீங்கங்களை பற்றி தெரிந்துக்கொள்வதில் பெரும் ஆர்வம் உள்ள அவளால் இது வட்டெழுத்து என்பதை சர்வ நிச்சயமாக சொல்லமுடிந்தது.
பரவியிருந்த லேசான குளிரால் புல்லரித்ததா இல்லை இவள் பார்த்துக்கொண்டிருந்த விஷயத்தால் புல்லரித்ததா என்று தெரியாது, பாறையை பார்த்தாற் போல அதன் எதிரில் கால்கள் இரண்டும் கையால் நெஞ்சோடு இறுக்க கட்டியபடி மணலில் அமர்ந்தாள் அஞ்சனா. என்னை எழுதி சில நூற்றாண்டுகள் ஆனது என்று சொல்வது போல லேசாக தெரிந்த அந்த சில வரிகளை பார்த்தாள். அம்பத்தூரில் இருந்து சென்னை வரும் வழியில் ரயில் பெட்டி முழுக்க பேனாவாலோ, சுறண்டப்பட்டோ இருக்கும் பெயர்களும் வாசகங்களையும், மரங்களிலும் எழுதப்படும் பெயர்களும் நிறைய பார்த்து இருந்தவளுக்கு, ‘’I was here’’ என்று சொல்வது மனிதர்களுக்கு எத்தனை முக்கியமான விஷயமாக இருக்கிறது என்று தெரியும்.
அங்கு தென்பட்ட வட்டெழுத்துகளில் இருந்தது யாருடைய பேரோ, ஊரோ, இல்லை இங்கு வந்து சேர்ந்த கதையோ, பூர்வீகமோ, நோயின் கடுமையோ, பசியோ, ஏக்கமோ, பயமோ என்று தெரியாது பார்த்துக்கொண்டே இருந்தாள். எப்போது கோவிலுக்கு சென்றாலும், சுவர் முழுதும் எழுதி இருக்கும் எழுத்துக்களை அத்தனை ஆர்வமாய் பார்ப்பாள், ஏதாவது ஒரு வார்த்தையாவது படிக்கமுடிகிறதா என்று. நடிகர் வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வேடிக்கையாக தான் சொல்வார், `` வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!`` என்று. ஆயினும் எத்தனை சரியான வார்த்தைகள், வரலாற்றின் ஏடுகள் தான் சொல்லிக்கொடுக்கிறது நாம் வந்த வழியை பற்றி. In one way or other, it’s the History that defines us to what we are today.
இவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும், ஆன்ஸ் ஜோஸ் (Anse Jose) கடற்கரையை நோக்கி நடந்தாள் அஞ்சனா. பத்து நிமிட நடைக்கு பிறகு வந்த சேர்ந்த இடத்தை சுற்றி பார்க்க, ஒரு பக்கம் சதுப்பு நிலமும், இன்னொரு பக்கம் முழுக்க இடிந்த கட்டிடங்கள் மிச்சங்களும் சிதறி கிடந்தது. ஒரு காலத்தில் leper’s colony ( தொழுநோயாளிகள் மட்டும் வசிக்கும் தீவு ) ஆக இருந்தபோது இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் சிதிலம் தான் அந்த இடம்.
கூரை, சுவர்கள், ஜன்னல் எல்லாம் காணாமல் போய் அங்கே இருந்தது, ஒரு 7- 8 உடைந்த பெரும் தூண்கள் தான். அந்த தூண்களின் மீது வெகுவாய் படர்ந்திருந்தது பெரிய கொடிகளும், பாசியும். ஏதோ ஒரு தூணில், ஏதோ ஒரு எண் குறிக்கப்பட்டு இருக்க, வெகு அருகே சென்று பார்த்தாள் அஞ்சனா. காடு போல மாறி இருந்த அந்த இடத்தில் ஒரு காலத்தில் 800 முதல் 900 மக்கள் இருந்திருக்கிறார்கள் என்று டேமியன் சொல்லியிருந்தான். தூணில் இருந்தது 24.04.1833. 1833ம் ஆண்டு நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட பெரிய மண்டபத்தின் தூண் இது. எத்தனை பேரின் வேதனையை பார்த்ததோ, எத்தனை பேர் உயிர்விடும் சத்தத்தை கேட்டதோ, எத்தனை பேரின் அரற்றலை கேட்டு ஒன்றும் செய்யாது ஒரு சாட்சி போல இருந்ததோ என்று தோன்றியது அந்த தூண்களை பார்த்தப்போது.
