பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு அறிவிப்பு. காட்சியில் 'வீடு' பற்றிய தொடர், இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் கல்லும் மண்ணும் கலந்து கட்டிய உறைவிடம் என்பதையும் தாண்டி ஒரு வீட்டில் படிந்திருக்கும் வலி, வரலாறு, இனிய நிகழ்வுகள், துன்பியல் நினைவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - kaattchi@gmail.com

April 22, 2010

மதிப்பிற்குரிய ஆண்களே இதைப் படிப்பீராக - யமுனா ராகவன்

நான் பல வேலைகளில் யோசித்தது உண்டு, என்ன தான் செய்யவேண்டும் நான், மனம் புழுங்கி, வருந்தி சொல்லவரும் விஷயங்கள் உங்கள் காதில் விழ, அங்கீகரிக்கப்பட, மாற்றம் வரும்படியான மனநிலை உருவாக என்று. இதுவரை பிடிப்படவில்லை, இனியாவது பிடிபடுமா எனவும் தெரியாது எனக்கு.

என்னையோ, இல்லை என்னை போலவே தொலைந்த முகங்கள் கொண்ட பெண்களையோ நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கலாம், பார்த்திருப்பீர்கள், பார்க்க நேரலாம். கடக்கும் நிமிடங்களை இறுகப்பற்றி, நேற்றைகளையும் நாளைகளையும் மறந்த எங்களுக்கு இன்னும் பேர் வைக்கப்படவில்லை. எங்களை கண்டுப்பிடிப்பது அத்தனை கஷ்டமில்லை. நாங்கள் அசின்களோ, தமன்னாக்களோ, ஐஷ்வர்யா ராய்களோ நிச்சயம் இல்லை. Matrimonial column தாங்கி வரும் Tall, Fair and Pretty பெண்கள், ஒரு 85% நாங்களாக இருக்க வாய்ப்பில்லை. சுமார் அழகாய், சுமார் புத்தியோடு, சுமார் பணத்தோடு, சுமார் படிப்போடு, சுமார் வேலையோடு எங்கள் வாழ்க்கையை கடந்து, வந்த வழி திரும்பிப் பார்த்து வெதும்பி குமுற மட்டுமே தெரிந்த இந்த முதுகெலும்பில்லா கூட்டத்தில் நானும் ஒருத்தி. பேச்சு வழக்கிற்கு நாங்களை நான் என்றே வைத்துக்கொள்ளலாமா... புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவோமாக!

மூலக்கடையில் நீங்கள் விட்ட சிகரெட் புகையின் ஊடே, நான் உங்களை கடந்திருப்பேன். வெண்டைக்காய், தக்காளி பார்த்து வாங்குவதில் முனைப்பாய் இருந்தப்போது தெரிந்த என் இடுப்பை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பஸ்ஸில் இடிபட்டு இடமின்றி நிற்க, என் பின்பகுதியை தேய்த்துக்கொண்டு உங்கள் உறுப்புகளின் வேட்கையை சிலநிமிடம் தீர்த்துக்கொள்ள, அறுவெறுப்பாக உணர்ந்தாலும், வீட்டில் நேற்று என்னை அடித்ததில் வலித்த கன்னத்தையும் உடைந்த தன்மானத்தையும் யோசித்து கொண்டு ஒன்றும் சொல்லாது வந்ததில், பஸ் விட்டு இறங்கி, உங்கள் நண்பர்களிடம், ``மாம்ஸ்! இன்னைக்கு பஸ்ல ஒரு Aunty செமயா company குடுத்தாடா!`` என்று பீற்றிக்கொள்ள வைத்தது நானாக இருக்கலாம். பல சமயங்களில் வெறும் மார்பகமாகவோ, பிட்டமாகவோ, இடுப்பாகவோ கூட நான் உங்களுக்கு தெரிந்திருப்பேன். ``காலைலயே என்னமோ புருஷன் செத்தாப்புல எப்புடி இருக்குது பாரு, விடியாமூஞ்சி!`` என்று வாய் விட்டோ, மனத்திற்குள்ளேயோ திட்டினாலும், ஒன்றுமே உறைக்காது காப்பி போட்டு, காலை சமையல் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுப்பவள் நானாக இருக்கலாம். அலுவலகத்தில் நேரத்திற்கு வந்து வேலையை மட்டுமே கவனித்து, பாராட்டப்பட்டால், ``இதையும் அதையும் காட்டியே வேலை முடிச்சிக்கிறாளுங்க`` என்று சொன்னதும் என்னை பற்றி இருக்கும். ஆக மொத்தம் இப்படி நீங்கள் காணும் திசை, ஊர், நாடு முழுக்க இருப்பினும், அரூபமான என்னை நீங்கள் உற்றுத்தேடித்தான் கண்டுப்பிடிக்க முடியும்.
 
திமிர் பிடிச்ச பேச்சு, தெனாவட்டு பார்வை, எவன் கூடவேணும்னா போகலாம், குறைந்த பட்ச ஆடைகள் போடுவது, பிறப்புறுப்பை பற்றி பேசுவது ஆகியவைதான் பெண்ணியம் என்று நீங்கள் நினைத்திருப்பீரெனில் மேற்கொண்டு படிக்கவும். ``எதற்கு இத்தனை பேர் பெண்ணியம் பற்றி பேசுதுங்க, அவர்களுக்கு தான் எத்தனை சலுகைகள், இன்னும் என்னதான் வேணும் இந்த எழவெடுத்ததுங்களுக்கு!`` என்று சொல்வீரேயானாலும் மேலே படிக்கவும்.
 
வேதக்காலத்தில், ஆணும் பெண்ணும் சமமாக இருந்ததாகவும், எல்லாமே கற்றுத்தெரிந்துக் கொண்டார்கள் பெண்கள் என்று பல வேதங்கள் சொல்கிறது. எப்போது இருந்து மாறியது இந்த நிலை. 500 BCக்கு மேலே, ஆரியர்களும், இஸ்லாமியர்களும் வந்ததால் குடைசாய தொடங்கியதாம் பெண்களுக்கான மரியாதை. மிதிப்பட்டு, நசுங்கி, அடுப்பங்கரை நெருப்போடு கரிபடிந்து, இரவுகளில் பேசாது புணர்ந்து, பிள்ளை பெத்துப்போடும் இயந்திரங்களாகி, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் செத்து நடைபிணங்களாக மாறிப்போனார்கள். அவர்களுக்கு எதிராக நடந்த எதுவுமே வரலாற்றில் பதியவில்லை. பதிக்கப்பட்டவைகளும் ஆண்களின் வக்கிரத்திற்கு மைல்கல்லாகி போன மேற்கூறிய விஷயங்கள் தான். படங்களில் பார்த்தோ, புத்தகங்களில் படித்தோ இருக்கலாம் நீங்கள்.
 
Early vedic period சமயத்தில், பெண்கள் 20 வயது மேலே தான் பெரும்பாலும் மணந்ததார்களாம், திருமணம் செய்யும் ஆணை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இருந்ததாம், ஆனால்  பெண்ணினம் அதன் பின் தாங்க நேர்ந்த துரதிர்ஷ்டங்கள் பல்வேறு. 70 வயது ஆணிற்கு கூட 10, 12 வயது பெண்ணைக்கூட திருமணம் செய்ய பால விவாக உரிமை, இன்னும் sathi ( உடன்கட்டை ஏறுதல் ), jauhar ( தோற்ற நாட்டின் பெண்கள் அத்தனை பேரும் அடுத்த நாட்டிற்கு உரிமை பொருள் ஆவது.. எவன் வேண்டுமானாலும் புணரும் குப்பைத்தொட்டி ஆவார்களாம். இது இன்னமும் நடந்துக்கொண்டே தானே இருக்கிறது ), தேவதாஸிகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று நீண்டுகொண்டே போகும் பட்டியல் முழுக்க கண்ணீர், ரத்தவாடை, திரும்ப பேசமுடியாது அடங்கி போன உறுப்புகள் தான், வரலாற்றின் பக்கங்கள் முழுக்க.
 
``இன்னும் எத்தனை நாட்கள் தான் பேசுவீர்கள் இதையே. ஆமாம் அந்த காலத்தில் இப்படி தான் இருந்தார்கள், இறந்தார்கள். அதற்கு இப்பொது என்ன செய்வது`` என்று ஒரு வேளை உங்களுக்கு தோணலாம். தோணும். பழைய கதையை விடுவோம்.  இப்போது நம் சமயத்திற்கு time travel செய்யலாம். பெண்கள் படிக்கிறார்கள், ஆண்களை காட்டிலும் பெரிதாய். பெண்கள் கால்வைக்காத துறையே இல்லை. இதனை கேட்கும்போது பெருமையாக இருக்கிறது, நிஜமாகவே. ஒடுக்கப்பட்டு இருந்த நிலையில் இருந்து எழுந்து நிற்க முயலும் கம்பீரம் தாங்கிய பெண்ணினம் பற்றி யோசிக்கும் போது. ஆனால் இத்தனைக்கு நடுவிலும், சமீபத்தில் பார்த்த ஒரு statistics சொல்வது உங்களோடு பகிரவா?
 
ஐக்கிய நாடுகள் சபை (UN) சொல்கிறது, ஒரு நிமிடத்திற்குள் 3 பெண்களுக்கு அநீதி நிகழ்கிறதாம், 7 நிமிடத்திற்குள் ஒரு பெண் கணவனாலோ அவன் குடும்பத்தினராலோ கொடுமைப் படுத்தப்படுகிறாளாம், 30 நிமிடத்திற்குள் ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் படுகிறாளாம். இந்த எண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்கிறதா.. சர்வ நிச்சயமாக ஒன்றும் சொல்லியிருக்காது. இப்படி வைத்துக்கொள்ளுங்களேன். இந்த கடிதம் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்கள் அறையின் உள்ளேயோ, நீங்கள் இருக்கும் அலுவலக அறையின் தரையிலோ, இந்த பெண்களை உங்கள் அருகிலோ, எதிரிலோ, நிற்கவோ அமரவோ கிடத்தியோ பாருங்கள்.  அரைமணி நேரத்தில் உங்களை சுற்றி 90 பெண்கள் அழுதுக் கொண்டிருக்கலாம். ஒரு நான்கு பெண்கள் அடிவாங்கி வெவ்வேறு உடல் மனக்காயத்தோடு அமர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு பெண் நிச்சயம் துணிகிழிந்து, ரத்தம் ஒழுக, ஒருவனாலோ அல்லது பலராலோ பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவோடோ, இன்றியோ கிடக்கலாம்.
 
அட போகட்டும் ஐய்யா... ஒரு மணிநேரத்தில் குவியும் உடல்களை கணக்கு போட உங்களுக்கெல்லாம் நேரம் இல்லை. உங்க நேரம் IPL, நித்தியானந்தா, Airtel, மத்திய சாப்பாடு, Hero Honda, மட்ட வெயில், car, ரோட்டின் traffic, சிகரெட், காலை முதல் மாலை வரை உங்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் வேலை, உங்களை தாண்டி போகும் Figure, sms இன்னும் இது போல extra விஷயங்களை பார்க்கவே நேரம் போதாது. இதில் நீங்கள் தாண்டி போகும் 2 பெண்களில் நிச்சயம் ஒருவர் அவர் வீட்டிற்குள்ளேயே எதாவது ஒரு விதத்தில் domestic violence அனுபவிப்பவர் மற்றும் திருமணமான மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கட்டாயம் இக்கொடுமை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தன் வாழ்க்கையில் எல்லா பெண்களும் ஒரு முறையேனும் இப்படி கட்டாயம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என்னும் விஷயம், உங்களுக்கு தேவை இல்லாதது தான்.
 
பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எப்படி அடக்க ஒடுக்கமாக நடக்கவேண்டும் என்று நம் 25 வயது முதல் 60 வயது வரை உள்ள கதாநாயகர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் கேட்டு கைத்தட்டவும், ``சரியா சொன்னாருடா`` என்று சீட்டி அடிப்பது தானே உங்களுக்கு பிடிக்கும். நான் புடவையிலோ, சல்வாரிலோ, ஜீன்ஸிலோ, நைட்டியிலோ எந்த உடையில் இருந்தாலும் என்னை சந்தித்த 90% ஆண்கள் பேசும்போதோ, பேச்சின் ஊடேயோ என் மார்பையோ உடலையோ பார்த்தார்கள், மேய்ந்தார்கள். மீதமுள்ளவர்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை, அதனால் அவர்களை இதில் இருந்து விட்டுவிடுவோம். ஆக நான் என்ன உடுத்தினாலும் பார்க்க தானே போகிறீர்கள். நான் ஒன்றும் பேச்சின் ஊடே உங்கள் கால்சராயின் zipper, பார்த்துக்கொண்டு பேசவில்லையே. நீங்கள் மட்டும் ஏன் இப்படி?
 
என் உடை என்னை, என்னுடைய ஒழுக்கத்தை பறைசாற்றும் என்பது தானே உங்கள் நியாயம். நான் அணியும் உடுப்புகளின் வழியே மறைந்தும் மறையாது தெரியும் என்னுடைய உடல் தானே உங்கள் காமத்தை தூண்டுகிறதாய் உங்கள் பக்கத்து தர்க்கம். என்னுடைய நடை உடை பாவனை பேச்சுதானே உங்களுக்கு சொல்கிறது நான் பத்தினியா, பரத்தையா என்று. நீங்களே சொல்லுங்கள், உங்கள் உலகில் யார் நல்ல பெண்கள்? யார் ஒரு மாதிரி பெண்கள்? உங்கள் தாய் உங்கள் தகப்பனை பார்த்ததில் ஒன்றும் நீங்கள் பிறக்கவில்லையே, ஆதிகால செயல் செய்து தானே நீங்கள் உருவாகியிருப்பீர்கள். உங்கள் தாயாரிடம் இருக்கும் மார்பகமோ, உங்கள் தங்கைகளின் இடுப்போ, உங்கள் அக்காக்களின் தொடையோ, உங்கள் அத்தையின் பிட்டமோ, உங்கள் சித்தியின் உதடோ, உங்களுக்கு உடல் பசியை தூண்டி விட்டிருக்கிறதா, அல்லது உங்கள் உறுப்புகளுக்கு இரத்தவோட்டம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கிறதா, அல்லது நீங்கள் உங்கள் இருட்டுகளின் தனிமையில் மேலே சொன்ன எதையாவது யோசித்துக்கொண்டே சுய இன்பம் அடைந்திருக்கிறீர்களா?...    
 
சரி விடுங்க. விஷயத்திற்கு திரும்ப வருவோம். உங்களில் எத்தனை பேருக்கு Domestic violence definition மற்றும் அதன் வகைகள் தெரியும். உங்களின் அலுவலின் மத்தியில் இதை பற்றி தெரிந்திருந்தால் சந்தோஷம், ஒன்றும் செய்யாது போனாலும், அதாவது தெரிந்திருக்கிறதே என்று. தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். Domestic violence ஏகப்பட்ட கிளைகளின் கீழே இருப்பினும், நடப்பிற்காக 5 முக்கிய வகையாக்கி இருக்கிறார்கள். Physical and sexual abuse, Emotional or Psychological abuse, Verbal abuse, Financial abuse, Neglect இது தான் அவை என்கிறார்கள்.
 
உடலால் அத்துமீறல்... உங்கள் வடிகாலுக்காக... உங்களின் சுயவிருப்பு வெறுப்புகள், கோபங்கள், எரிச்சல்கள், கையாலாகாதத்தனங்கள் ஒட்டுமொத்தமாக வந்து கழித்துவிட்டு போகும் கழிவறைதான் நான். உங்கள் செயலிற்கு நீங்கள் கொடுக்கும் காரணம் என்னவாக இருந்தாலும், என் மேல் ஒரு விரல் கூட என் சம்மதமின்றி வைக்க,உங்களுக்கு உரிமை இல்லை, அது தெரியுமா உங்களுக்கு? பேச்சின் உச்சக்கட்டத்தில் என் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் தீர்ந்து போனாலோ, அல்லது இல்லாது போனாலோ என்னை அடக்க உங்கள் விரல்களுக்கு தோதாக இருக்கும் என் கன்னமும், உங்கள் கைக்குள் சிக்கும் என் தலைமயிரும், முதுகில் விழுந்த இடிகளும், உங்கள் கால்கள் உதைத்ததில் ஒரு ஓரமாக சென்று சுருண்ட என் உடலும், அங்கங்கே கன்னிப்போய் வீங்கியோ, நடக்கமுடியாது நடந்ததோ, உதடு கிழிந்து வாயில் வைக்கும் உணவுப்பொருள் கிளப்பும் எரிச்சலும், நீங்கள் அடிக்கையில் உங்கள் காலை கட்டிக்கொண்டு அழுத என் பிள்ளைகளோ இன்னும் சில நாட்களில் மறக்கக்கூடும். ``குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும், adjust பண்ணிக்கிட்டு போம்மா. பாரு அவன் இன்னும் சாப்பிடாம இருக்கான், போய் சாப்பாடு போடு என்றும், அடிக்கிற பரதேசியின் கைதான் அணைக்கும்`` என்று சொல்வதும் என்னைப் போலவே ஒரு பெண்ணாக இருக்கலாம். கனன்று எரிந்து நீர்த்து அடங்கிப்போகும் என் கோபங்கள், நாளை நீங்கள் வந்து சொல்லும்,`` ஏதோ யோசனைல அடிச்சிட்டேன்`` என்பதில். நீங்கள் மன்னிப்பு என்ற ஏதோ கேட்டுவிட்டதால் மகாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். உங்கள் மனதில் நடந்த இந்த சம்பவத்தின் தழும்புகள் நிற்காது, ஏனென்றால் இதை பற்றி சொன்ன ஒற்றை வார்த்தையில் கால் கழுவியது போல உங்கள் அழுக்குகள் அடித்துக்கொண்டு போய்விட்டது. எனக்கும் நினைவிருக்காது, நாளை வேறு ஒரு காரணத்திற்காக அடித்து வலிக்கும் வரை. நான் தான் அப்போதே சொன்னேனே, எனக்கு இன்னும் பெயர்வைக்கவில்லை என்று.
 
இது ஒருபுறம் இருக்க, உங்களின் உடல் வேட்கைக்கு இரையாகும் என் உடல் அடிக்கடி, எனக்கு பிடித்தோ, பிடிக்காமலோ. எனக்கு உச்சம் வந்ததா வரவில்லையா என்று நீங்கள் எண்ணும் அளவிற்கு இன்னும் எனக்கு படுக்கையில் உரிமை இல்லை. ``பாதிநேரம் எப்போது முடித்து என் மேல் இருந்து எழுவாய், நான் தூங்க!`` என்று தான் தோணும். இதில் உனக்கு நான் எனக்கு பிடித்ததை செய்யச்சொல்லி கேட்டாலோ, நான் இங்கு உடல் வேட்கையால் உந்தப்பட்டவளாக, ஒரு ஒழுக்கம் நிறைந்த குடும்பப்பெண் அல்லாது scarlet woman ஆகி போவேன். எதுவும் சொல்லாமல் இருந்தால் ``இப்ப எல்லாம் இதை செய்றியா, அதை செய்றியான்னு கேட்கிறது இல்லையே! வேற எவனாவது இருக்கானாடி!`` என்று சிரித்துக்கொண்டே என்மேல் இயங்கும் போது, நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாய் நான் என்ன யோசிக்கவேண்டும் என்று நீங்களே சொல்லுங்களேன்.
 
Verbal abuse and Psychological abuse and Emotional abuse... They go hand in hand. ``என்னடி எதிர்த்து எதிர்த்து பேசுற?`` என்றோ `` உங்க குடும்பத்தில எவனக்கும் மானரோஷமே இல்லை. என் தலை எழுத்து இப்படி ஒரு கேடுகெட்ட குடும்பத்தில் பொண்ணெடுத்திருக்கேன்`` என்றோ அடைமொழியாக சேரும் நாய், பேய், சனியன் பிடிச்சதே, போன்றவைகளோ, தவறு என்று ஒரு நாளும் உங்களுக்கு தோன்றியிருக்காது. வீட்டின் நான்கு சுவத்துக்குள் நடக்கிற விஷயத்தை யாரோடும் பேசி குடும்பமானத்தை நடுதெருவிற்கு கொண்டு வரக்கூடாது என்பது உங்கள் புரட்டுகள் வெளியேறாமல் இருக்க நீங்களே சொல்லிக்கொள்ளும் சட்டம். ’’வீட்டை விட்டு போடி மயிரு! எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும். உன்னைய எந்த நாயி சீந்துதுன்னு பார்ப்போம்`` என்று காறிதுப்புவதை வாங்கி கொள்வது தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. தனித்து சமூகத்தில் நிற்பின், இது போலவே மேயும் மிருகங்கள் பலவற்றை தனித்து சந்திக்க எனக்கு தெம்பு இல்லாது போயிருக்கலாம்.
 
Financial abuse... உங்கள் வீட்டு தேவைக்கோ, உங்கள் படிப்பு செலவிற்கோ, உங்கள் வாழ்கை நிலையை உயர்த்திக்கொள்ளவோ, ஈடுக்கட்டவோ, உங்கள் தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடன் அடைக்கவோ, உங்களால் வாங்க இயலாது நிற்கும் கனவான நிலம், வீடு, கார், போன்றவைகளை சட்டென நீங்கள் வரதட்சணையாய் சம்பாதித்ததில் உடைந்து உட்கார்ந்த என் குடும்பம் இன்னும் எழவே இல்லை. அது எப்படி இத்தனை நாள் உங்கள் அப்பா போலவே கஷ்டப்பட்டு, எனக்கு படிப்பிற்கு வழி செய்து, உண்ண உடுத்த உடைக்கொடுத்து, தங்க நிழல் கொடுத்து, இப்போது என்னை திருமணமும் செய்து கொடுத்த வீட்டாருக்கு, மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க கூட உங்களோடு நான் தினம் வழக்காட வேண்டியிருக்கிறது. நான் மாதம் பூராவும் சம்பாத்தித்த காசு எப்படி செலவழிக்கவேண்டும் என்று நீங்கள் போட்டு கொடுக்கும் மாதாந்திர பட்ஜெட்டில், எனக்கு தேவையானவற்றை உங்களிடம் ஒருமுறைக்கு 10 முறை சொன்னால் தான், ``சே.. போய் தொலை... அடுத்த மாசம் இப்படி எல்லாம் என்னை கேட்காம செலவு வைக்காதே!`` என்று சொல்லும் உங்களை நான் தினம் தினம் சகித்து, மேலும் உங்கள் வீட்டாரின் மீதும் பாசம் பரிவு பொழிந்து, என் தாய் தந்தையரை புறக்கணித்து, என்னுடைய சுயத்தை சுட்டுக்கொண்டே என் நாட்களை போக்கவேண்டும். உங்களை போலவே வேலைக்கு சென்று வரினும், என் அன்றாடைய அல்லல்களை விட என் சம்பளக்கவர் முழுக்க வாங்குவதில் நீங்கள் காட்டும் அக்கறைதான் அதிகம். உங்களின் வேலை நேரம் போலவே இருப்பினும், வீட்டிற்கு வந்ததும் அடுக்களையில் என் வேலை தொடங்கும். உங்கள் சாயந்திரங்கள் சுலபமானது. ``அப்படி என்னதான் புடுங்கினியோ எப்ப பாரு அசதியா இருக்குன்னு அலுத்துக்கறே`` என்று சலித்துக்கொள்ளும் உங்களை நான் பொறுத்துக்கொள்வேன். என் முதுகெலும்பில் பாதி ஒடித்து உங்களுக்கும், மீதியை இந்த சமூகத்திற்கும் கொடுத்துவிட்ட கர்ணபரம்பரை நான்.
 
