பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 18, 2010

விமான நிலையத்தில் தமிழர்கள் கைது- இயக்குநர் ராம்.

இன்று மதியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் சென்னை கைப்பேசி வழி சுற்றிக்கொண்டிருந்தது.

”இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் இரு புதல்வர்களும் சென்னை
விமான நிலையத்தில்மாலை 4:55க்கு தரை இறங்குகிறார்கள என “.


நேற்றைக்கு முந்தினம் தலைவரின் தாயாருக்கு அனுமதி மறுத்த அதே சென்னை விமான நிலையத்தில்,அதே தமிழகத்தில் இவர்கள் தரை இறங்குகிறார்கள் என்ற குறுந்தகவல் பலரின்
மனதை மேலும் காயப்படுத்தியது.இவர்களுடைய வருகையை அனுமதிக்கக்கூடாது என பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கம், இளங்தமிழர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் தோழர்கள்
சென்னை பண்ணாட்டு விமான நிலைய வருகைக்கு முன் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

இரண்டு லட்சம் தமிழர்களை கொன்ற அதிபரின் புதல்வர்கள் தமிழகத்தில் கால் வைக்கக் கூடாது என்று கோஷமிட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக மா.டேவிட் பெரியார், அதியமான், பாலகுரு, முத்தழகன், பாஸ்கர், செல்வன், செங்குட்டுவன், கரிகாலன், பரஞ்சோதி பாண்டியன், சோழன், செல்வா, ரவி, ஃப்ரான்சிஸ், கலைமதி ஆகிய 14 தோழர்கள் கைது செய்யப்பட்டு சென்னை
விமான நிலைய காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.

விமானம் மாறுவதற்காக வழக்கமாக வெளி வந்து உள் செல்லும் பாதையில் ராஜபக்‌ஷேவின் புதல்வர்கள் இன்று வரவில்லை. அவர்கள் விமான நிலையத்துக்குள் இருந்தே விமானம் மாறி பறந்து விட்டனர்.அவர்கள் போன ஊரை பற்றி இரண்டு தகவல்கள் உள்ளன.

1. ஐ.பி.எல் மேட்ச் பார்ப்பதற்க்காக பெங்களூர் சென்றிருக்கலாம்.
2. வெங்கடாஜலபதியை தரிசிக்க திருப்பதி சென்றிருக்கலாம்.


இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்தும்,இந்திய ராமேஸ்வர மீனவர்களை அனுதினமும் சித்ரவதைக்குள்ளாக்கியும்,இந்தியாவிற்கு விரோதமான பாசிச ஆட்சி நடத்தி வரும் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் புதல்வர்கள் வருகையை தடுக்கக்கோரிய நிஜ இந்திய தமிழர்கள் ஆகின்ற 14 தோழர்களையும் இந்திய அரசாங்கமே உடனடியாக விடுதலை செய். இந்திய அரசாங்கத்திடம் நாங்கள் கூறுவதெல்லாம்,இந்தியர்களாகிய எங்களின் உணர்வை மதி.எங்களின் நலனை பேணு.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com