என்றோ ஒரு சமயம் உயிரோடு மக்கள் நடமாடியிருந்ததற்கு பெரிய தடயம் ஒன்றும் இல்லாது நின்ற இடிபாடுகளையும் சுற்றி இருந்த இடத்தையும் பார்த்தப்படி நின்றாள் அஞ்சனா. கீழே விழுந்து நொறுங்கி செடி கொடிகளுக்கு இடம் கொடுத்து கொண்டிருந்த இன்னொரு தூணில் அமர்ந்தாள். அவளை சுற்றி அமானுஷ்யமான நிசப்தம் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்த ஆமைகளை தவிர்த்து, மிச்சம் மீதி உயிர் ஏதும் இங்கு இல்லை என்று பறைசாற்றியது. சிறிது நேரம் அமர்ந்தவளுக்கு இன்னும் சற்று தூரத்தில் இருந்த இடம் கண்ணுக்கு தெரிய எழுந்து அங்கே போனாள்.
உளுத்து போக தொடங்கியிருந்த கட்டைகளால் அந்த இடத்தை சுற்றி ஒரு வட்டம் போல அமைத்திருந்தார்கள். தரை முழுக்க பரவி இருந்த செடி கொடிகளின் நடுவே அங்கங்கே நட்டு இருந்த சிலுவைகள், இந்த இடம் ஒரு இடுகாடு என்று உணர்த்தியது. கண்ணில் ஏனோ நீர் நிறைந்தது அஞ்சனாவிற்கு. அப்பாவை புதைத்த இடத்தில் சமாதி என்று ஒன்றும் கட்டவில்லை. நிறைய சமயம் பேசும் போது, இறந்தப்பின் புதைக்கத்தான் வேண்டும் என்று பேசியிருக்கிறார் அவர். எரிக்க வேண்டாம், இறந்ததிற்கு அடையாளமாய் ஏதும் கட்டக்கூடாது என்று எல்லாம் சொல்லியிருக்கிறார் அப்பா. இவை பொதுவாக இறப்பை பற்றி பேசுகையில் சொன்ன கருத்துகள் தான். ஏன் என்று கேட்டதற்கு, எதிலிருந்து வந்தோமோ அங்கேயே தான் போகவேண்டும். Energy can never be created or destroyed. Its best to leave us go Dust to dust என்பார். அதே போல இறந்த இடம் என்று சமாதி உருவாக்குவதில் உடன்பாடு இல்லாத காரணம் கேட்டப்போதெல்லாம், it will just pin down the resting soul. அது தவறு என்று சொன்னவரை, அவர் இஷ்டம் போல தான் புதைத்தார்கள்.
அப்பா இறந்த சில வருடங்கள் பிறகு அண்ணா அந்த இடுகாட்டிற்கு போய் அவர் புதைத்த இடம் முழுவதுமாக மாறி இருந்தது என்றான். வீட்டில் யாருக்கும் தெரியாது ஒரு மதியம் அஞ்சனா இடுகாட்டிற்கு சென்றாள். இடுகாடுகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட தன்மை இருக்கிறது. பச்சை பசேலென செடி கொடிகள் இருந்தாலும், ஏனோ ஒரு வறட்சியை தான் காட்டும். அங்கு இருந்த மரங்களிலும், அலையும் காற்றில் கூட ஏதோ ஒரு பசியும் ஏக்கமும் சோகமும் இருப்பது போல தோன்றியது. அவள் வீட்டில் இருந்து அஞ்சனாவின் தாத்தா மணவாளன், பாட்டி சின்னம்மா, பாட்டியின் அம்மா, அப்பா, சின்னி அத்தை, அத்தையின் இறந்த பெண் குழந்தை என்று எல்லோரும் அங்கே தான் எங்கேயோ புதைக்கப்பட்டு இருந்தார்கள்.
அண்ணா சொன்னது போலவே ஒரு மரத்தின் அருகே போய் நின்றவளுக்கு நிற்க இயலாது போனது. அப்பாவின் மேலே நிற்கிறோமோ என்று வலித்தது. படித்த படிப்பும், உணரும் உணர்வுகளும் எத்தனை வித்தியாசமானது. அப்பா இறந்து இத்தனை வருடத்தில் இப்போது எப்படி இருப்பார் பார்க்க என்று மனம் ஏனோ நினைத்து கொண்டே இருந்தது. ஏதேதோ யோசித்து மண்டியிட்டு மனது வறண்டு போகும் வரை சத்தமில்லாது அழுதுக்கொண்டே இருந்தாள், எத்தனை நேரம் போனது என்று தெரியாது.