இப்போது புதிதாக கேட்க தொடங்கி இருக்கும் வார்த்தை ALPHA FEMALE... குடும்ப தலைவன் Alpha male என்ற நிலை மாறிப்போய் கொண்டே இருக்கிறது. இதுவரை மேலே சொன்ன எல்லாமே ஏதோ படிக்காத அப்பிராணிகளுக்கு மட்டும் நடப்பதாய் கொள்ளவேண்டாம். படித்த வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களை பற்றி தான் சொல்கிறேன். இதில் தொழிற்கல்வி படித்தவர்களும் உண்டு, மருத்துவம், எஞ்சினியரிங் படித்த பெண்களும் இது போன்ற வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னப் படுவதாய் கேள்வி. பெண் தலையெடுத்து வேலைக்கு சென்று சம்பாதிக்க எல்லா பொறுப்புகளையும் அவள் தலையில் கட்டிவிட்டு, ஹாயாக சுற்றி வரும் ஆண்கள் பெருகி வருவதாய் சொல்கிறார்கள். அது புதிதாய் மாறிவரும் கலாச்சாரத்தின் படிக்கட்டாய் இருக்கிறதாம். இதில் என்ன கொடுமைகள் நிகழுமோ.
 
இப்படி ஒரு ஆசையோ பாசமோ இல்லாத தாம்பத்தியத்தில் சிக்கி, இப்படி்யே உழன்று எங்கேயாவது கொஞ்சம் பாசம் கிடைக்காதா என்று vulnerable state of mind உடன் இருக்கும் நான் தான் நீங்கள் தெருவிலும், பஸ்ஸிலும், ஆட்டோவிலும், கடையிலும், பார்க்கும் அரூபமான 85%. நான் என் வீட்டிலேயும் சிக்கி, வேலையிலேயும் கஷ்டப்பட்டு, புருஷனால் exploit செய்யப்பட்டு, ignore செய்யப்பட்டு, மிதியடி ஆகிப்போகிறேன். உடல் தேவைகள், companionship, அன்பு, இப்படி கடையில் கிடைக்காதவைகளுக்காக ஏங்கியவள் நான். என் கணவன் என்னை தொட்டு பல மாதங்கள் ஆனது என்றும் நான் புலம்பலாம். இல்லை என்னை தினம் தொடுகிறான் மூர்க்கமாய் என்றும் சொல்லலாம்.
ஒரு balance இல்லாத வாழ்க்கையில் திரியும் என்னை வெகு சுலபமாய் சில பாசவார்த்தைகள் கொண்டு மயக்கமுடியும். கணவனிடம் கிடைக்காத ஆசையும், அங்கீகாரமும், கொடுக்கும் கணவன் அல்லாத உங்களுக்கு என் உடலையும் தருவேனாயிருக்கும். என் நம்பிக்கையையும் உடலையும் சேர்த்து, நீங்கள் எனக்கு தெரிந்தோ தெரியாமல் ஒளித்து எடுக்கும் படங்களும், வீடியோக்களும் உங்களுக்கும் உங்களை போலவே உள்ளவர்களுக்கும் வெகு கிறக்கமான விஷயங்கள். அப்படி உங்கள் படங்களில் மனதில்  ஒட்டியது முதல் பெருத்த மார்பகங்கள், குடுவை முதல் மடிப்பு விழும் இடுப்புகள், அழகான கனத்த பிட்டம், வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு சிரிப்புகள் ஆகியவற்றை தாங்கிவரும் நான் நிஜத்தில் வெகுவாய் மனம் நொந்து நொடிந்து போன ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு மகள், ஒரு குடும்பதலைவி.
 
ஆக மொத்தம் உங்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் என்னால் ஏதோ ஒரு ஆதாயம் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய பாதுகாப்பு, தேவைகள், விருப்பங்கள், பிடிக்காதவைகள் அனைத்தும் என்னோடேயே அடங்கி போகும். அதை பற்றி யோசிக்கவோ பேசவோ செயல்படவோ உங்களுக்கு நேரம் இல்லை தான். ஒரு கட்டத்திற்கு மேல் உங்கள் வன்மத்தை நியாயம் என்று சொல்லி எனக்குள் நானே அடங்குவேன். மனைவி என்றால் என் உரிமைகளை, என் சொந்தங்களை, என் நட்புக்களை மறக்கவேண்டும். ஆமாம் என்னை அடிப்பது நியாயம், என் பணத்தை பிடுங்குவது நியாயம், என்னை வார்த்தையால் அவமானப்படுத்தி குத்துவது நியாயம், என் உடல் தேவைகளை நிராகரிப்பது நியாயம் இப்படி அடுக்கிக்கொண்டே போகிறேன் என் கல்லறைவரை.

இதுவரை மேற்கூறிய எல்லாமும் உங்களால் வெகு சுலபமாய் ஒதுக்கித்தள்ளப்படலாம். ஏனென்றால் நீங்கள் சொல்லும் பதில், எங்க வீட்டு பொண்ணுங்க இந்த மாதிரி இல்லை. எங்க வீட்டுல நாங்க இது மாதிரி எல்லாம் வளரல. நாங்க நல்ல குடும்பம். இது தானே உங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. நம் வீடு சுத்தமாக இருப்பின் போதும், பக்கத்து வீட்டு சுவற்றில் எவன் சிறுநீர் கழித்தால் நமக்கென்ன.
 
இந்த அழகிய உலகில், வாழ்க்கையை நீங்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் பார்த்து ரசித்து, அலசி ஆராய்ந்து அனுபவியுங்கள். நான் அதற்கு தடையாக நின்றதே இல்லை. நான் உங்கள் எதிரி அல்ல. உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் எத்தனை அழகாக ஏற்கிறீர்களோ அத்தனைக்கு சுலபமாய் என்னை உங்களாலும் உங்களை போன்ற மற்றவர்கள் செதுக்கும் எல்லைக்குள், எந்த ஒரு குறுகுறுப்பும் இன்றி உங்களால் எதிர்பார்க்கப்படுவது போல வாழவேண்டும் என்று சொல்கிறீர்கள், அதை தான் ஏற்க முடியவில்லை. சுயம் தொலைக்கும் எங்களுக்கு வாழ்க்கை தினம் சமையலில் இடும் உப்பு புளி மிளகாய் தான்.
 
எப்படி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் என் சுதந்திரத்தை முழுக்க எடுத்துக்கொண்டு, உங்களால் கட்டப்பட்ட எல்லைக்குள், சுற்றி வரும் தூரம் மட்டும் நடக்க தோதாய் கழுத்தில் கயிறும் கட்டி, ``என் மனைவிக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு`` என்று வாய் கூசாது சொல்கிறீர். உங்களின் ``எல்லாவிதத்திற்கு`` எது எல்லை கோடு.
 
நான் உங்களிடம் இவற்றை எல்லாம் பற்றி சொல்லியது, தனித்து இயங்க இல்லை. என் உலகம் இயல்பாய் நடக்க நீங்கள் வேண்டும். பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று. எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும்.
 
யமுனா ராகவன்

இவர் எழுதும் தொடர்கதை “அற்றவைகளால் நிரம்பியவள்” காட்சியில் பிரசுரமாகி வருகிறது. அதனைக் காண இங்கு சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்  

86 கருத்துகள்:

துரோகி said...

பதில் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை!

யாழிபாபா said...

100 % unmai padithaudan alukaithan vanthathu
mikka nandri pathivukku
mikavum arumai

Hyder said...

really good to read. it gives some message to all men. those who read this article, it will change their attidude while dealing with women. thank you very much.

ரெட்டைவால் ' ஸ் said...

யமுனா மேடம்!
மனசாட்சியை உறுத்த வைக்கிறீர்கள்!
மிகவும் நியாயமான கோபங்கள் மற்றும் Brilliant Presentation

Veliyoorkaran said...

Fantastic...!

செ.பொ. கோபிநாத் said...

சமூகத்தின் மீதான உங்கள் உண்மையான கோபம் வரவேற்கத்தக்கது. சரியான சாட்டையடி. இவ்வாறான எழுத்துக்களும், கோபங்களும் வெளியே வரவேண்டும். அப்போதுதான் வெறும் எழுத்தாகவும், மேடைப் பேச்சுக்களில் கரகோஷங்களுக்கான கருப்பொருளாகவும் இருக்கும்ஆண், பெண் சமத்துவம் என்பது நடைமுறையாகும். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிந்திக்க வைத்துவிட்டது உங்களின் பதிவு . மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன் !

parava said...

As a 'Respected male' nothing to say, only realise.
thank u yamuna for ur straight and bold and optimistic criticism.

suriyan said...

manasatchiyai uruththa vaithu vitteerkal

சீனு said...

நானும் சில நேரங்களில் கோபப்பட்டு என் மனைவியை திட்டியிருக்கேன். ஆனால், அந்த நேரத்தில், கோபத்தில் திட்டிய வார்த்தைகளாக தான் இருக்கும். அதே போன்று கோபத்தில் என் மனைவியும் திட்டியிருக்கிறாள். அதற்காக, கோபம் அடங்கியதும், அதை மறந்துவிடுகிறோம். இதுவும் ஒரு விதமான வடிகால் தானே?

muba said...

உங்களுடைய ஒவ்வொரு வரியுளும் ஒரு ஆணாக பெண்களுக்கு எதிராக எப்படி நடந்தோம் என்று அசைபோட்டேன், உங்கள் கூற்று சரியாக இருந்த இடத்தில என்னை திருத்தி கொண்டேன்
நன்றி

Sabarinathan Arthanari said...

மிக நியாயமான கேள்விகள்

ஓரளவிற்கு அறிவுள்ள ஆண்களின் போக்கில் கூட மாற்றி கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதை ஞாபக படுத்தும் பதிவு.

உரிமை குரல்கள் வீண் போவதில்லை.

sasikumar said...

மிக மிக அருமையான பதிவு. உண்மைகள் கசக்க தான் செய்யும். ஒரு சில விஷயங்கள் ஏற்று கொள்ள கூடியவையாக எனக்கு இல்லை என்றாலும் பளார் என்று அறைந்தது போன்று இருந்தது ..

வாழ்த்துக்கள் மீண்டும்

தமிழன் வேணு said...

அடிமனத்தின் வக்கிரத்தை இறக்கி வைக்கிற ஒரு கீழ்த்தரமான முயற்சி! இதற்கு சரியான பதிலடியாக ஒரு ஆண் பதிவு போட்டால், "உனக்கெல்லாம் அக்கா,தங்கையில்லையா?" என்று கேள்வி கேட்டு மூக்கைச் சிந்துவீர்கள்! தொடரட்டும் இது போன்ற புலம்பல்கள்!