எத்தனையோ பேரின் இறப்பை பார்த்தவளுக்கு, தன் அப்பாவும் அப்படி தான் இறந்து போய்விட்டார் என்று யோசிக்க மனம் மறுத்தது. அஞ்சனாவிற்கு அவளுடைய அப்பா ஒரு பெரிய வீரராக, ஞானியாக, கதாநாயகனாக, குருவாக, சித்தராக, இளமையோடு, அழகாக தான் தெரிகிறார். அவரை வெறும் சாதாரண மனிதரை போல பார்க்க அவளுக்கு முடியவே இல்லை. எத்தனை நுட்பமான விஷயம் உயிர் என்பது. எந்த ஆட்டம் போட்டாலும், எத்தனை பெயர் பெற்றாலும், எத்தனை கோடி கொண்டாலும் கடைசியில் நீயும் அடையப்போவது என்னை தானே என்ற தத்துவம் உணர்ந்தது போல அவளுடைய அழுகையை அமைதியாக வேடிக்கை பார்த்த அந்த இடுகாட்டை அஞ்சனாவால் மறக்க முடியாது போனது. இன்று இந்த தீவில் இந்த இடுகாட்டில் நின்ற போது, Robin Williams நடித்திருந்த ‘’What dreams may come’’ படத்தில் அவர் நரகத்தில் நடக்க, உற்று பார்க்க அவர் நடப்பது முழுக்க உயிரோடு தரையில் புதைந்த மக்களின் மீது என்று தெரியும். ஏனோ அஞ்சனாவிற்கு இப்போது அப்படி தான் தோன்றியதால், அதற்கு மேலே இருக்கமுடியாது, அங்கு இருந்து திரும்ப camp செய்திருந்த இடத்திற்கு நடக்க தொடங்கினாள்.
அந்த பாறையின் அருகே வந்து போது, ஏனோ தாண்டி போக தோன்றாது, அங்கேயே இப்போது சாய்ந்து அமர்ந்து கொண்டு, தண்ணீரில் இருந்து எட்டி பார்க்க தொடங்கிய சூரியனை பார்த்தாள். அங்கு இருந்த, இறந்த மக்களை பற்றி யோசிக்க தொடங்கினாள். தொழுநோய் என்பது ஒரு பாக்டீரியா கிருமியால் உருவாகும் நோய். Mycobacterium leprae இது தான் நோய்கிருமியின் பெயர். இந்த நோய் வருவதால் கை கால் அழுகி போகும் என்பது இல்லை, இந்த கிருமி கை கால்களின் நரம்புகளை பாதித்து முற்றிலும் மரத்து போகச் செய்யும். இவை முகத்தையும் தோலையும் கூட பாதித்து cartilage tissuesஐ சிதைத்து சப்பை மூக்கும், தடித்த தோலும், சில சமயம் கட்டிகளும் இருக்கும்படி மாற்ற செய்யும் தன்மையுடையது. நல்லவேளையாக இப்போது இருக்கும் மருந்துகளும், சிகிச்சை முறைகளும் வந்த பிறகு இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
மருத்துவக்கல்லூரியில் House surgeon ஆக கட்டாயம் ஒரு வருடம் வேலை செய்யவேண்டும், படிப்பு முடித்ததும். இதில் நான்கு மாதம் Medicine, நான்கு மாதம் surgery, நான்கு மாதம் Obstetrics and gynaecology, நான்கு மாதம் community medicine posting செய்யவேண்டும். இந்த துறைகளில் வேலை செய்து முடித்தால் தான் டிகிரி சான்றிதழ் கிடைக்கும். அப்படி ஒரு நாள், பொது மருத்துவத்தில் காலை புறநோயாளிகள் பிரிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள் பெரிய மேஜையை rectangle ஆக போட்டு, டாக்டர்கள் அமர நாற்காலி, நாற்காலியின் வலப்புறத்தில் நோயாளிகள் அமர ஒரு மர ஸ்டூல் போடப்பட்ட இருந்தது. இரு டாக்டர்களின் மத்தியில் ஒரு ஸ்டூல் வீதம் அந்த மேஜையை சுற்றி மொத்தம் 8 டாக்டர்களுக்கு இருக்கை அமைத்திருந்தார்கள். காலை தொடங்கி மதியத்திற்குள் எப்படியும் 250 - 350 நோயாளிகளை பார்க்க நேரலாம். அத்தனை பரப்பரப்பாக இருக்கும். ஆனால் அஞ்சனாவும் மற்ற எல்லோரும் சேர்ந்து சிரித்து பேசிக்கொண்டு வேலை செய்வதால், வேலை பளு தெரியாது. மொத்தம் ஏழு பேரில், இரண்டு ஆண்கள் மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். சிரிப்புக்கு குறைவே இருக்காது.
அஞ்சனாவின் பக்கம் ஒரு வயதான கிழவர் வந்து அமர்ந்தார். பொதுவாக பார்ப்பது எல்லாம் ஜுரம், தலைவலி, உடல்வலி இப்படி தான். அந்த தாத்தாவை பார்த்து அஞ்சனா கேட்டாள், `` என்ன தாத்தா உடம்புக்கு`` என்று. அவரும், `` காலு கொஞ்சம் கொடச்சலா இருக்கு தாயி. அடிப்பட்டது தெரியலை. ஆச்சு ஒரு நாலஞ்சு வாரம் ஆறமாட்டேங்குது. லேசா வலிக்குது தாயி, இந்த இரண்டு மூணு நாளா`` என்றார். சக்கரை வியாதி இருக்கா என்று கேட்டதற்கு ஆமான்னு நெனக்கிறேன் என்றார் அந்த தாத்தா. பொதுவாக சிதம்பரத்தை ஒட்டி இருந்த கிராமங்களில் இருந்து வரும் வயதானவர்கள் செறுப்பு அணிந்து இருக்கமாட்டார்கள். இவர் காலில் ஒரு செம்மண் கலந்த அழுக்கான துணி சுற்றி இருந்தார். அஞ்சனா அவரை பொதுவாக பரிசோதித்து விட்டு, ஃபைலில் எழுத தொடங்கும் முன், ``தாத்தா அந்த கால் துணியை கழட்டுங்க. காயம் எப்படி இருக்குன்னு பாக்குறேன்`` என்று சொல்லிவிட்டு எழுத தொடங்கினாள். நான்கு வரிதான் எழுதியிருப்பாள் அஞ்சனா, பக்கத்தில் அமர்ந்த அனிதா வீலென கத்தியபடி கால்களை மேலே இழுத்துக்கொண்டாள். என்ன நடக்கிறது என்று பார்க்க, அந்த கறுப்பு மோசைக் தரை முழுக்க வெள்ளை வெள்ளையா நூறுக்கும் மேற்ப்பட்ட புழுக்கள் (Maggots) சிதறி நான்கு திசையிலும் ஓடிக்கொண்டிருந்தது பார்த்ததும் அவளுக்கு வார்த்தையே வரவில்லை சிறிது நேரத்திற்கு.
அஞ்சனாவும் மற்றவர்களும் காலை தூக்கி நாற்காலியின் மீது வைத்துக்கொண்டு வார்ட் ஆயம்மாவை கூக்குரலாய் கூப்பிட்டார்கள். இருந்த நோயாளிகள் எல்லோரும் சிதறி அறையை விட்டு ஓடி வாசலில் போய் நின்றார்கள். அந்த தாத்தா காலை கொஞ்சம் பலமாக அசைத்தாலும், கொத்தாக புழுக்கள் அவருடைய காயத்தில் இருந்து தரையில் கொட்டியது. உடலெங்கும் புழு ஊறுவது போல தோன்றி அப்படி சிலிர்த்தது எல்லோருக்கும். அதற்குள் காமாட்சி ஆயாம்மா இன்னும் வார்ட் பாய் முருகன் இன்னும் இருவர் வந்து துடைப்பம் எடுத்து பெறுக்கி புழுக்களை ஒரு பெரிய பேப்பர் பொட்டலத்தில் சேகரித்தார்கள். அந்த இடமே தாங்கமுடியாத இனிப்பான வீச்சம் அடித்தது. அந்த தாத்தாவின் காலை ஒரு பெரிய பாலிதின் பைக்குள் வைத்து இறுக கட்டி, அறுவை சிகிச்சை பிரிவிற்கு அழைத்து போனார்கள். அஞ்சனாவும் இன்னும் இரண்டு டாக்டர்களும், அறுவை சிகிச்சை பிரிவில் மேல்படிப்பு படித்துக்கொண்டிருந்த முத்துஸ்வாமி அண்ணாவும் சேர்ந்து, அந்த தாத்தாவின் காலில் இருந்த புழுவை ஒவ்வொன்றாக Forceps கொண்டு எடுத்தது இன்னமும் நினைவில் இருந்தது அவளுக்கு.