பருப்பு The Great said...

அனல் தெறிக்கும் எழுத்து...பாதிக்குமேல என்னால படிக்க முடியல..ஒரு வேல குற்ற உணர்ச்சியா கூட இருக்கலாம்..
இதே டாபிக் பத்தித்தான் ரெண்டு நாலா எழுதி என் draft ல போட்டு வச்சிருக்கேன்..இதப் படிக்கும் பொது என் எழுத்து தூசு..காரணம், நீங்க அனுபவச்சவங்க...

பதில் சொல்ல தெரியல உங்க கேள்விக்கு....

சீனு said...

//ஆக மொத்தம் உங்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் என்னால் ஏதோ ஒரு ஆதாயம் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய பாதுகாப்பு, தேவைகள், விருப்பங்கள், பிடிக்காதவைகள் அனைத்தும் என்னோடேயே அடங்கி போகும்.//

சரிங்க. அப்படிப்பட்ட ஆண் துணை இல்லாமலேயே வாழ்ந்திடுங்களேன். உங்களால் முடியவில்லை என்றாலும், அட்லீஸ்ட் உங்க குழந்தைக்காவது சொல்லிக் கொடுப்பீர்கள் தானே? இல்லை, சகிச்சிகிட்டு வாழ்ந்திடுனு கத்து கொடுபீங்களா?

இதே போல் தான் எனக்கு தெரிந்த ஒருவரும் புலம்புவார். (அவர் சொல்வது சரியா தவறா என்பது இங்கு தேவையில்லை) ஆனால், அவரால் அதை மீறி வரவும் முடியவில்லையாம். என்ன வாழ்க்கைங்க இது?

Siva said...

எந்த மயிலும் தானாக இறகு தருவதில்லை.பூனைக்கு மணியை யார் கட்டுவது என்று யோசித்து கொண்டிருக்க வேண்டாம்.பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்று யோசிப்பதே மிகப்பெரிய விசயம்.வலை நமக்கு கிடைத்த ஒரு வரம்.இதனையே நீங்கள் ஏன் ஆயுதமாக பயன் படுத்த கூடாது

Karthik said...

thayanginean pathiyil...
vizhithean thookathil...

en nandrigal...

Sangkavi said...

யமுனா மேடம்....

என்ன சொல்லது என்றே தெரியவில்லை....

அழகா எழுதியிருக்கீங்க.....

முத்துவேல் said...

On Marriage
Kahlil Gibran
You were born together, and together you shall be forevermore.
You shall be together when the white wings of death scatter your days.
Ay, you shall be together even in the silent memory of God.
But let there be spaces in your togetherness,
And let the winds of the heavens dance between you.


Love one another, but make not a bond of love:
Let it rather be a moving sea between the shores of your souls.
Fill each other's cup but drink not from one cup.
Give one another of your bread but eat not from the same loaf
Sing and dance together and be joyous, but let each one of you be alone,
Even as the strings of a lute are alone though they quiver with the same music.


Give your hearts, but not into each other's keeping.
For only the hand of Life can contain your hearts.
And stand together yet not too near together:
For the pillars of the temple stand apart,
And the oak tree and the cypress grow not in each other's shadow.

இதற்கு மேல என்ன வேனும்.

தமிழாக்கம் பண்ணி என் ப்ளோக்ல போட ஆசை
விரைவில்
http://muthuvel-sivaprakasam.blogspot.com/

Venkatesh said...

மிக மிக நியாயமான கேள்விகள். நல்ல பதிவு.

அஷீதா said...

அருமை.
மனம் கனக்கிறது படித்து முடித்ததும்.

கரிகாலன் said...

மிக உண்மையான பதிவு, வார்த்தைகள்தான் சற்றுக் கடுமை...

இப்போது நான் ஆணாகப் பிறந்ததற்காக வெட்கப்படுகின்றேன்.... அதேசமயம் பெண்ணாகப் பிரக்காமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.... இந்த உண்மைக்கதையில் வரும் ஆண்களைப்போல வாழக்கூடாது என சபதம் எடுத்துக்கொள்கிறேன்....

மிக்க நன்றி... என்னைக் காப்பாற்றியமைக்கு

ராஜா said...

sorry nga ena sollane theriyala....
nee sollra alavuku mosamanavanga ilanga... ellathuku answer un question laye irukunga ...

ena pathil solla....

sorrynga....

சேட்டைக்காரன் said...

//உங்கள் தாயாரிடம் இருக்கும் மார்பகமோ, உங்கள் தங்கைகளின் இடுப்போ, உங்கள் அக்காக்களின் தொடையோ, உங்கள் அத்தையின் பிட்டமோ, உங்கள் சித்தியின் உதடோ, உங்களுக்கு உடல் பசியை தூண்டி விட்டிருக்கிறதா, அல்லது உங்கள் உறுப்புகளுக்கு இரத்தவோட்டம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கிறதா, அல்லது நீங்கள் உங்கள் இருட்டுகளின் தனிமையில் மேலே சொன்ன எதையாவது யோசித்துக்கொண்டே சுய இன்பம் அடைந்திருக்கிறீர்களா?... //

மதிப்புக்குரிய பெண்ணே! இந்த பத்தியை உங்கள் அப்பா,அண்ணன்,தம்பி,காதலன்/கணவனிடம் காட்டி கருத்து கேட்டு விட்டு, பிறகு மற்ற ஆண்களைக் குற்றம் சொல்லுங்கள்.

Murli said...

சுதந்திரம்....

சுதந்திரம் என்பது....ஒருவர் கொடுப்பதல்ல...கொடுத்தால்/ஏற்றால் அது சுதந்திரமல்ல...

மற்றவரிடம்(ஆண்களிடம்)உன்/உங்கள் சுதந்திரத்தை எதிர்பார்ப்பது அல்லது கேட்பது...??

உன்னுடையதை உனக்கானதை ஏன் மற்றவரிடம் கையெந்துகிறாய்...

உன் சுதந்திரத்தை நீ தானாக மறந்துவிட்டாய்..
அதை இழக்க இடம் கொடுத்தாய்..

அது உன்னுடயது அது இன்னமும் உன்னுள்ளேதான் இருக்கிறது...

சமுகம் மறந்து அதைவெளிக்கொண்டுவா...

உன்னை உணர்த்து...

siva said...

முரளி நன்றாகச் சொன்னீர்,
முதல்ல சுதந்திரம் எதுக்குங்க ?
சுதந்திரம் என்கிற அந்த வார்த்தைய விட்டு முதல்ல சுதந்திரம் பெறுவோம், எவனும் எவனுக்கும் எவளுக்கும் சுதந்திரம் கொடுக்க இயலாது, எல்லாத்தையும் நம்பலே நம்ம தல மேல போட்டுட்டு உட்காந்துக்குறோம் ....

எப்ப கேவலமான இந்த மனித இனம் வாழும் உலகத்துல வாழனும்னு முடிவு பண்ணியாச்சோ அப்பவே, விளையாட்ட விளையாட கத்துக்கணும் நம்ப எல்லோரும், இல்ல செத்துடனும், அதுக்கு நமக்கு வலிமையோ, கோழைத்தனமோ, முட்டாள்தனமோ, புத்திசாலித்தனமோ கிடையாது...

ரோகிணிசிவா said...

hats off mam , superb !
உண்மையில் அடித்தளத்தில் இருக்கும் பெண்கள் தைரியசாலிகள்,சட்டைய பிடித்து கேட்பார்கள் ,படித்து வேலையில் இருக்கும் பெண்கள் தான் பாவம் decency
கருதி கத்தவும் முடியாது.உங்க எழுத்துகள் பல பெண்ணின்களின் எண்ணத்தின் அழகிய வடிவம் ,நன்றி எங்கள் எண்ணங்களை பிரசவித்ததற்கு.எனக்கு இது ஒரு ஆங்கில சொலவாடை நியாபகம் வருகிறது "HE WHO IS THE GENTLE MAN WHO DOES NOT INFLICT PAIN",I DONT THINK MANY WILL COME UNDER THE DESCRIPTION GENTLE MAN , IF HONTESTLY RATED , LET IT BE OUR DAD, BROTHER, LOVER,HUSBAND , MAY BE VERY RARE HANDPICKED HERE AND THERE

ரோகிணிசிவா said...

@சீனு said...
//ஆக மொத்தம் உங்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் என்னால் ஏதோ ஒரு ஆதாயம் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய பாதுகாப்பு, தேவைகள், விருப்பங்கள், பிடிக்காதவைகள் அனைத்தும் என்னோடேயே அடங்கி போகும்.//

சரிங்க. அப்படிப்பட்ட ஆண் துணை இல்லாமலேயே வாழ்ந்திடுங்களேன். உங்களால் முடியவில்லை என்றாலும், அட்லீஸ்ட் உங்க குழந்தைக்காவது சொல்லிக் கொடுப்பீர்கள் தானே? இல்லை, சகிச்சிகிட்டு வாழ்ந்திடுனு கத்து கொடுபீங்களா?

இதே போல் தான் எனக்கு தெரிந்த ஒருவரும் புலம்புவார். (அவர் சொல்வது சரியா தவறா என்பது இங்கு தேவையில்லை) ஆனால், அவரால் அதை மீறி வரவும் முடியவில்லையாம். என்ன வாழ்க்கைங்க இது?

dear mr.seenu ,
mam has already answered u ,
even before u ask,

//தனித்து சமூகத்தில் நிற்பின், இது போலவே மேயும் மிருகங்கள் பலவற்றை தனித்து சந்திக்க எனக்கு தெம்பு இல்லாது போயிருக்கலாம். //

we are tolerating things because being exploited by one is better than te whole gang,u people are real cuprits ,only when she belongs to some one, u might spare her.
when she renounces that inhuman and stay single, all ur ego gets beaten so u people form a gang or union to hurt her even more,atleast verbally if u cant hurt her physically

சீனு said...

//தனித்து சமூகத்தில் நிற்பின், இது போலவே மேயும் மிருகங்கள் பலவற்றை தனித்து சந்திக்க எனக்கு தெம்பு இல்லாது போயிருக்கலாம்.//

ஓ! ஆண்கள் இதுக்கு தானா?

இன்னும் நிறைய கேள்விகள் கேட்கனும் தான்...என்ன பன்றது? ஆணா பொறந்துட்டேனே!!!

karthi said...

US Govt did lot of attrition to the world, the created nations to threaten few, few to test their weapons, few for the Tactical/Strategical exercises....they gave the world, the Nuclear weap.....!!! So..???

with strong flow of words, anyone can hypnotise the readers...!! After reading the letter somebody was shy saying that he is a MAN...Oh my God...!! where are we heading ..!! Nobody had the guts to say, "OK, America has 'done' all these mistakes, lets ensure that these are not repeated..!!"

How many of the readers have expressed desire to take up vow not to indulge/support/overlook domestic violence atleast(least possible in, one's own scale), on both the way...?? I think our thoughts have to be channelised in a better way....Pathetic....!!!

Nanum enn Kadavulum... said...

" மதிப்பிற்குரிய ஆண்களே இதை படிப்பீர்களாக" என்று அழைத்ததற்கு பதிலாக
மதிப்பிற்குரிய பெண்களை அழைத்திருக்கலாம்.
இன்னும் ஆழமாக யோசியுங்கள் யமுனா. ஆணின் பலம் அவன் உடலும் அதை சார்ந்தும் இருக்கிறது.
உடல் பலம் ஒன்று மட்டுமா வாழ்வை தீர்மானிக்கிறது?
பெண் தன் பலம் அறியாது, தன்னை ஒடுக்கிக்கொண்டு இருக்கிறாள். ஆணுக்குள் ஒடுங்குவதை சுகமாய் காண பழகி இருக்கிறாள். இதுதான் தன் பலவீனம் என்று காலம் காலமாய் உலகுக்கு அறைகூவி தன்னை
காட்டிகொடுத்தும் இருக்கிறாள்.
நம் சிறகுகளை நாமே ஒளித்துக்கொண்டு, என் சிறகை பிடுங்காதே என எத்தனை கதறினாலும் என்ன லாபம்?
சிந்திக்க விரும்பாமல், சமூகத்தின் கோட்பாடுகளையே வாழ்வின் இறுதி உண்மைகளாக கருதிக்கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொள்கிற பெண் சமூகம்தான் என் கண்ணில் படுகிறது. அத்தகைய கோட்பாடுகளை உடைத்தெறிந்து தன்னை தானறிய இழப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். கோட்பாடுகளை உடைக்க விரும்பிய ஆண்களும் சரி, பெண்களும் சரி ......எதையேனும் இழந்துதான் விரும்பியதை அடைந்திருக்கிறார்கள். நீங்கள் சொல்கிற வகையில் அடங்குகிற பெண்களின் தாகம், உண்மையான சுதந்திரம் இல்லை. அதில் வேகம் இருந்திருப்பின் அதை எப்படியாகிலும் அவர்கள் அடைந்திருப்பார்கள். சில வசதிகளை இழக்க விரும்பாத தன்மையும், போராடி அடைகிற இலக்கின் சுவை அறியா தன்மையுமே அவர்களை அவர்களாக இருக்க வைத்திருக்கிறது.

இந்த நல்லுலகில் ஆணும் பெண்ணும் ஒன்றே. எண்ணங்களும், செயல்களும் ஒன்றை நோக்கியே.
பெண்ணுக்கு சிந்திக்க ஆணைவிடவும் முக்கியமான விஷயங்கள் உண்டு என்பதை அறிய வேண்டும்.
பெண் ஆணை மட்டுமே உலகமாகவும் அதன் அதிகாரியாகவும் பார்ப்பதால் வருகிற/வந்த விளைவுகளே இவை.

தன்னை அறியாப் பெண்மை, ஆணை குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை.
நிகழ்கால பெண்ணின் எண்ணங்களின் துன்பங்களில், கடந்து போன காலத்தில் வாழ்ந்த மனிதர்க்கு பங்கு உண்டு. கடந்த காலம் துடைத்தெறிந்து.....நம்மை பெண்ணாக அடையாளப்படுத்துவதைவிடவும், ஆன்மாவாக அடையாளப்படுத்துங்கள். நம் கண்ணிலும் கருத்திலும் ஆண் என்கிற பிம்பம் வேருருவம் கொள்ளும்.
(உருவால் நானும் பெண்ணே)

Vettipullai said...

A well deserved discussion...

@ தமிழன் வேணு: //அடிமனத்தின் வக்கிரத்தை இறக்கி வைக்கிற ஒரு கீழ்த்தரமான முயற்சி! //

என்ன சொல்லவருகிறீர்கள்..பெண்கள் யாவரும் இப்போது இருக்கும் சூழலில் over react செய்கிறார்கள் என்றா... இல்லை இப்படி எதுவுமே நிகழவில்லை என்றா..என்ன உங்கள் தரப்பு வாதம்?

எது வக்கிரமாக உங்கள் கண்களுக்கு தெரிகிறது.

மதார் said...

சில நேரங்களில் சில உண்மைகள் தாங்க முடியாதுதான் . எல்லா பொண்ணுங்களும் உள்ளுக்குள்ளே சகிச்சுகிட்டு இருக்குறத எல்லாம் எழுத ஆரம்பிச்சா உங்களால படிச்சு முடியாது .

Vettipullai said...

@ Karthi: I'm yet to get the grip of what you are tring to impliment here. I do understand that Domestic violence can victimize both men and women. But the percentage who is affected more is without a doubt, women.

I'm assuming if this letter reaches women, even before it could reach the men, it would be brilliant. Coz in most circumstances, its the women who doesnt know their rights and succumb to the pressure of maintaining a so called '' nalla peru'' for the family and men just are content with the way things are....

ஜாக்கி சேகர் said...

உங்கள் கருத்தோடு சில விஷயங்களில் மட்டுமே உடன்பாடு இல்லை.. ஆனால் எழுதிய அந்த வார்த்தைகள் எலலா ஆண்களும் படிக்கவேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பதே உண்மை...

எல்லா விஷயங்களை மிக அழகாக வரிசை படுத்தி இருத்தீர்கள்..

பெண்களுக்கு பெண்ணே எதிரி என்று வழமையான வாக்கியங்களில் ஜல்லியடிக்கவிரும்பவில்லை ஆனால் கீழே அந்த பெண் சொன்ன வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை




தன்னை அறியாப் பெண்மை, ஆணை குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை.
நிகழ்கால பெண்ணின் எண்ணங்களின் துன்பங்களில், கடந்து போன காலத்தில் வாழ்ந்த மனிதர்க்கு பங்கு உண்டு. கடந்த காலம் துடைத்தெறிந்து.....நம்மை பெண்ணாக அடையாளப்படுத்துவதைவிடவும், ஆன்மாவாக அடையாளப்படுத்துங்கள். நம் கண்ணிலும் கருத்திலும் ஆண் என்கிற பிம்பம் வேருருவம் கொள்ளும்.
(உருவால் நானும் பெண்ணே)

நன்றி...யமுனாராகவன்

உங்கள் சமுக பார்வை அலசலுக்கும் சுவாரஸ்ய எழுத்துக்கும்

அன்புடன்
ஜாக்கிசேகர்..

ஜாக்கி சேகர் said...

ஒரு வேண்டுகோள்... படைப்பை வைத்து விட்டீர்கள்...நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்வது உங்கள் கடமை...

தருமி said...

முதல் நாலைந்து பத்தி படித்ததும் எழுதியது யாரென்று தெரிந்து கொள்ள ஆவல் .. கடைசிப் பகுதி வந்தும் இன்னும் தெரியவில்லை.

நல்ல எழுத்து. ஈர்த்துப் பிடித்துப் படிக்க வைக்கும் எழுத்துக்கு வாழ்த்துக்கள்.

மீதியையும் வாசித்து விட்டு ....

சீனு said...

ஜாக்கி சேகர்,

//தன்னை அறியாப் பெண்மை, ஆணை குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை.//

அப்ப இந்த பதிவே தேவையில்லை தானே?

Abiramii Fashions said...

Hi writter,
Problem is you met or viewed only wrong mens or your view all mens wrongly.
Check once again your words and reply did you met any good men in your life?
Can you tell me did you met good men in your life.If you say NO then problem is your view above mens.I am surely telling you because on same charector i know ladies also living in our country .
Can you tell in all families problem start only from ladies .Ladies always play double games very safely including you .Can you think and give honestly refuse to me
Only now mens have 33% freedom from ladies like you ladies always cry and don't lock us below 33%.This is not a joke i am also a family man and i viewed many families.

Please try to view others how they living .don't see u and write like this ALUVACHU KAVIYAM
Can you tell me Mr.Ragavan also as per your words !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
I don't know Ragavan is yr father or husband

கண்ணகி said...

ஏதோ ஒருவிதத்தில் இந்தக்கேள்விகளில் சிலவற்றை ஒவ்வொரு பெண்ணும் கடக்கத்தான் செய்கிறாள்..

karthi said...

@vettipullai: you already have grip of the idea i am trying to express..!! yeah agreed that women are affected more..!!

but when are going to stop dwelling upon History beyond in a wrong way....??? history of we were better, we were equal and all those crap...??? OK agreed, Things Happen (or Happened)...but is it possible for MAN to commit all those attrition all alone...is he singly responsible..?? In earlier times, how did the MAN element got the first spark of dominating the WOMAN entity of the society ..???

Now it is time to resolve to stop all the bullshits....for both MAN and WOMAN..!! Man, to resolve not to commit and allow and for Woman, to be up above to refuse such opportunity and fight against first and every instance possible..!! Are we ready ..??

பிரேமா மகள் said...

நிதர்சனத்தை எழுதி இருக்கீறீக்ர்கள்.

அதே சமயம் உங்கள் எழுத்தில் சில சதவீதங்கள்.. உண்மையில்லை..

thinkpositive said...

why should a girl marry who beats her? who is a drunker? I am sure now a days girls are having more freedom.. and that is why there are more divorce.. they dont want to be free..

Is there any girl willing to marry handsome, financially stable, confident person who is caring physically challenged person? he cant beat.. he will not shout..

you girls want to be friendly with a very good guy.. but marry worst guys.. !

malar said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சிந்திக்க வைத்துவிட்டது உங்களின் பதிவு /////

எதை சிந்திக்க வைத்துவிட்டது..?
மூக்கையா...!

ஏன் சங்கர் ஒரே மாதிரி கமெண்ட்ட எங்க பார்த்தாலும் போடறீங்க..உங்களுக்கே அசிங்கமா இல்ல...??

malar said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சிந்திக்க வைத்துவிட்டது உங்களின் பதிவு /////
போர் அடிக்குது சங்கர்...எல்லா பதிவுலயும் உங்களோட ஒரே மாதிரியான கமெண்ட்ஸ்...
மாத்துங்க..
இல்லாட்டி போடாதீங்க...!

கல்வெட்டு said...

யமுனா எழுதியவற்றை இதற்குள் சுருக்கலாம்.

1.பாலியல் வறட்சி
------------------

நமது சமுதாயம் பாலியல் வறட்சியால் பீடிக்கப்பட்ட ஒன்று.

பதிவிலேயே இன்னும் நடிகையின் பிதிங்கிய மார்பையோ அல்லது பின் புறத்தையே தேடி எடுத்து படமாக போடுபவர்கள் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் முன்னாள் லக்கி.

அடுத்த பெண்ணுடலை இரசிப்பது தவறு இல்லை என்ற மனோபாவம் .

தினத்தந்தியில் கவர்ச்சிபடம் என்று ஒன்று வரும். இன்னும் வருகிறதாதெரியவில்லை. வாரப்பத்திரிக்கை தொடங்கி எல்லாவற்றிலும் அட்டைப்படம் பெண்தான். உடல் சார்ந்த கவர்ச்சியை வைத்து வியபாரம். யமுனா சொல்லும் அதே நடுத்தரப் பெண்கள் இந்த குப்பைகளின் வாசகர்கள்.

2.பாலியல் கல்வி
-------------
‍‍ஆண் பெண் உடல்களை மற்றும் உணர்வுகளை இருபாலரும் புரிந்து கொள்ளும் வெளிப்படையான பாலியல் கல்வி சமுதாயத்தில் இல்லை. இருபாலருக்கும் இயற்கையான பாலியல் தேவைகள் கட்டுப்படுத்தப்படும் போது எல்லாக் கொடுமையும் நடக்கும்.

3.எதிர் பாலரை புரிந்து கொள்ளுதல்
-----------------------------

ஆண் உடல் மற்றும் மூளையில் தோன்றும் சிந்தனைகளுக்கும் , பெண் உடல் மற்றும் மூளையில் தோன்றும் சிந்தனைகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது இயற்கைதான் என்றாலும், சரியான புரிதல் இருந்தால் சுலபமாகக் கடந்து போக முடியும்.