புழுக்கள் சதையில் ஒட்டியிருக்க, அதை எடுக்க பலமாக இழுக்க, அந்த புழுக்கள் வழுக்கிக்கொண்டு போக, ஒவ்வொரு முறையும் அவளுக்கு முதுகு தண்டு சில்லிட்டதும், அதன் பின் சாதத்தை பார்த்தாலும், புழு போலவே தோன்றி சாப்பிட பிடிக்காது போனதும், ஏதோ ஒன்று இரண்டு புழு இன்னமும் துணியில் ஒட்டி மேலே அவ்வப்போது ஊறுவது போலவும் தோன்றியதும் மறைய நாட்கள் பல ஆனது. அந்த தாத்தாவிற்கு தொழுநோய் இருந்தது கண்டுப்பிடித்து மருந்து கொடுத்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு அவர் நன்றாக இருப்பதாய், வடலூர் புறநோயாளிகள் பிரிவில் பார்த்து சொன்னார்.
இப்படி ஏதேதோ யோசித்தப்படி, கல்லில் இருந்த ஒவ்வொரு எழுத்துக்களின் மீதும் கையை வைத்து அவற்றை தொடர்ந்தாள் அஞ்சனா. உளியெல்லாம் கொண்டு செதுக்கிய தெளிவான வார்த்தைகள் இல்லை அவை. இன்னொரு கூரான பாறையோ அல்லது அது போன்ற ஏதோ ஒன்றைக் கொண்டு தான் செதுக்கி இருப்பார்கள் என்று தோன்றியது. செதுக்கிய விரலை பற்றி யோசித்து பார்த்தாள் அவள். மரத்து போவதால் கை கால்கள் திரும்ப திரும்ப சிதைந்து புண்ணாகி ஆறாது, குறைந்து குறைந்து விரல்கள் குட்டையாகி போகும் தொழுநோயில். விரல் முழுக்க புண்ணோடும், புழுவேறியும் இருக்க எத்தனை கடினமான காரியமாக இருந்திருக்கும் இந்த எழுத்துக்களை செதுக்க என்று தோன்றியது அஞ்சனாவிற்கு.
அந்த வட்டெழுத்து பக்கத்தில், இருந்த உருவத்தை பார்த்தாள் அஞ்சனா. கையில் வேல் இப்பொது தெளிவாக தெரிந்தது வெளிச்சத்தில். முருகர் படம் தான் நிச்சயமாக. கண்களில் ஏனோ கண்ணீர் தளும்பி பார்த்துக்கொண்டிருந்த எழுத்துக்கள் முன்னும் பின்னுமாய் மங்கலாகி ஓடியது. ஆங்கிலேயர்களும் ஃப்ரெஞ்ச்க்காரர்களும் கொடிக்கட்டி பறந்த காலத்தில் தலை விரித்து ஆடியதாம் அடிமை தொழில். வெறும் சில நூறு ரூபாய்க்கு, ஆணோ பெண்ணோ கைமாறினார்களாம். சேய்ஷல்ஸ், மொரிஷியஸ், மடகாஸ்கர் இது போன்ற இடங்களுக்கு தமிழர்கள், வீடு மற்றும் பெரும்பாலும் பண்ணை வேலைக்காக கொண்டு வரப்பட்டவர்கள்.
அஞ்சனாவால் எப்போதும் போல இந்த சமயத்தையும் ஒப்பிட்டு பார்க்க அவளுக்கு கிடைத்த ஒரே விஷயம் படம் தான். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் (Steven speilberg) எடுத்த அமிஸ்டேட் (Amistad) என்ற படத்தை ஒரே முறை தான் பார்த்தாள். இன்னொரு முறை பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்து இருந்தவளுக்கு எப்போதுமே போர் பற்றி படிக்கவோ பார்க்கவோ பிடிக்காது போனது. சமீபத்தில் வந்த மெல் கிப்ஸன் (Mel Gibson) படமான அப்போகேலிப்டோ (Apocalypto) படமும் அப்படி ஒரு தாக்கத்தை தான் ஏற்ப்படுத்தியது அவளுக்குள். இரண்டு படமும் விருப்பத்திற்கு மாறாக அடிமையாக ஆக்கப்பட்ட இடம்விட்டு இன்னொரு இடத்திற்கு கொண்டு போகப்படும் இனத்தை பற்றியது தான். இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்ததன் பிற்பகுதி போராட்டங்கள், எழுச்சி, பேச்சு வார்த்தை பற்றி நிறைய தகவல் இருப்பினும், தொடக்க கட்டத்தில் அவர்களால் நடந்தேறிய வன்மைகள் பற்றி அத்தனைக்கு தகவல் அஞ்சனாவிற்கு தெரியவில்லை.