4.சபிக்கப்பட்ட சமுதாயம்.
-----------------------
எல்லாவற்றையும் தாண்டி இந்தியா சபிக்கப்பட்ட நாடு. ஒன்றும் செய்ய இயலாது. கடவுளில் ஆரம்பித்து கடைக்கோடி மனித வரை தாகாத உறவுகளை கொண்டாடும் கேவலமான கூட்டம். முருகனுக்கு வப்பாட்டி, இந்திரனின் கேவலமான காரியங்கள், மனைவியைச் சந்தேகப்படும் இராமன்.. என்று பல .

5.சுய ஒழுக்கம் அற்றவர்கள்.
-------------------------
குப்பையைப் போடுவதில் ஆரம்பித்து குண்டியைக் கழுவுவதுவரை யாராவது சட்டம் போட்டால் மட்டுமே செய்ய முனைபவர்கள்.

6.சுரணை அற்றவர்கள்.
------------------
எதற்கும் கொதித்தெழாத ஒருவகைச் நோய்ச்சமூகம்.


***
டாக்டர் ஷாலினி ஆண் பெண் உடல் கவர்ச்சி மற்றும் மூளையில் ஏற்படும் இராசாயன மாற்றங்கள் பற்றிச் சொன்னால் நல்லது

.

yasar said...

துரோகி sonnathuthan ennoda pathilum..but u give some solution for this also..we accept..

valentino said...

mathiprikuriya thozhi ungaludaiya indha padaipu ennaku miga nerukkamaana ondraaga irukiradhu,
neengal inga padhithirukum domestic violence thevaiyaana ondraaga nichayam irukiradhu anaivarum therindhukolla vendiya ondru
oru aanaana ennaku samibagaalamaaga nergindara domestic violence miga thaangamudiyaadha ondraaga irukum bodhu oru pennaaga ninaithu paarkum podhu adhu innum kodumaiyaaga thaan unarugiraen thozhi neengal mathipirkuriyaa angaluku ezhudhiyadhu pola mathipirkuriya pengalukkum thayavu seithu ondru ezhuthungal... nandri ungal nanban...

கெக்கே பிக்குணி said...

ஒரு பெண்ணாய் இதைப் படித்தவுடன் நான் சொல்ல விரும்புவது இது தான்:

1. நீங்கள் சொல்லுகிற இந்த சந்தர்ப்பங்களில் ஓரிரண்டை நான் கடந்திருக்கிறேன்; இந்த சந்தர்ப்பங்களைக் கடந்த பல பெண்களையும் தெரியும். ஆனால், அப்படித் தெரிந்த எல்லா பெண்களும் நீங்கள் சொன்ன எல்லா சந்தர்ப்பங்களையும் கடக்கவில்லை. நீங்கள் எல்லாவற்றையும் கல‌ந்து அடிக்கிறீர்கள்.

2. உணர்ச்சி மட்டுமல்லாமல், Factsம், கலந்து கட்டி தான்: வேத காலம் / அப்புறம் ஆரியர்கள் வந்தார்கள்.... சரியாயில்லையே?!

3. ஏழ்மை, ஈவ் டீசிங் என்று பலவும் கடந்து வந்த பெண்களில் நானும் ஒருத்தி. என் சிறுவயது துன்பங்களில் குளிர்காய நான் இங்கே வரவில்லை. பெண்ணுக்கு, அறிவும் பொறுமையும் என்ற ஆயுதங்கள், காந்தி சொன்ன பல்லையும் நகத்தையும் விட வலிமையானவை. என் சொந்த வாழ்க்கையில் உணர்ந்தது. நான் சொல்லும் பொறுமை குட்டக் குட்டக் குனியும் பொறுமை இல்லை; எப்ப நிமிருவேன், எப்ப திரும்பி எப்படி அடித்தால் நல்லா வலிக்கும் என்று பொறுத்து அடிக்கிற‌ பொறுமை.

கடுமையான உடல் உழைப்பு, உறவினர்களால் ஏமாற்றப்படுவது, கல்விக்கு வாய்ப்பு அளிக்கப் படாதது, இவை தொன்று தொட்டு சாதி, பாலினம் சார்ந்து யாருக்கேனும் வலிந்து அளிக்கப்பட்டிருக்கின்றன‌. சாதி போலவே, (மேற்சொன்ன) பொறுமையாலும், அறிவாலும், வாய்ப்பை வலிந்து எடுத்துக் கொள்வதாலும் வாழ்வில் வெல்லலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

rajudog said...

yamuna ma'm, please elaborate on lack of sharing and lack of companionship between otherwise happily married couples. thank you.

^ சித் || sid ^ said...

@ கல்வெட்டு
பெண்களின் பாலியல் வரட்சி எப்படி பட்டது ?

கல்வெட்டு said...

//Blogger ^ சித் || sid ^ said...
பெண்களின் பாலியல் வரட்சி எப்படி பட்டது ?//

சித்,
பாலியல் வறட்சி என்பது இருபாலருக்கும்தான்.

பெண்ணின் அருகாமை அல்லது நட்பு அல்லது சின்ன தொடுதல் வந்துவிட்டாலே காதல்,கல்யாணம் என்று விரியும் கனவு சமூகம்.

இயல்பாக ஒரு சின்ன தொடுதல்,கை கோர்த்தல்கூட யாருக்கும் கிடைக்காது.

விலக்கியே வளர்க்கப்படுகிறார்கள்.

Raji said...

Yamuna enough....pothume...nothing is going to happen. Inge bayangarama film kaatine aangal ellam appadiyethaan irukka poraanga.
Its better if women like start helping the affected women than talking to these men. Waste of time. let them do whatever they want...aana onnu. Do you think only men are involved in all these? no...there are lot of women who want fellow women to suffer and its only an extension of male chauvanism. ....:)...pakkalaam evvalo thooram oodalaamnu.

கல்வெட்டு said...

//Yamuna enough....pothume...nothing is going to happen. Inge bayangarama film kaatine aangal ellam appadiyethaan irukka poraanga.
//


:-((((

"இங்கே பயங்கர ப்ளிம் காட்டின ஆண்கள் எல்லாம்..."என்றால்

இந்தப் பதிவின் பின்னூடத்திலா ராஜி?


அப்படி என்றால், எல்லாரும் என்று பொதுவாக குற்றச்சாட்டை வைக்காமல யார் ,யார் என்று சொல்லுங்கள். மேலும் எப்படி எதனால் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள் என்றும் சொல்லுங்கள்.

ஆண்,பெண் இணைந்து வாழ வேண்டிய சமூகத்தில் இது போன்று ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட் விடாமல் பெயர் சொல்லியே சொல்லலாம். இங்கேயே பேச முடியாவிட்டால் வேறு எங்கே போய் பேசுவது?

இங்கே என்று சுட்டும் உங்கள் வார்த்தையில் நானும் வருவதால் இந்தக் கோரிக்கை.

padmahari said...

நான் சொல்ல நினைத்த சில விஷயங்களையும், நான் புதிதாய் புரிந்துகொண்ட சில விஷயங்களையும் ரொம்ப அழகா சொல்லியிருக்காரு நண்பர் கல்வெட்டு. அவர் சுட்டிக்காட்டும் புரிதல்(6 கருத்துக்கள்), சில மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே இது போன்ற சமூக அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்படக்கூடும்.எதிர்பாலினப் புரிதல் இல்லாமல், ஒருவர் மீது மற்றொருவர் சேற்றை வாரி அடிப்பது எவ்விதத்திலும் பயனற்ற ஒன்று! மனமுதிர்ச்சி,ஆண்-பெண் இணைந்த ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் அப்படீங்கிற பொறுப்புணர்ச்சி இருக்குற எவனும் பதிவில் குறிப்பிட்ட அத்துமீறல்கள்ல ஈடுபடமாட்டான். இதையெல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காத ஒருத்தன் திருந்தவே போறதில்லை. அதேமாதிரி, சும்மா புலம்புறதில அர்த்தமே இல்ல.அதுக்கு பதிலா, கெக்கே பிக்குணி சொல்கிற மாதிரி
//பெண்ணுக்கு, அறிவும் பொறுமையும் என்ற ஆயுதங்கள், காந்தி சொன்ன பல்லையும் நகத்தையும் விட வலிமையானவை. என் சொந்த வாழ்க்கையில் உணர்ந்தது. நான் சொல்லும் பொறுமை குட்டக் குட்டக் குனியும் பொறுமை இல்லை; எப்ப நிமிருவேன், எப்ப திரும்பி எப்படி அடித்தால் நல்லா வலிக்கும் என்று பொறுத்து அடிக்கிற‌ பொறுமை.//
வாழ பெண்கள் முயற்ச்சிக்கிறதுல எந்த தவறும் இல்லையே?!
பகிர்வுக்கு நன்றி.
http://padmahari.wordpress.com
பத்மஹரி.

Raji said...

sorry kalvettu...if I had hurt your feelings. To be be very honest, I have seen some of the best men in my life..and ofcurse I have got some decent men also in my family. But where I am deeply pained is...All these "amazing and decent men" also go wrong when it comes to their personal relationships. There are two categories...one belongs to what Yamuna said and the other are perfect gentlemen...and you know what I prefer the former ...becos there interest to supress fellow women is explicitly shown...and so you know whether to oppose him or not. But these decent men are more dangerous...but I would like to add one thing to my comment..."how we women are treated has a lot to do on how courageous and self-sufficient we are. to be honest I am alone and not married and lived also in ?India like that...I did not meet one wrong man...r evn if I had met one..I dont think I would have given him confidence to beat me or touch me"...Thi....I think this is important for woman...summa thotta shock adikara maathiri irukkanum...appo ellorum olungaa irupaanga :)...I should confess there were only few souls who supported and gave their best when I was in need of encouragement...all of them are "men"...so sorry kalvettu If I had hurt you.

கல்வெட்டு said...

ராஜி,
//But where I am deeply pained is...All these "amazing and decent men" also go wrong when it comes to their personal relationships.
//

எந்த ஒரு உறவும் சிக்கல்கள் நிறைந்தது. personal relationships.
என்று சொல்வதை நான் திருமண ஒப்பந்தம் சார்ந்த உறவாக எடுத்துக் கொள்கிறேன். அது ஒரே உறையில் இருக்கும் இரண்டு கத்தி போன்றது. நிறைய‌ புரிதல்கள் வேண்டும். அனைவருக்கும் பொதுவான சர்வரோக நிவாரணி இல்லை.

ஆண் பெண் புரிதல்கள், அதிக சுதந்திர மனப்பான்மை உள்ள வளர்ந்த நாடுகளில் திருமண ஒப்பந்தம் முறிக்கப்படும். இந்தியாவில் அதைச்செய்யாமல் சகித்துக் கொள்வதால் அது பெரிய மனப்போராட்டமாக மாறிவிடுகிறது.

வளர்ந்த நாடுகளில் முன்னாள் கணவனுடனும் ,இன்னாள் கணவனுடனும், இருவருக்கும் பிறந்த குழந்தைகளுடனும் ஒரு பெண் Thanks Giving Day யைக் கொண்டாடலாம். இந்தியாவில் இது முடியுமா?

மனக்கசப்புடன் வாழும் போது , சமூகக் காரணங்களுக்காக பிரியவும் முடியாமல் இருக்கும்போது, இருதரப்பிலும் திருமண ஒப்பந்தம் மீறிய , திருமண ஒப்பந்தப்படி தவறான உறவுகள் வந்துவிடுகிறது.