அஞ்சனாவிற்கு இந்த பாறை பேசாது சொல்லும் கதை இப்படியாக தான் மனதிற்கு பட்டது. தமிழ் கடவுள் முருகன் என்பது எல்லோருக்கும் தெரியும். கட்டாயம் பணம் படைத்தவர்களோ, மேல் ஜாதி மக்களோ இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு அடிமையாக நிச்சயம் வந்து இருக்கமாட்டார்கள். இந்த இடங்களுக்கு அழைத்து வரப்பட்ட எல்லோரும் கீழ்சாதி மக்களாக தான் இருக்கவேண்டும். எந்த கிராமத்தில் இருந்தோ பட்டியில் அடைத்த மாடுகள் போல, குப்பனோ, சுப்பனோ, வேலாயியோ, சூலாயியோ இந்த ஊருக்கு இழுத்து வரப்பட்டார்களோ என்று எண்ணுகையில் ரத்தம் கொதித்தது. இதில் இப்படி ஒரு கொடிய நோய் வரப்பெற, இந்த தீவில் வந்து குப்பையை போல கொட்டிவிட்டு போன படகை பார்த்து எப்படி வயிறு எரிந்து நின்றிருக்கக்கூடும். இவள் அமர்ந்த இதே இடத்தில் அமர்ந்து என்ன நிலையில் இந்த எழுத்துக்களை செதுக்கினார்களோ என்று எண்ணிணாள் அஞ்சனா. History is the record of an encounter between character and circumstances என்று படித்திருக்கிறாள். எத்தனை பட்டவர்த்தனமான உண்மை.
சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்த இடத்தில், மின்சாரம் இல்லை. வெளியுலக தொடர்பு என்று ஒன்றும் இல்லை. உணவு என்று ஒன்றும் இல்லை. மருந்து வசதியில்லை. உடுத்த உடை போதிய அளவு இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து அடிமையாக வந்த மக்களோடு, நோயால் ஒதுக்கிவைக்கப்பட்ட தீவில் தினமும் வந்து இங்கு அமர்ந்து செதுக்கிய முருகனை பார்த்து என்ன தோன்றியிருக்கும் அந்த தாழ்ந்த ஜாதி மனிதனுக்கு என்று தோண மனம் கனத்தது.
உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒரு நாய் போல, ஒரு பன்றி போல தான் நடத்தியிருக்கிறார்கள் தன் பாட்டன் பூட்டனை என்று யோசிக்கையில் ரத்தம் சுண்டியது அஞ்சனாவிற்கு. நிறைய சமயம் ஜாதியை பற்றி பேசினாலே, ஏனோ எப்போதும் இதை பெரிய விஷயமாக ஆக்குகிறோம் என்பது போலவே பேசிய தன் இன நண்பர்களை பற்றி யோசித்தாள்.. அஞ்சனாவால் அப்படி யோசிக்கமுடியவில்லை. தன்னுடைய வரலாற்றினுடைய முக்கியத்துவம் தெரியாதவர்களை பற்றி எங்கோ படித்தது என்னவெனில், `` If you didn’t know history, you didn’t know anything. You probably will die as a leaf that never knew that it was part of a tree’’ என்பது தான்.
மனது கனன்று, கண்களை மூடி அந்த நிமிடத்தில் கரைந்து கொண்டிருந்த அஞ்சனாவின் பக்கம் வந்து அமர்ந்து தோளில் சாய்த்துக்கொண்டான் டேமியன். அவனை கண் நிமிர்ந்து ஒரு கணம் பார்த்தவள், ஒன்றுமே பேசாது, சாய்ந்துக்கொண்டாள். நிசப்தம் கொண்டு பேசியபடி, வலியை பகிர்ந்து கொள்ள, அந்த காலை வெளிச்சமாக புலர்வதை பார்த்தப்படி அமர்ந்திருந்தார்கள் அந்த இரு நண்பர்களும், நேற்றைக்கும் நாளைக்கும் மத்தியில் தொலைந்து.

- தொடரும்
யமுனா ராகவன்