***

நீங்கள் சொல்லும் அந்த இரண்டாம்வகை மனிதர்கள் குறித்த கருத்தை ஏற்கிறேன். பெண்ணுக்கு வரும் அதிகபட்ச பாலியல் தொந்தரவுகள் தெரிந்த,பழகிய உற‌வுகளில் இருந்து வருவதே இதற்கு சாட்சி.

**

கருத்துப் பகிர்விற்கு நன்றி!

**

karthi said...

@Raji...why do u hav to make generalised,carpet comments/statements. Wat do u mean by ""pakkalaam evvalo thooram oodalaamnu""....U want to agree and announce to the world that u are weaker section of the society..?? Why dont u stop, turn back and resist/fight the so called atrocities and chauvinistic acts..??

Joseph said...

படிக்கும் போது ஒரு சிறந்த மேடைப் பேச்சை கேட்பது போல் , எல்லாமே சரின்னு தோணுச்சு. கொஞ்ச நேரம் யோசிச்சா எல்லாக் குற்றங்களுமே ஆண்கள் மட்டுமே செய்வது போல சொல்லியிருக்கீங்கன்னு தோணுது.

ஆண்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் அல்ல. பெண்கள் அத்தனை பேரும் யோக்கியர்களும் அல்ல.
மிகக் கடுமையா குற்றம் சுமத்தியிருக்கீங்க. இப்ப உங்க முன்னாடி நின்னு பேசுறப்ப உங்க முகத்தையே பார்த்து பேசிக்கிட்டு இருக்கேன், திடீர்னு வேற எதுக்காகவோ நான் கீழ குனிஞ்சாலோ, அல்லது இந்த பக்கம் அந்த பக்கம் திரும்புனாலோ நீங்க உங்கள தப்பா பார்கிறதா தான் நினைச்சுக்குவீங்களோ?
ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றம் சொல்லியிருக்கும் இந்தப் பதிவ படிக்கிறப்ப, ஒன்னு நீங்க ஒரு நல்ல ஆம்பளைய கூட பார்க்காம போயிட்டீங்க, அல்லது பார்கிற எல்லாருமே உங்கள தப்பாதான் பார்கிறதா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு தோணுது.

பல பிரிவுகள்ல பெண்களுக்கு எதிரா நிகழும் வன்கொடுமைகள சொல்ல்யிருக்கீங்க. ஆனா ஏனுங்க எல்லா வரதட்சணை கொடுமை கேஸ்லயும் புகார் கணவண் மேலயும், மாமனார் மேலயும், கொழுந்தனார், மச்சினர் மேலயும் மட்டும் இல்லாம, மாமியார் நாத்தனார் மேல எல்லாம் வருது?

நீங்க சொல்றமாதிரி ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு காரணம்னா, மாமனார் கொடுமைன்னு தானே ஒரு சொற்பதம் உபயோகிக்கப்படனும், ஆனா இங்க மாமியார் கொடுமைன்னு தானே நாம கேள்விப்படுறோம்? அது ஏன்?

பாலியல் ரீதியா பல விசயங்கள் சொல்ல்யிருக்கீங்க. அது உண்மை தான். அதுக்கு முக்கிய காரணம், இங்க நம்ம நாட்டுல போதுமான பாலியல் அறிவு இல்லாம இருக்கது தான். தாம்பத்ய வாழ்க்கையே குழந்தைங்க பெத்துக்க மட்டும்தான் அப்டின்னு நினைச்சுக்கிட்டு இருக்க தம்பதியர்கள் பலர் இருக்காங்க. அதுக்கு காரணம் கூட ஆண்கள் தானா? அட, எல்லா ஆண்களுக்குமே இந்த விசயத்துல அறிவு இல்லங்கும் போது, அவங்கள குறை சொல்லி என்ன செய்ய முடியும்?
ஒட்டுமொத்தமா எதிர்மறையா மட்டுமே யோசிச்சு எழுதியிருக்கீங்க. நிறைய நல்லவை உங்க கண் முன் இருக்கு. அதையும் அப்ப அப்ப பாருங்க. கெட்டத மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா நல்லது எப்டியிருக்கும்னு கூட மறந்துரும்.

gm said...

1.மனைவி:குவைத்தில் வேலை. விடுமுறையில் சென்றிருந்தேன்.
"ஏம்ப்பா டெய்லி டிபனுக்கு இட்லியே செய்யச் சொல்ற. போரடிக்கல..?" மனைவி கேட்டாள்.
"போரடிக்குது தான். பட், வேற ஐட்டம் கேட்டாலும் செய்யப் போறது யார் நீதான...? உனக்கு சிரமம் வேணாம்னுதாம்ப்பா..."
"ஏய்... உனக்கு செய்யாம யாருக்கு செய்வேன். நாளைலேர்ந்து தினம் ஒரு டிபன்..." கிட்னியில் டி.பி அட்டாக் ஆகி, குணமாகி வருபவள். எடை 44 கிலோ. குறைந்தது 60 கிலோ எடை கூடினால்தான் நல்லது என்பது டாக்டரின் அட்வைஸ். பட், இரண்டு வருடங்களில் 2 கிலோ மட்டுமே கூடியிருக்கிறாள்.
தினம் ஒரு டிபன் அவள் சந்தோஷமாகத்தான் செய்தாள்.
ஆனால் "போரடிக்கலப்பா..." என்று ஏன் சொல்லாமல் போனேன் என்று எனக்கு உறுத்தியது.

2. அம்மா: என் சிறுவயது நினைவு சம்பவங்களில் 90% அவள் அழுத காட்சிகள்தான். வேலி தாண்டிய அப்பாவை எதிர்த்து வீட்டின் ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலை வரை உருட்டி உருட்டி அடிக்கப் பட்டிருக்கிறாள். மாதம் ஒரு தொகை தன் கையில் தரப்பட்டு குடும்பச் செலவை தான் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதற்காக போராடியிருக்கிறாள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாற வேண்டுமென்று முயன்றிருக்கிறாள். அதற்கென பத்திரப் படுத்திய தன் நகைகளை விற்க விடாமல் முயன்று அப்பாவின் மூர்க்கத்திற்க்கு முன்னால் பலமுறை தோற்றிருக்கிறாள்.

இன்னும் இந்தப் பதிவில் சொல்லப் படாத நிறைய கொடுமைகளை அனுபவித்திருக்கிறாள்.

"புள்ளைங்க தலையெடுத்தா எல்லாம் சரியாயிரும்கிற நம்பிக்கைல தான் அத்தனை ஆட்டத்துக்கும் பொறுமையா இருந்தேன்..." என்பாள்.

3. யமுனா ராகவன்: நான் என்று நீங்கள் ஒருமை படுத்திக்கொண்ட நீங்கள் என்கிற உங்களிடம் ஒரு கேள்வி....

உங்கள் குழந்தைகளை, குறிப்பாக ஆண் குழந்தைகளை நீங்கள் எவ்விதம் வளர்க்கிறீர்கள்?

விருதா said...

உங்களின் ஏதாவது ஒரு வரியிலேனும் ஒரு ஆண் கண்டிப்பாய் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான். இப்போது நான் செய்யும் சில தவறுகளிலும், இதில் அதற்குண்டான வரிகள் வந்து முட்டி தடுக்கிறது. அருமையான எழுத்துக்கள்.
சுதந்திரம் என்று சொல்லி தவறு செய்வதில் இங்கே பெண்களும் சளைத்தவர்கள் அல்ல.

lkc said...

தோழரே, நீங்கள் தலைப்பிட்ட விதம் கர்வத்தை வெளிப்படுத்துவது போல் உணருகிறேன்....
முதலில் உங்களுடைய தொடர்கதைக்குத் தான் பின்னோட்டம் பதிவு செய்யலாம் என்று இருந்தேன்!
ஆனால் இந்த பதிவின் பின்னூட்டத்தை முழுவதையும் படித்த பிறகு, இப்பதிவிற்கான என் பின்னோட்டம்!

lkc said...

நான் உங்கள் பதிவிற்கு குறை கூறுவது போல் உணர்ந்தாலோ, அல்லது என் பின்னூட்டத்தில் என் புரிதல் தவறுதலாக இருந்தாலோ தயவு செய்து சுட்டிக் காட்டவும். THIS IS MY HUMBLE REQUEST TO ONE AND ALL!

நீங்க சொல்ல வந்த சொல்லப்பட்ட விதம், எல்லாம் மிக மிக அருமை.....

ஆனால் நீங்கள் தலைப்பிட்ட விதம் என்னை போன்றவர்களுக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது...
நீங்கள் சமுக பார்வையோடு எழுதி இருக்கீங்க...மிக்க மகிழ்ச்சி...ஆனால் நீங்கள் தலைப்பிட்டு இருக்கும் சொல் "மதிப்பிற்குரிய ஆண்களே" அப்படினா? ...

lkc said...

நான் பல வேலைகளில் யோசித்தது உண்டு, என்ன தான் செய்யவேண்டும் நான், மனம் புழுங்கி, வருந்தி சொல்லவரும் விஷயங்கள் உங்கள் காதில் விழ, அங்கீகரிக்கப்பட, மாற்றம் வரும்படியான மனநிலை உருவாக என்று. இதுவரை பிடிப்படவில்லை, இனியாவது பிடிபடுமா எனவும் தெரியாது எனக்கு. ///
எனக்கும் தான்! மனிதனாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்யும் அனைவருக்கும் வரும் சராசரி உணர்வே!

lkc said...

பிறப்புறுப்பை பற்றி பேசுவது ஆகியவைதான் பெண்ணியம் என்று நீங்கள் நினைத்திருப்பீரெனில் மேற்கொண்டு படிக்கவும்.///
இந்த இடத்தில ஒரு ஆணின் தன்மை தெரிகிறது...

உங்கள் தாயாரிடம் இருக்கும் மார்பகமோ, உங்கள் தங்கைகளின் இடுப்போ, உங்கள் அக்காக்களின் தொடையோ, உங்கள் அத்தையின் பிட்டமோ, உங்கள் சித்தியின் உதடோ, உங்களுக்கு உடல் பசியை தூண்டி விட்டிருக்கிறதா, அல்லது உங்கள் உறுப்புகளுக்கு இரத்தவோட்டம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கிறதா, அல்லது நீங்கள் உங்கள் இருட்டுகளின் தனிமையில் மேலே சொன்ன எதையாவது யோசித்துக்கொண்டே சுய இன்பம் அடைந்திருக்கிறீர்களா?... ///
பச்சை வாடை அடிக்கின்றது , இன்னும் சிறிது முயற்சி எடுத்து நாகரிகமாக சொல்லி இருக்கலாம்!

lkc said...

சரி விடுங்க. விஷயத்திற்கு திரும்ப வருவோம். உங்களில் எத்தனை பேருக்கு Domestic violence definition மற்றும் அதன் வகைகள் தெரியும். உங்களின் அலுவலின் மத்தியில் இதை பற்றி தெரிந்திருந்தால் சந்தோஷம், ஒன்றும் செய்யாது போனாலும், அதாவது தெரிந்திருக்கிறதே என்று. தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். Domestic violence ஏகப்பட்ட கிளைகளின் கீழே இருப்பினும், நடப்பிற்காக 5 முக்கிய வகையாக்கி இருக்கிறார்கள். Physical and sexual abuse, Emotional or Psychological abuse, Verbal abuse, Financial abuse, Neglect இது தான் அவை என்கிறார்கள்.///
இப்படி அழகாக சமுதாய காரணிகளை வகை பிரித்து விளக்கம் தந்து இருப்பவை மிக மிக அருமை!

இப்போது புதிதாக கேட்க தொடங்கி இருக்கும் வார்த்தை ALPHA FEMALE... குடும்ப தலைவன் Alpha male என்ற நிலை மாறிப்போய் கொண்டே இருக்கிறது.///
ரொம்ப சரியான வாதம்! சரி இதற்கும் ஆண்கள் மட்டுமே காரணிகளாக இருக்க முடியாது!

lkc said...

எப்படி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் என் சுதந்திரத்தை முழுக்க எடுத்துக்கொண்டு, உங்களால் கட்டப்பட்ட எல்லைக்குள், சுற்றி வரும் தூரம் மட்டும் நடக்க தோதாய் கழுத்தில் கயிறும் கட்டி, ``என் மனைவிக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு`` என்று வாய் கூசாது சொல்கிறீர். உங்களின் ``எல்லாவிதத்திற்கு`` எது எல்லை கோடு. ///
இந்த கட்டமைப்புக்கு ஆண்கள் மட்டுமே காரணிகளாக இருக்க முடியாது! உங்களுடைய பதிவே இதற்கு பொருத்தமாக இருக்கும்..
(எப்போது இருந்து மாறியது இந்த நிலை. 500 BCக்கு மேலே, ஆரியர்களும், இஸ்லாமியர்களும் வந்ததால் குடைசாய தொடங்கியதாம் பெண்களுக்கான மரியாதை.)

lkc said...

நான் உங்களிடம் இவற்றை எல்லாம் பற்றி சொல்லியது, தனித்து இயங்க இல்லை.///
FANTASTIC...SUPERB....
என் உலகம் இயல்பாய் நடக்க நீங்கள் வேண்டும். பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்றுஎனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும். ///
இது போல் அழகாக ஏதார்த்ததை பதிவு செய்த நீங்கள் , மானுடத்தை பற்றி அறிவியல் பூர்வமாக , சமுதாயத்தின் வலராறு பின்னணிகளை தொகுத்த நீங்கள்? நோக்கம் சரியாக இருந்தும் , இது போன்ற தலைப்பும் சில பச்சை வரிகளும் உங்கள் நோக்கத்தை சிதைப்பது போல் உணர்கின்றேன்...

பிழை இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி
வணக்கம்
தோழர் லீலா

mani said...

Dear yamuna,


Just want to share with you below content. Hope it will bring you peace & joy in your family.

topic:
-------

i want to help you rather critic your post and this topic is a outlet for your emotional problems,so it is not right to comment now.


-Mani

"In many ways, every relationship is a mirror. How I feel towards the other person and what I see in them is often an indicator of how I see and feel towards myself. My relationships reflect back to me those areas where I am not loving myself enough. If I allow someone to treat me a particular way, it is only because part of me is already treating myself that way. Otherwise, why would I accept it from them?"

from - http://www.loveheals.com.my/welcome.php#

anandhi said...

migavum arumayana argument. pala nerangalil unmai endru sathamida thondrukirathu. sila idangalil migai padutha pattadhai thondrukiradhu. varthaigalil vanmurayai konjam kuraithirukkalam.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒட்டு மொத்த ஆண்களையும் இந்தக்கட்டுரை சாடுவதாக நான் கருதவில்லை.

நல்ல வாதத்திறமையுடன் கூடிய நல்ல மொழிநடையில் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை. தொடர்ந்து பெண்கள் சீற்றத்தோடும், இதுகுறித்த தயக்கமில்லாத உரையாடலோடும் இருத்தலே எதிர்காலத்திலாவது நன்மை வந்தெய்த உதவும்.

சில வரிகளில் என் நடவடிக்கைகள் எப்படியானது என்றெண்ணும் போது வெட்க நேர்ந்தது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

தனி காட்டு ராஜா said...

கல்வெட்டு சொன்ன 6 கருத்துகளுடன் உடன் படுகிறேன் .....

Chittoor.S.Murugesan said...

ஆண்மை நிரம்பிய எழுத்துக்கள். ஹிப்பாக்ரசி இல்லாத செருப்பால் அடிக்கும் வார்த்தைகள். உண்மையில் இந்த பதிவு எனக்கோர் இனிய அதிர்ச்சி

கபிலன் said...

என்ன சொல்றதுன்னே தெரியல...!

புன்னகை தேசம். said...

நல்ல கட்டுரை..

பெண்கள் துணிவாக இருக்கவேண்டும்..

அடி வாங்கிக்கொண்டிருக்க கூடாது..

ஆனால் எல்லா ஆண்களும் மோசமில்லை..

ஆணுக்கு முன்னால் முந்தியை வேணுமென்றே சரி செய்யும் பெண்ணை என்ன சொல்ல?..

ஆபாச கவிதை , அந்தரங்கத்தை கவிதை, பேஸ் புக்கில் அந்தரங்க புகைப்படங்கள் என வலிய தன்னை போகப்பொருளாய் காண்பிக்கும் பெண்கள்?....


சில சமயம் ஆண்கள் பாவம்.. பல அப்பாவி பெண்களும் பாவம்..

புன்னகை தேசம். said...

நல்ல ஆண்கள் , கெட்ட பெண்களும் கலந்தே இருக்கிறார்கள்..

என்ன , நீங்க சொல்லும் ஆண் சதவீதம் அதிகம்..


பெண் நினைத்தால் துணியலாம்.. உத்வும் நல்ல மனப்பான்மை உள்ள ஆண் நிறைய இருக்கின்றனர்..

பெண்ணுக்கு துணிவுதான் முதல் சொத்து..

புன்னகை தேசம். said...

நல்ல கட்டுரை..

பெண்கள் துணிவாக இருக்கவேண்டும்..

அடி வாங்கிக்கொண்டிருக்க கூடாது..

ஆனால் எல்லா ஆண்களும் மோசமில்லை..

ஆணுக்கு முன்னால் முந்தியை வேணுமென்றே சரி செய்யும் பெண்ணை என்ன சொல்ல?..

ஆபாச கவிதை , அந்தரங்கத்தை கவிதை, பேஸ் புக்கில் அந்தரங்க புகைப்படங்கள் என வலிய தன்னை போகப்பொருளாய் காண்பிக்கும் பெண்கள்?....


சில சமயம் ஆண்கள் பாவம்.. பல அப்பாவி பெண்களும் பாவம்..

விக்னேஷ்வரி said...

சிறப்பான கட்டுரை. முகத்திலறையும் உண்மைகள். தேர்ந்த எழுத்து. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள் ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தும்.

? said...

நல்ல கட்டுரை. போலி பெண்ணீயம் பேசுபவர்களுக்கு மத்தியில் சமுதாய நோக்கில் ஒரு பெண்ணின் பாத்திரத்தை யதார்த்தபூர்வமாக எப்படி ஆணாதிக்கவாதிகள் அல்லது ஸோ கால்டு ஜனநாயகவாதிகள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அப்பாத்திரத்தின் வழியே பாத்திரமாகவே மாறி பேசி உள்ளீர்கள். இன்னும் கடுமையாக பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். கெட்டி தட்டிப் போன சமூகத்தில் எறியப்படும் கற்கள் கூர்மையாக இருந்தால்தான் குறைந்த பட்ச நியாயமாவது கிடைக்கும். உங்களுக்கு என்றும் என் ஆதரவு உண்டு. பேசுவதோடு நில்லாமல் மற்ற பெண்களையும் நிஜத்திலும் பேச வையுங்கள்.

வாழ்த்துக்களுடன்
?
(மக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஆதரவாளர்களில் ஒருவர்)

Jey said...

/// உங்கள் தாயாரிடம் இருக்கும் மார்பகமோ, உங்கள் தங்கைகளின் இடுப்போ, உங்கள் அக்காக்களின் தொடையோ, உங்கள் அத்தையின் பிட்டமோ, உங்கள் சித்தியின் உதடோ, உங்களுக்கு உடல் பசியை தூண்டி விட்டிருக்கிறதா, அல்லது உங்கள் உறுப்புகளுக்கு இரத்தவோட்டம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கிறதா, அல்லது நீங்கள் உங்கள் இருட்டுகளின் தனிமையில் மேலே சொன்ன எதையாவது யோசித்துக்கொண்டே சுய இன்பம் அடைந்திருக்கிறீர்களா?...///

உங்கள் வீட்டில், உங்களின் சகோதரர்களும், உங்களின் தந்தையும் உங்களை இது மாதிரிதான் பார்க்கிரார்களா?..., உங்களின் எழுத்துக்கள் , செயற்கையான, ஒரு மேடைப் பேச்சாலரின் “டெம்ப்ளேட்” போல் இருக்கிறது. சில கலிசடைகளின் மத்தியில் நிங்கள் வாழ்ந்து வந்தால், அவர்களை செருப்பல் அடியுங்கள், ஒட்டொ மொத்த ஆண்களையும் குற்றம் சுமத்தாதீர்கள். உங்களுக்கு மகன் இருந்து அவன் உங்களை பார்க்கும் பார்வையிலும் வேரு அர்த்தைதான் பார்ப்பீர்களா?. எனென்றால் இங்கு நீங்கள் ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றம் சுமத்தியிருப்பதாகவே எனக்குப் படுகிறது. அதில் நானும் அடக்கம் என்பதால், நான் அவ்வாறான ஈனப்பிறவி இல்லை, என்பதால் இங்கு என் எதிவினையை இடுவதற்கு எனக்கு இருக்கும் இரிமையில் இந்த பின்னூட்டமிடிகிறேன். தனிப்பட்ட முறையில் உங்களின் மனத புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில அல்ல.

Selvamani said...

இதில இருக்குற விஷயங்கள் எல்லாம் பொய் இல்ல தான். இதுல என்ன ஒரு விஷயம்ன இது பண்றது முக்கால்வாசி படிச்ச, நல்ல வேலைல இருக்குற ஆண்கள் தான். ஆனா உலகத்தில நல்ல ஆண்களே இல்லையானு கேட்டா?, கண்டிப்பா இருக்கோம். என்ன கண்டுபிடிகுறது கொஞ்சம் கஷ்டம்.

பிரபாஷ்கரன் said...

நல்ல எழுத்துக்கள் நியாயமான கோபங்கள் வரவேற்கிறேன் சுய அலசல் செய்து பார்த்துக்கொள்ள உங்கள் எழுத்து உதவியது மீண்டும் வருவேன்

Anonymous said...

சோம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போல....lol

meenakshisundaram said...

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சமயம்கிடைக்கும்போது அடக்கி ஆண்டும் மேலும் குடும்பம் நடத்தி கொண்டும் இருக்கிரார்கள் என்பதே உண்மை ...

S said...

திறமையாக எழுதப்பட்ட ஒருதலைப் பட்சமான கருத்துக்கள். இருபுறமும் தவறானவர்கள் இருப்பதே உண்மை. அனைத்தையும் பெண்களிடம் ஒப்படைத்து விட்டு அடங்கிப் போகும் ஆண்கள் ஏராளம். பழங்காலத்தைக் குறை கூறி ஆணாதிக்கம் தொடர்வதாக புலம்புவது பெரும்பாலும் பாலியல் ரீதியான அடிப்படையில்தான். இன்றைய பெண்கள் அழகுப்பொருளாக தங்களையே சித்தரித்துக் கொண்டு ஆண்களை எக்ஸ்பிளாய்ட் செய்ய முயலலாம். ஆனால் ஆண்கள் மட்டும் ஜென்டில்மென்னாக இருக்க வேண்டும்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com